இது உங்களுக்காக எஞ்சாய்.. விஜய் ஆண்டனி பகிர்ந்த வீடியோ

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொலை’.இப்படத்தை விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.
இது உங்களுக்காக எஞ்சாய்.. விஜய் ஆண்டனி பகிர்ந்த வீடியோ
Published on: 

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது கிரைம் திரில்லர் வகை படமான 'கொலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி 'கொலை' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், கொலை நாளை வெளியாகவுள்ளது. உங்களுக்காக இந்த ஸ்னீக் பீக் வீடியோ, எஞ்சாய் என்று குறிப்பிட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com