search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உம்மன்சாண்டி குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் விநாயகன் வீடு மீது கற்களை வீசி தாக்குதல்
    X

    விநாயகன் - உம்மன் சாண்டி

    உம்மன்சாண்டி குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் விநாயகன் வீடு மீது கற்களை வீசி தாக்குதல்

    • கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கடந்த 18-ந்தேதி பெங்களூருவில் மரணம் அடைந்தார்.
    • அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளியில் நேற்று நடந்தது.

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கடந்த 18-ந்தேதி பெங்களூருவில் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளியில் நேற்று நடந்தது.

    இந்நிலையில் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் தோன்றி உம்மன் சாண்டி குறித்து அவதூறு கருத்துக்களை பேசினார். அந்த வீடியோவில், "யார் இந்த உம்மன் சாண்டி. அவர் இறந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். உங்களுடைய அப்பாவும் இறந்து விட்டார். உம்மன் சாண்டி இறந்ததற்கு எதற்கு 3 நாள் விடு முறை. அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டும னால் சொல்லலாம். ஆனால் நான் சொல்ல மாட்டேன்" என்று கூறியிருந்தார். நடிகர் விநாயகனின் இந்த வீடியோ பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


    விநாயகன் வீடு

    இதையடுத்து அவர், அந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இருந்த போதிலும் உம்மன் சாண்டி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட நடிகர் விநாயகன் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் கொச்சி உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடிகர் விநாயகன் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குபதிந்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் எர்ணாகுளம், கழுவூரில் உள்ள விநாயகனின் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதில், அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. விநாயகனின் வீட்டில் தாக்குதலில் ஈடுபட்டது காங்கிரஸ் தொண்டர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×