விடாமுயற்சி அப்டேட் கவுண்டவுன் ஸ்டார்ட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார்.
விடாமுயற்சி அப்டேட் கவுண்டவுன் ஸ்டார்ட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Published on

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட் வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். பல நாட்களுக்கு பின் இப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com