என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே'.
    • இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். 





    மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.




    'புராஜெக்ட் கே' படத்தின் தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனான பிரபாஸின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டர் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.


    இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 21ம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

     


    • நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், 'லியோ' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற செப்டம்பர் மாதம் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் டி.வி. நடிகர் ஆவார்.
    • இவர் தற்போது பல தொடர்களில் நடித்து வருகிறார்.

    டி.வி. நடிகர் ஈஸ்வர் ரகுநாதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரபல பாடகர் கிருஷ்ணா பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் கூறி யிருப்பதாவது:- நேற்று முன்தினம் நான் இசை நிகழ்ச்சிக்காக தனியார் ஓட்டலுக்கு சென்றிருந்தேன். அங்கு சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன், சக நடிகர்களுடன் இருந்தார். என்னை பார்த்ததும் என்னிடம் வந்து உட னடியாக அங்கிருந்து கிளம்பிவிடுமாறு மிரட்ட தொடங்கினார்.

    காரணம் கேட்ட போது ஏதும் கூறாமல் உன்னை கொல்வதற்கு 10 பேரை தயார் செய்துள்ளேன். மேலும் தன் அருகில் அமர்ந்திருந்த நண்பர்களை காட்டி இங்கிருந்து நீ கிளம்பாவிட்டால் இவர்கள் உன்னை உடனே அடித்து கொன்றுவிடுவார்கள் என்று மிரட்டினார். மேலும் உன் நாட்களை எண்ணிக் கொள் என்று மிரட்டியதுடன் நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.


    பாடகர் கிருஷ்ணா

    எனக்கும் அவருக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை. அவருடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிர் பயம் கொடுக்கும் அளவிற்கு என்னை மிரட்டியதற்கான காரணமும் தெரியவில்லை. ஆதலால் தாங்கள் தயவு செய்து அவரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    நான் கூறியது அனைத்தும் அங்குள்ள கேமராவில் பதிவாகி இருக்கும். மேலும் என் முதிர்ந்த தாயாருடன் தனியாக வசித்து வருவதால், ஈஸ்வரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'.
    • இப்படம் வெளியாகி ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

    'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14 தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.




    இந்நிலையில் மாவீரன் படத்திற்காக சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார். அதில், "மாவீரன் படம் பார்த்து முழுமையாக ரசித்தேன். சிவகார்த்திகேயன் பிரதர், ஒரு நிதானமான கதாபாத்திரத்தில் உங்களின் நடிப்பு அற்புதமாக இருந்தது. யோகிபாபு, விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.



    • இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'.
    • இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகிறது.

    புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.



    இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.




    நேற்று 'டைனோசர்ஸ்' படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிமுகம் செய்தது. இந்நிலையில் புதிய கதாப்பாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இப்படத்தில் துரையாக மாறா நடித்துள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


     'டைனோசர்ஸ்' திரைப்படம் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் சந்தானம் தற்போது 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசியதாவது, நல்ல கதை இருக்கு எனக்கான இடம் இருக்கிறது என்றால் படம் நடிப்பேன். தற்போது சினிமா மாறிவிட்டது. முன்னாடி காமெடி டிராக் என்று தனியா இருக்கும் பின்னர் காமெடியனும் ஹீரோவும் இணைந்து நடித்தனர், தற்போது மல்டி ஸ்டார் படம் என்பது ட்ரெண்டாகிவிட்டது. யாராக எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கதைக்கு தான் நாயகன். கதை சரியாக அமைந்தால் அவர்கள் வெற்றி பெறலாம். ராஜேஷ் சரியான கதை அமைத்து அது இருவருக்கும் சரியாக இருந்தால் அது நிச்சயமாக வெற்றியடையும். இந்த படத்தில் சிரிப்பதற்கு தேவையான அனைத்து காமெடிகளும் இருக்கும் என்று பேசினார்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியானது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். அங்கு மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "வாய்ப்பு கிடைக்கும் போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன். 'லியோ திரைப்படம் எல்.சி.யூ (LCU)-வா என்று தெரிவதற்கு மூன்று மாதங்கள் உள்ளது. அதை இப்போதே சொல்லிவிட்டால் பின்னர் சொல்லுவதற்கு எதுவும் இருக்காது. 'லியோ' திரைப்படம் கைதி மாதிரியான திரைப்படம்" என்று கூறினார். மேலும், மாணவர்கள் உங்கள் படத்தில் கதாநாயகிகள் இறந்துவிடுவார்கள் திரிஷாவிற்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு லோகேஷ் எதுவும் ஆகாது என்று பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை விந்தியா அ.தி.மு.க.வில் கொள்கை பரப்பு துணை செயலாளராக உள்ளார்.
    • விந்தியாவின் சார்பில் அ.தி.மு.க. சட்ட ஆலோசகரும், வக்கீலுமான இன்பதுரை தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

    அ.தி.மு.க.வில் கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் பேச்சாளராகவும் இருப்பவர் நடிகை விந்தியா. இவரைப்பற்றி தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும் பேச்சாளருமான குடியாத்தம் குமரன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விந்தியாவின் சார்பில் அ.தி.மு.க. சட்ட ஆலோசகரும், வக்கீலுமான இன்பதுரை தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

    அதில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் குடியாத்தம் குமரன் பேசியிருந்த வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது. இது பற்றி மகளிர் ஆணையம் ஆய்வு செய்தது. பின்னர் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை போலீசுக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.


    குடியாத்தம் குமரன்- விந்தியா

    இதைதொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தி.மு.க. பேச்சாளரான குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து குடியாத்தம் குமரனை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குடியாத்தம் குமரன் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்து வருகிறார். தி.மு.க. பேச்சாளரான அவர் தனது ஊர் பெயருடனேயே பேச்சாளராக மேடைகளில் பேசி வருகிறார்.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குஷ்பு பற்றி அவதூறாக பேசியதாக தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
    • இப்படத்தை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.


    இதையடுத்து, 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' பாடல் இன்று (ஜூலை 19) காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்குகிறார்.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


    சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளாராம். அவர் படத்தின் கதையை விவரிப்பது போன்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு நடிகர் கமலும், மாவீரன் திரைப்படத்திற்கு விஜய் சேதுபதியும் குரல் கொடுத்ததைத்தொடர்ந்து தற்போது இந்த ட்ரெண்டில் கார்த்தியும் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
    • இவர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார்.

    நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன், ரஜினியின் பாபா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். மனிஷா கொய்ராலா 2010-ஆம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார்.


    இந்நிலையில் தனக்கு இருந்த மதுப்பழக்கம் குறித்து மனிஷா கொய்ராலா பேசியுள்ளார். அவர் "நான் விவாகரத்து பெற்றதும் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன். அதன் பிறகு வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. மதுப்பழக்கம் காரணமாக எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன். மது அருந்துவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது. மது எந்த பிரச்சினையில் இருந்தும் நம்மை வெளியேற்றாது. மேலும் பிரச்சினைகளில் மூழ்கடிக்கவே செய்யும். இதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்'' என்று பேசினார்.

    • இயக்குனர் ராதா மோகன் தற்போது வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த வெப்தொடரின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொம்மை' திரைப்படத்தை இயக்கிய ராதா மோகன் தற்போது "சட்னி சாம்பார்" என்ற வெப் தொடரை இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப்தொடரில் யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் வாணிபோஜன், 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர். சுந்தர்ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    "சட்னி சாம்பார்" வெப்தொடருக்கு பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் பணியாற்றிய எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த வெப் தொடருக்கு வசனங்களை எழுதியுள்ளார்.


    "சட்னி சாம்பார்" வெப்தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சில் இயக்குனர் ராதாமோகன் பேசியதாவது, "சட்னி - சாம்பார்" வெப்தொடரின் படப்பிடிப்பை,  அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள் என்றார்.

    மேலும், நடிகர் யோகிபாபு பேசியதாவது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக "சட்னி சாம்பார்" இருக்கும் என்றார்.

    ×