என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • "ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் 7 மொழிகளில் 145-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இசைப்புயல் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகனாக வலம் வருகிறார்.

    இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட 7 மொழிகளில் 145-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அட்கன் சட்கன், 99 சாங்க்ஸ், லே மஸ்க் ஆகிய படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அடுத்ததாக அயலான், லால் சலாம், தக் லைஃப் போன்ற படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.


    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் , ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இயக்குனர் மாரிசெல்வராஜ் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கடந்த வருடம் எனக்கு ஒரு சிறந்த பயணமாக இருந்தது. உங்களுடன் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது, எனது கனவு நனவான தருணம். இன்னும் உங்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும். பிறந்த நாள் வாழ்த்துகள் ஏ.ஆர்.ரகுமான்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
    • பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.


    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, அயோத்தி - ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் 21-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவும் பங்கேற்கின்றனர்.


    இதே போல இசைஞானி இளையராஜாவும் அயோத்தி செல்கிறார். அயோத்தி செல்லும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ஒருநாள் முன்பாகவே அதாவது 21-ம் தேதியே அயோத்திக்கு வந்து விடும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள் , ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இசைப்புயல் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகனாக வலம் வருகிறார்.


    இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட 7 மொழிகளில் 145-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அட்கன் சட்கன், 99 சாங்க்ஸ், லே மஸ்க் ஆகிய படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அடுத்ததாக அயலான், லால் சலாம், தக் லைஃப் போன்ற படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் , ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், ஏ.ஆர். ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஏ.ஆர். ரகுமான். உங்களுடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன், மேலும் உங்களிடமிருந்து அனைவருக்கும் சிறந்த இசையை எதிர்பார்க்கிறேன்' என்று பதிவிட்டு உள்ளார்.


    • படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • அண்மையில் படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் சிங்கிள்- லை படக்குழு வெளியிட்டு இருந்தது.

    ஏ. எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த திரைப்படம் மிஷன் சாப்டர்-1 ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

    மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகிய படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் அருண் விஜய்யை வைத்து ஆக்ஷன் படத்தில் களமிறங்கியுள்ளார். திரைப்படத்தில் எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கெனவே ஏ.எல். விஜய் இயக்கிய மதராசப்பட்டினம், தாண்டவம் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கிறார் எமி ஜாக்சன்.

    படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார்.

    அண்மையில் படத்தின் டிரைலர் மற்றும் முதல் சிங்கிள்- லை படக்குழு வெளியிட்டு இருந்தது.

    • நடிகர் விஜயகாந்த் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    • விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


    இந்நிலையில், இன்று விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது நினைவிடத்தில் திரைப்பிரபலங்களான ஆதி, நிக்கி கல்ராணி, எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீநாத், எஸ்.ஏ.சந்திரசேகர், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


    பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "விஜயகாந்த் சார் சினிமாத் துறையின் மிகப்பெரிய இழப்பு. நான் குறும்படம் செய்து கொண்டிருக்கும் காலங்களில் கேப்டன் தொலைக்காட்சிக்கு ஒரு குறும்படம் அனுப்பி வைத்தேன். அப்போது தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கண்டிப்பாக நீ படம் பண்ணிவிடுவாய் என்று கூறினார். அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய ஊக்கமாக இருந்தது" என்று பேசினார்.

    • நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'புளூ ஸ்டார்'.
    • இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    புளூ ஸ்டார் போஸ்டர்

    இந்நிலையில், 'புளூ ஸ்டார்' (Blue Star) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இசைப்புயல் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

    கடந்த 1992-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் தன் முதல் படத்திலேயே ரசிகர்களை தன் இசையால் வசியம் செய்துவிட்டார். இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இன்று வரை மக்கள் கொண்டாடும் விதமாக அமைந்தது.


    இப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை புயல் வேகத்தில் உலகெங்கும் பரவியது. மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் தன் இசையால் மக்களை மகிழ்வித்து தன் எல்லையை விரித்தார். பல விருதுகள் வென்ற ஏ.ஆர்.ரகுமான் "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற படத்தில் இசை அமைத்ததற்காக கோல்டன் குளோப் விருது, பாப்டா விருதுகளை பெற்றார். இதே படம் ஆஸ்கார் விருதையும் வென்றது.

    கிராமிய இசை முதல் மேற்கத்திய இசை வரை தனது இசையால் தனித்து தெரியும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பல புதுமைகளை செய்துள்ளார். இவ்வாறு "ரோஜா"-வில் தன் பயணத்தை தொடங்கி இரண்டு ஆஸ்கர்களை வென்று ஆஸ்கர் நாயகனாக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர்.
    • ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ் திரையுலகம் சார்பில் திரை உலகில் உள்ள அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் 100 என்கிற விழாவை இன்று மாலை நடத்துகிறது.

    கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் இந்த விழா தொடங்குகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.


    கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் திரை உலகில் அவரது பங்களிப்பு பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய தொகுப்பு விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவரது வசனங்கள் அதன் மூலமாக பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள் தொடர்பாகவும் கலைஞர் 100 விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகைகள் ரம்யா பாண்டி யன், இனியா, யாஷிகா ஆனந்த், தேஜஸ்ஸ்ரீ மற்றும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி என்ற முரளி ராமநாராயணன் மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


    கலைஞர் 100 விழாவையொட்டி இன்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர். அவர்களும் இன்று மாலை நடை பெறும் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் களை கட்டி உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    தமிழ் திரை உலகினர் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக திரள்வதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா துபாயில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த நாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் விடுமுறையை கொண்டாட கரீபியன் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

    பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (வயது 51). தி குட் ஜெர்மன், ஸ்பீடு ரேசர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடத்திருக்கிறார்.


    இவர் தனது 2 மகள்களான அன்னிக்(12), மடிதா (10) மற்றும் குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட கரீபியன் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். இதற்கிடையே பெக்லியா தீவில் இருந்து செயின்ட் லூசியாவுக்கு கிறிஸ்டியன் ஆலிவர் தனது 2 மகள்களுடன் தனியாருக்கு சொந்தமான விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.

    ஒரு எஞ்சின் கொண்ட சிறிய ரக அந்த விமானம் கரீபியன் கடல் மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து நொறுங்கியது. புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது.


    இந்த விபத்தில் ஆலிவர் அவரது 2 மகள்கள் மற்றும் விமானி ராபர்ட் சாச்ஸ் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்துக்கு கடலோர காவல் படையினர், மீனவர்கள், நீர்மூழ்கி வீரர்கள் சென்று 4 பேரின் உடல்களை மீட்டனர். விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.

    இந்த நிலையில், அயலான் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த படம் குடும்பங்கள் பார்த்து ரசிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • 'கேப்டன் மில்லர்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.


    இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    கேப்டன் மில்லர் போஸ்டர்

    இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


    ×