என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தற்போது 'ஆடு ஜீவிதம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.


    இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஆடு ஜீவிதம் போஸ்டர்

    இந்நிலையில், 'ஆடு ஜீவிதம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நேற்று நடந்தது. இதனால் திருப்பதி மலைக்கு சென்ற பஸ்கள், பக்தர்களின் வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக போலீசார் திருப்பி விட்டனர். இந்த சாலை குறுகலானதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.


    அதன் பின் படக்குழுவினர் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன் படப்பிடிப்பை நடத்த முற்பட்டனர். இதனால் அங்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்களை படக்குழுவினருடன் வந்திருந்த பவுன்சர்கள் அவசர அவசரமாக வெளியேற்றினர். தகவலறிந்த ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி திருப்பதி போலீசில் புகார் கொடுத்தனர்.


    இந்நிலையில் பக்தர்கள் அவதி, போக்குவரத்து இடையூறு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி அறிவித்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    • விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரோமியோ’.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

    நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஷாலின் 'எனிமி' படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.


    ரோமியோ போஸ்டர்

    இந்நிலையில், 'ரோமியோ' திரைப்படம் வருகிற கோடையில் வெளியாகவுள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 'மொரட்டு ரொமான்ஸ், மில்க் அண்ட் விஸ்கி'என்று குறிப்பிட்டு பால் செம்புடன் விஜய் ஆண்டனியும் சரக்கு பாட்டிலுடன் மிருணாளினியும் இருக்கும் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    • ’காந்தாரா’ வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுகிறது.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.


    இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்திற்கு 'காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1' என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு சமீபத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.



    இந்நிலையில், காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1' திரைப்படத்தின் கதை 1970 -80 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று அமைந்துள்ளதால் இதற்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணி மங்களூரில் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • பவதாரிணி ஜனவரி 25-ஆம் தேதி உயிரிழந்தார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனவரி 25-ஆம் தேதி உயிரிழந்தார். 47 வயதான பவதாரிணி மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


    பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு இவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பண்ணையபுரம், லோயர்கேம்ப் அருகே உள்ள இளையராஜாவின் குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரிணி உடல் அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.


    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.
    • சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.


    1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.

    இதையடுத்து சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.


    இந்நிலையில், 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • நடிகர் சூரி பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    • இவர் தற்போது ‘கருடன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூரி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'கொட்டுக்காளி', 'கருடன்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.


    இந்நிலையில், நடிகர் சூரி நெதர்லாந்து சென்றுள்ளார். அதாவது, நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 1' மற்றும் இரண்டாம் பாகம் திரையிடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சூரி நெதர்லாந்து சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சூரி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • நடிகர் தனுஷ் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவரின் 51-வது படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார்.

    நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் என பன்முக தன்மை கொண்டவராக வலம் வருகிறார் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இவரின் 51-வது படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.


    இப்படி பிசியான நடிகராக வலம் வரும் தனுஷின் படப்பிடிப்பு ஒன்று திருப்பதி அலிபிரி பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதால் அலிபிரியில் பாதுகாவலர்கள் குவிக்கப்பட்டனர்.

    வெளியூர் பக்தர்களுக்கு படப்பிடிப்பு நடைபெறுவது தெரியாததால் அலிபிரியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • இளவரசு சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த விவகாரத்தை கைவிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

    தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து இறுதி அறிக்கையை நான்கு மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் குறிப்பிட்ட விசாரணையை முடிக்கவில்லை என்று ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்ப்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.


    இந்த வழக்கு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நடிகர் இளவரசு காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அது தொடர்பான கண்காணிப்பு கேமராக்கள் காவல் நிலையத்தினரால் சமர்பிக்கப்பட்டது. இதற்கு இளவரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து 13-ஆம் தேதி தான் வாக்குமூலம் அளித்ததாகவும் 12-ஆம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் போலியானவை என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கே இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன்களையும் மற்றும் அழைப்புகள் தாக்கல் செய்யப்பட்டது. காவல் துறை சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி நடிகர் இளவரசு 12-ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதாக கூறி மன்னிப்பு கோரினால் அதை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்து காவல்துறை தாக்கல் செய்த விவரங்களுக்கு விளக்கமளிக்குபடி உத்தரவிட்டார்.


    இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தவறான தகவல்களை அளித்ததற்காக இளவரசு சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி காவல்துறை நிலைபாடு என்ன என்ற கேள்வியை எழுப்பினார். மன்னிப்பு கேட்டதால் இந்த விவகாரத்தை கைவிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

    மேலும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க முறைகேடு புகார் 2018-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட நிலையில் அதன் மீது இன்னும் முழுமையான விசாரணை நடத்தி முடிக்கவில்லை என்ற அதிருப்தியை நீதிபதி பதிவு செய்தார். தொடர்ந்து, இளவரசு புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை காவல்துறையினர் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பாண்டிபஜார் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவல் ஆய்வாளர்களாக இருந்த அனைவரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

    • ’துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பு சில வருடங்களுக்கு முன் தொடங்கியது.
    • விஷால் மற்றும் மிஷ்கினுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் நிறுத்திவைக்கப்பட்டது.

    கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'துப்பறிவாளன்'. இந்த படத்தில் நடிகர் விஷால், பிரசன்னா, அனு இமானுவேல், சிம்ரன், வினய் என பலர் நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியைத் தேடி தந்தது.


    இதைத்தொடர்ந்து, 'துப்பறிவாளன்' இரண்டாம் பாகம் சில வருடங்களுக்கு முன் தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதிலும் நடித்தனர். இதன் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான விஷால், மிஷ்கினை படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். பின்னர் இந்த படத்தைத் தானே இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.


    இந்நிலையில், 'துப்பறிவாளன் 2' திரைப்படத்தின் பணிகளை விஷால் தொடங்கியுள்ளதாகவும் இப்படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக வரும் 1-ம் தேதி விஷால் லண்டன் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • பாடகி பவதாரிணி ஜனவரி 25-ஆம் தேதி உயிரிழந்தார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனவரி 25-ஆம் தேதி உயிரிழந்தார். 47 வயதான பவதாரிணி மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


    பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு இவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

    பண்ணையபுரம், லோயர்கேம்ப் அருகே உள்ள இளையராஜாவின் குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரிணி உடல் அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.


    இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் மறைந்த பாடகி பவதாரிணியுடன் இருக்கும் கடைசி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், 'பவதாவுடன் இருந்த கடைசி புகைப்படம்' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைஃப்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

    'தக் லைஃப்' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

    இந்நிலையில், 'தக் லைஃப்' (Thug Life) திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவின் சைபீரியா பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் இதில் நடிகர் கமல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    ×