என் மலர்
சினிமா செய்திகள்

என் மீதும், என் கலை மீதும் வைத்த நம்பிக்கையால் தான் இது நிகழ்ந்தது.. உதயநிதிக்கு மாரி செல்வராஜ் நன்றி
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் வெற்றிக்காக உதயநிதிக்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன்பின்னர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான மாமன்னன் திரைப்படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களை பெற்றார்.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் வெற்றிக்காக உதயநிதி ஸ்டாலிக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் உருக்கமாக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், மாமன்னன் படத்தின் தொடக்கத்தில் இருந்தே நீங்கள் எனது நல விரும்பியாக இருந்துள்ளீர்கள். நீங்கள் என் மீதும், என் கலை மீதும் வைத்த நம்பிக்கையால் தான், இப்படம் மாபெரும் வெற்றியை வெற்றுள்ளது. என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. லவ் யூ சார் என்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாமன்னன் படத்தின் வெற்றிக்காக படக்குழு மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.






