என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தெறி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தெறி'. இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.


    தெறி

    இதையடுத்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 'கீ' படத்தை இயக்கிய இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் அட்லீ தயாரிக்கும் இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை போலீசார் கடந்த 10-ந்தேதி கைது செய்து ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கனல் கண்ணன் மீண்டும் ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.

    அதில், போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோவும் அதன் பின்னணியில் தமிழ் சினிமா திரைப்பட பாடல் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதை பார்த்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் விசாரணைக்கு வந்த கனல் கண்ணனை போலீசார் கடந்த 10-ந்தேதி கைது செய்து ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கனல் கண்ணன் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


    இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் ஜே.எம்.கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி தாயுமானவர் 3 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து நேற்று பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்த கனல் கண்ணனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவில் அழைத்து வந்தனர். நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கனல் கண்ணன் மீண்டும் ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    அப்போது அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தாயுமானவர் கனல் கண்ணனுக்கு 30 நாள் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். தினமும் காலை, மாலை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து கனல் கண்ணன் இன்று நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் காலை ஆஜரானார். அங்கே அவர் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டார். அவருடன் பா.ஜ.க. இந்து முன்னணி நிர்வாகிகளும் வந்திருந்தனர். பின்னர் கனல் கண்ணன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடல் சமீபத்தில் வெளியானது.


    இந்நிலையில், இந்த பாடல் தற்போது யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா.
    • இந்த திரைப்படத்தை சிவா இயக்குகிறார்.

    நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    கங்குவா போஸ்டர்

    இதையடுத்து, "கங்குவா" படத்தின் புதிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளான 23-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.




    • நடிகர் ஜெயம் ரவி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் நடிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, அகிலன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இறைவன், ஜெஆர்30 , ஜெ.ஆர்.31 மற்றும் சைரன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    இதையடுத்து ஜெயம் ரவி கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது, கலைஞர் நம்மோடு இல்லை என்றாலும் அவரது கருத்துகள் நம்முடன் இருக்கிறது என்பதுதான் மிகவும் சந்தோஷமான விஷயம். என்னை அனைவரும் கேட்டார்கள் கட்சி சார்பாக வந்திருக்கிறீர்களா? என்று ஆனால் நான் கலை சார்பாக வந்திருக்கிறேன். ஆனால், கட்சி சார்பாகவும் வந்திருக்கிறேன் சினிமா என்ற கட்சி சார்பாக. ஏனென்றால் கருணாநிதியும் முதல் கட்சி சினிமா கட்சிதான் நம் கட்சியும் அந்த கட்சிதான்.

    கருணாநிதியை நான் நேரில் பார்த்திருக்கிறேன் என்பதே எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். அதுமட்டுமல்லாமல், கருணாநிதியின் கையால் கலைமாமணி விருது வாங்கியது என்னால் மறக்க முடியாது. அதைவிட ஒரு பெரிய வாழ்த்து எந்த கலைஞனுக்கும் கிடைக்காது. கலைஞரின் 100 ஆண்டு என்பது அடுத்த 100-வது ஆண்டுக்கு முதல் படி.


    தன் எழுத்தில் தலைவர்களை உருவாக்குவது கருணாநிதி மட்டும்தான். அந்த உயிரோட்டம் எந்த எழுத்தாளரிடமும் நாம் பார்க்க முடியாது. கலைஞரின் வசனங்கள் பேசி பலர் வாய்ப்பு தேடி அலைகிறார்கள். என்னால் நடிக்க முடியும் என்பதற்கு அளவு அவரின் வசனம் தான். 'பராசக்தி' திரைப்படத்தின் வசனத்தை பேசி நடிக்க வேண்டும் என்பது தான் எல்லாருடைய ஆசையும், அதை பேசி நடித்துவிட்டால், அதில் குறைந்தபட்ச அளவு வந்துவிட்டால் அவர் பெரிய நடிகர்.

    'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பழைமையான தமிழ் பேசி நடிக்க வேண்டியது இருந்தது. அப்போது கலைஞரின் வசனங்களை படித்து அந்த உச்சரிப்பை கற்றுக் கொண்டு தான் பேசினேன். கருணாநிதியின் சினிமா வழிக்காட்டுதலில் நாங்கள் பல பேர் வந்துவிட்டோம். கருணாநிதியால் மிகச்சிறந்த நடிகர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று பேசினார்.

    • டோனி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எல்.ஜி.எம்’.
    • இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.


    காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர். 'எல்.ஜி.எம்' படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    எல்.ஜி.எம். போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'எல்.ஜி.எம்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.




    • நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
    • இப்படம் தொடர்ந்து மக்களை கவர்ந்து வருகிறது.

    'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

    இந்நிலையில், இப்படம் பார்த்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது:-

    மடோன் அஸ்வின் படைப்பில் வெளிவந்துள்ள 'மாவீரன்' திரைப்படத்தை பார்த்தேன். மிகவும் வித்தியாசமான கதை அமைப்பு. கதையை சொல்லியிருக்கும் முறை பாராட்டிற்குரியது. அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கக்கூடிய வகையில் இந்த திரைக்கதை மிகவும் சிறப்பாக பின்னப்பட்டிருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் வாழக்கூடிய மக்கள் குறிப்பாக கூவம் நதிக்கரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள். சென்னையில் இருந்து அப்புறப்படுத்துகிற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னையின் மையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு புறநகர் பகுதியில் குடியேற்றப்பட்டு வருகிறார்கள்.


    காலம் காலமாக குடியிருந்து வரும் பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்படும் போது புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஒரு நிலை ஏற்படும் போது அந்த மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை சித்தரிக்கிற திரைப்படமாக மாவீரன் விளங்குகிறது. சென்னையில் பல இடங்களில் கூவம் நதிக்கரையில் வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று அரசு சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் பல அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தருகிறது. அவ்வாறு மாற்றுக் குடியிருப்புகளை உருவாக்கி தருகிற நிலையில் அதன் தரம் என்னவாக இருக்கிறது.

    அதில் அரசியல் எந்த அளவிற்கு தலையீடு செய்கிறது. அதனால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை திரைப்படத்தின் கருப்பொருளாக எடுத்துக் கொண்டு இயக்குனர் தன்னுடைய கற்பனை திறனை மூலதனமாக வைத்து மிகச்சிறப்பாக கதையை தொடக்கத்திலிருந்து கடைசி வரையில் விறுவிறுப்பாக சொல்லி வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு புகழ் பெற்ற திரைநட்சத்திரம் சரிதா இந்த படத்தில் நடித்துள்ளது இந்த படத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.


    சென்னையில் பல்வேறு இடங்களில் வீடுகள் அப்புறப்படுத்தும் போது அந்த மக்கள் கதறி அழும்போது நேரில் சென்று அந்த மக்களை ஆற்றுப்படுத்தியுள்ளேன் என்கிற முறையில் இந்த படத்தை பார்க்கிற போது நான் நேரடியாக அந்த களத்தில் நிற்பதை போன்ற உணர்வை பெற்றேன். சில இடங்களில் அந்த மக்களின் துயரத்தை எண்ணி கண்கலங்க நேர்ந்தது. காட்சிகள் அந்த அளவிற்கு உயிரோட்டமாக அமைந்தது.

    பொதுவாக படத்தின் கதாநாயகர்கள் பெரிய ஆளுமை மிக்கவர்களாக காட்டப்படுகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகனை பயந்த சுபாவம் உள்ளவராக தொடக்கத்தில் இருந்து சித்தரிக்கிற இயக்குனர் ஒரு அசரீரி குரல் மூலம் கதாநாயகனை இயக்கும் காட்சி ஒவ்வொரு கட்டத்திலும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. கிளைமேக்ஸ் காட்சியில் வில்லன் மிஷ்கினை பார்த்து கதாநாயகன் கேள்வி எழுப்பிம் காட்சி என்பது மக்களின் குரலை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அந்த காட்சி திரைப்படத்தின் குரலாக இல்லாமல் ஒட்டுமொத்த ஏழை, எளிய மக்களின் விளிம்பு நிலை மக்களின் அவல குரலாக உள்ளது. அசரீரி குரல் மூலம் கதாநாயகன் இயக்கும் காட்சி என்பது ஒரு வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறது என்று கூறினார்.

    • இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மரியான்'.
    • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமத்திருந்தார்.

    இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மரியான்'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பார்வதி நடித்திருந்தார். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.


    மீனவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தனுஷ் தனது சிறந்த நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதில், 'நேற்று அவள் இருந்தால்', 'கொம்பன் சூறா', 'சோனா பரியா' போன்ற பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.


    இந்நிலையில், 'மரியான்' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஏ.ஆர்.ரகுமான், தனுஷ், பார்வதி, பரத்பாலா ஆகியோர் சமூக வலைதளத்தில் லைவ் செய்து மகிழ்ந்தனர். இந்த லைவ்விற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கொண்டாடினர்.

    இந்த லைவ் வீடியோவிற்கு முன்பு மரியான் புகைப்படத்தை பகிர்ந்து இன்று லைவ் போலாமா நமது சிந்தனனைகளை பகிர்ந்துகொள்ள என ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


    • தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.



    தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை படக்குழு தனுஷில் பிறந்தநாள் பரிசாக ஜூலை 27ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 



    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், "கங்குவா" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தி கிங் அரைவ்ஸ் (The king Arrives) என்று குறிப்பிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • நடிகர் பரத் தற்போது ‘லவ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார்.




    திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரைக்கு வரவுள்து. இப்படம் பரத்தின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லவ் படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்று அளித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.




    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்தது.




    இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடல் வெளியானது. இப்பாடலை பாடலாசிரியர் சூப்பர் சுப்பு எழுதியிருந்தார். இந்நிலையில் இந்த பாடலுக்காக பாடலாசிரியர் சூப்பர் சுப்புவை ரஜினிகாந்த் பாராட்டி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், வணக்கம் சுப்பு, ரஜினிகாந்த் பேசுறேன். ஹும்கும் பாடலை கேட்ட பிறகு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள். நீங்க சூப்பர் சுப்பு. உங்களுக்கு இது பெரிய வெற்றியாக இருக்கும், கொண்டாடுங்கள். நன்றி என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×