என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K).
- இந்த படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'புராஜெக்ட் கே' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று காலை 1.30 மணிக்கு வெளியானது. 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பாராட்டி இயக்குனர் ராஜமவுலி பதிவிட்டுள்ளார். மேலும் படக்குழுவிடம் இன்னும் ஒரே ஒரு கேள்வி மட்டும் மீத உள்ளது என்று கூறி படத்தின் வெளியீட்டு தேதி எப்பொழுது என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- தோனி தயாரிப்பில் தமிழில் உருவாகியுள்ள திரைப்படம் 'எல்.ஜி.எம்'.
- இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர். 'எல்.ஜி.எம்' படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

'எல்.ஜி.எம்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் செய்தியாளர்களை சந்தித்த படக்குழு, "தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பால்தான், தமிழில் படம் பண்ண 'தல' தோனி முடிவு செய்தார்" என்று தெரிவித்தனர்.
- ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்கவுள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் வெற்றிக்காக உதயநிதிக்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன்பின்னர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான மாமன்னன் திரைப்படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களை பெற்றார்.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் வெற்றிக்காக உதயநிதி ஸ்டாலிக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் உருக்கமாக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், மாமன்னன் படத்தின் தொடக்கத்தில் இருந்தே நீங்கள் எனது நல விரும்பியாக இருந்துள்ளீர்கள். நீங்கள் என் மீதும், என் கலை மீதும் வைத்த நம்பிக்கையால் தான், இப்படம் மாபெரும் வெற்றியை வெற்றுள்ளது. என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. லவ் யூ சார் என்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாமன்னன் படத்தின் வெற்றிக்காக படக்குழு மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- டோனி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எல்.ஜி.எம்'.
- இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர். 'எல்.ஜி.எம்' படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'எல்.ஜி.எம்' சிறப்பு தோற்றத்தில் தோனி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தோனியும் நடித்துள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- கவுதம் மேனன் இயக்கி விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
- இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலை கவுதம் மேனன் நீக்கியுள்ளார். அதாவது, இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடலையும் படக்குழு நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
- நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’.
- இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. "கங்குவா" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளான 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கங்குவா படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் இவர் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், இவருக்கு நீண்ட சண்டைக்காட்சி ஒன்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாக்கர்’.
- இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இரட்டை இயக்குனர்கள் ராஜசேகர் என்- யுவராஜ் கண்ணன் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் 'லாக்கர்'. இப்படத்தில் எதற்கும் துணிந்தவன், கேம் ஓவர், மாஸ்டர் படங்களில் நடித்த விக்னேஷ் சண்முகம் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார்.

மேலும், வில்லனாக தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்த நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். பிரின்ஸ், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார். தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'லாக்கர்' படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் விஷ்ணு இடவன் எழுதியுள்ளனர். ராபரி டிராமாவாக உருவாகியுள்ள 'லாக்கர்' படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இறுதி கட்டப் பணியில் இருக்கும் 'லாக்கர்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K).
- இந்த படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'புராஜெக்ட் கே' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று காலை 1.30 மணிக்கு வெளியானது. அதன்படி, இப்படத்திற்கு 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) என படக்குழு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இதில் நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் கமலின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் கமல் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நெகடிவ் ரோல் இல்லாமல் பாசிட்டிவ் ரோல் கிடையாது. ஒரு படத்திற்கு நெகடிவ் ரோல் முக்கியமானது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
- ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இவர் இல்லாமல் கதையில் மாற்றம் செய்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- நடிகை ஜெனிலியா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.
பாலிவுட் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜெனிலியா. பின்னர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா, இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஜெனிலியா, தென்னிந்திய சினிமா குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் தென்னிந்திய படங்களில் நடித்த போது என்னை பாலிவுட் கைவிட்டது. அங்கேயே செல் என்று கூறியது. ஆனால், எனக்கு தென்னிந்திய சினிமாவை மிகவும் பிடிக்கும். எனக்கு நடிப்பின் மீது காதல் வர காரணமே தென்னிந்திய சினிமாதான். தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்க விருப்பம் உள்ளது என்று கூறியுள்ளார்.
- கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கடந்த 18-ந்தேதி பெங்களூருவில் மரணம் அடைந்தார்.
- அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளியில் நேற்று நடந்தது.
கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கடந்த 18-ந்தேதி பெங்களூருவில் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளியில் நேற்று நடந்தது.
இந்நிலையில் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் தோன்றி உம்மன் சாண்டி குறித்து அவதூறு கருத்துக்களை பேசினார். அந்த வீடியோவில், "யார் இந்த உம்மன் சாண்டி. அவர் இறந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். உங்களுடைய அப்பாவும் இறந்து விட்டார். உம்மன் சாண்டி இறந்ததற்கு எதற்கு 3 நாள் விடு முறை. அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டும னால் சொல்லலாம். ஆனால் நான் சொல்ல மாட்டேன்" என்று கூறியிருந்தார். நடிகர் விநாயகனின் இந்த வீடியோ பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

விநாயகன் வீடு
இதையடுத்து அவர், அந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இருந்த போதிலும் உம்மன் சாண்டி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட நடிகர் விநாயகன் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் கொச்சி உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடிகர் விநாயகன் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குபதிந்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எர்ணாகுளம், கழுவூரில் உள்ள விநாயகனின் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதில், அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. விநாயகனின் வீட்டில் தாக்குதலில் ஈடுபட்டது காங்கிரஸ் தொண்டர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






