தோனி தமிழில் முதல் படம் பண்ண காரணம் இது தான்.. 'எல்.ஜி.எம்' படக்குழு

தோனி தயாரிப்பில் தமிழில் உருவாகியுள்ள திரைப்படம் 'எல்.ஜி.எம்'.இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
தோனி தமிழில் முதல் படம் பண்ண காரணம் இது தான்.. 'எல்.ஜி.எம்' படக்குழு
Published on: 

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர். 'எல்.ஜி.எம்' படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

'எல்.ஜி.எம்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் செய்தியாளர்களை சந்தித்த படக்குழு, "தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பால்தான், தமிழில் படம் பண்ண 'தல' தோனி முடிவு செய்தார்" என்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com