என் மலர்
சினிமா செய்திகள்
- இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- மணிப்பூரில் நிகழ்ந்த இந்த வன்கொடுமைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இசையமைப்பாளார் ஜி.வி.பிரகாஷ் மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்… கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…" என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.
- நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K).
- இந்த படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

கல்கி 2898- ஏடி போஸ்டர்
மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'புராஜெக்ட் கே' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று காலை 1.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படி, இப்படத்திற்கு 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதில் சர்ப்ரைஸாக நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- அபிஷேக் பச்சன் அரசியலில் களம் இறங்க உள்ளதாக தகவல் பரவியது.
- தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சனின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அபிஷேக் பச்சன் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி வந்தது.

அமிதாப்பச்சன் ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டு பிரயாக்ராஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி. பதவி வகித்தவர். அபிஷேக் பச்சனின் தாயாரும் நடிகையுமான ஜெயாபச்சனும் சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார். எனவே அபிஷேக் பச்சனும் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து அமிதாப்பச்சன் போட்டியிட்ட தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்து இருப்பதாக பேசப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து அபிஷேக் பச்சன் கூறும்போது, "நான் அரசியலில் ஈடுபட இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனக்கு அரசியல் ஆர்வம் கொஞ்சமும் இல்லை'' என்றார்.
- சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் சூர்யா நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. "கங்குவா" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளான 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கங்குவா படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா தினமும் இரண்டரை மணி நேரம் மேக்கப்பிற்காக செலவழித்ததாக கூறப்படுகிறது. மேலும் கொடைக்கானலில் அடர்ந்த காடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புக்காக சூர்யா வெகுதூரம் நடந்து சென்றதாகவும், இருந்தும் சூர்யா படப்பிடிப்பு தளத்திற்கு சரியாக காலை 6.30 மணிக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- தனுஷ் இயக்கி நடிக்கும் 50வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
- தற்போது தனுஷின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. நடிகர் தனுஷ் சமீபத்தில் திருப்பதி கோவிலில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தலையில் கேப் அணிந்து தனுஷ் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.
- விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
- எஸ்.ஜே.சூர்யா இன்று தனது பிறந்தநாளை ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார்.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் எஸ்.ஜே.சூர்யா மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது விஷால் உள்ளிட்ட படக்குழு டம்மி துப்பாக்கியின் குண்டுகள் முழங்க அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால்.
- சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாளான இன்று அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சாக்ஷி அகர்வால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார். தற்போது பல படங்களை சாக்ஷி அகர்வால் கைவசம் வைத்திருக்கிறார்.

சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாளான இன்று அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை கோவாவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மாவீரன்'.
- இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

'மாவீரன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், "மடோன் அஸ்வின் விருப்பப்பட்டால் நான் அவருடன் மீண்டும் இணைய தயாராகவுள்ளேன். மாவீரன் வெற்றி எனக்கு கூடுதல் பரிசாக உள்ளது. இப்பொழுது வரை அனைவரும் என்னுடைய படங்களை பாராட்டுவார்கள், ஆனால் முதல் முறை என்னுடைய நடிப்பை பாராட்டியுள்ளனர்" என்றார்.
- இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர் கட்சி தலைவர்கள் மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். வெறுப்படைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதே போல நடிகைகள் ஊர்மிளா மடோன்கர், ரிச்சா சதா, ரேணுகா சஹானே, நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் உள்ளிட்ட பலரும் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதே போல 'மணிப்பூர் வன்முறை', 'போதும் போதும்' போன்ற ஹேஷ்டேக்குகள் பெருமளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
- உதயநிதி நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படம் சில தினங்களுக்கு முன்பு நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர்.

மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தை பார்த்த ஐஐடி மாணவர்கள் பாராட்டியதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் அதில், ஐஐடி மாணவர்களின் பாராட்டு மழையில் மாமன்னன்! 4வது வார வெற்றியில் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மாமன்னன் திரைப்படம் வருகிற ஜூலை 27ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொலை’.
- இப்படத்தை விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.
இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது கிரைம் திரில்லர் வகை படமான 'கொலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி 'கொலை' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், கொலை நாளை வெளியாகவுள்ளது. உங்களுக்காக இந்த ஸ்னீக் பீக் வீடியோ, எஞ்சாய் என்று குறிப்பிட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மாவீரன்'.
- இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

'மாவீரன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், "மடோன் அஸ்வின் விருப்பப்பட்டால் நான் அவருடன் மீண்டும் இணைய தயாராகவுள்ளேன்." என்று கூறினார்.

இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் மடோன் அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் இணைகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியதோடு எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.






