என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’.
    • இந்த படம் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இப்படம் ஒரு தரப்பில் பாராட்டை பெற்றாலும் பலர் இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிலும், படத்தில் இடம்பெற்றுள்ள ஆணாதிக்கம் மற்றும் இந்துத்துவத்தை தாங்கி பிடிக்கும் காட்சிகள் குறித்து நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.


    இந்த நிலையில், சமூகத்தில் உரையாடல் தொடங்கும் வரை நம்மால் அந்த தவறை உணரவே முடியாது என்று ரன்பீர் கபூர் கூறியுள்ளார். நேர்காணலில் கலந்து கொண்ட ரன்பீர்கபூர், "சமூகத்தில் நிலவும் நச்சுத்தன்மை கொண்ட ஆணாதிக்கம் குறித்து 'அனிமல்' படம் ஓர் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துள்ளது. இது மிகவும் நல்ல விஷயம். சினிமா என்பது குறைந்தபட்சம் ஒரு உரையாடலை ஏற்படுத்த வேண்டும். ஏதேனும் தவறு நடக்கும்போது, அது தவறு என்று நாம் காட்டாவிட்டால், சமூகத்தில் உரையாடல் தொடங்கும்வரை நம்மால் அந்த தவறை உணரவே முடியாது" என்று கூறினார்.

    • கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.

    தெலுங்கானா மாநிலம், சைபராபாத் அடுத்த கோகா பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் லாவண்யா என்கிற அன்விதா ( வயது 33). இவர் தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் லாவண்யா கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக மடப்பூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் லாவண்யாவை கண்காணித்து வந்தனர். அப்போது லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் நர்சிங் போலீசார் இணைந்து லாவண்யாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து விலை உயர்ந்த எம்.டி.எம்.ஏ எனப்படும் 4 கிராம் எடையுள்ள போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். லாவண்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    அதே குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் ஒருவருடன் லாவண்யாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. அந்த நடிகருக்காக லாவண்யா கோவாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. லாவண்யாவுக்கு போதைப் பொருள் சப்ளை செய்த ஒருவர் அவரது காதலியுடன் தலைமறைவாகி உள்ளார். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

    • அசோக் செல்வன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘புளூ ஸ்டார்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். 'புளூ ஸ்டார்' திரைப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'புளூ ஸ்டார்' திரைப்படத்தின் வெற்றியை இயக்குனர் எஸ்.ஜெயகுமார், தயாரிப்பாளர் பா.இரஞ்சித், பாடகர் அறிவு மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படத்தை நீலம் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.


    • ’லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், தன் அப்பா சங்கி இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் ஜூக் பாக்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், 'திமிறி எழுடா' என்கிற பாடலை மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது பாடியுள்ளனர். ஏ.ஜ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் குரலை 'லால் சலாம்' பாடலுக்கு பயன்படுத்தி புது டிரெண்டை உருவாக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.


    இந்த ஜூக் பாக்ஸை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், 'பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது குரலை அவர்களின் குடும்பங்களின் அனுமதியோடு தான் பயன்படுத்தினோம். இதற்கான தொகையும் கொடுத்துள்ளோம். தொழில்நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் அது தொல்லை இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.



    • நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘புளூ ஸ்டார்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். 'புளூ ஸ்டார்' திரைப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'புளூ ஸ்டார்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சி ஒன்றின் உருவாக்கத்தை நடிகர் அசோக் செல்வன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "நம்ம ஊரு இசை.. ஏதோ ஒன்னு பண்ணுது! " என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘வெண்ணிலா கபடிகுழு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பாராட்டை குவித்தது.

    கடந்த 2009-ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'வெண்ணிலா கபடி குழு'. விஷ்ணு விஷால் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சூரி, விஜய் சேதுபதி, அப்புக்குட்டி, சரண்யா மோகன் உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பாராட்டை குவித்தது.

    இந்நிலையில், இப்படம் வெளியாகி 15 வருடங்களை கடந்துள்ளதையடுத்து நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. என் திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததில், நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது திரை வாழ்க்கைக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்த. என் இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கு, இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


    திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல முயன்றுள்ளேன். எனது படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எந்தவித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த வகையில் எனது திரைப்படங்கள் மக்களிடம் பாஸிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

    எனது பதினைந்து வருடப் பயணத்தில் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்யவே முயன்றிருக்கிறேன். இதுவரை நான் நடித்துள்ள 20 படங்களில், பாதிக்கு மேல் தமிழ் சீனிமா ரசீகர்களின் இதயங்களில், என்றென்றும் வாழும் என்பதே எனக்குப் பெருமை.


    என் திரைப்பயணத்தின் இந்த 15-வது ஆண்டு எனக்கு இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. 'லால் சலாம்' எனும் அற்புதமான படத்தில், நம் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமை மற்றும் சிறந்த மனிதரான, மதிப்பிற்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது பயணம் சரியான தருணத்திலும் சரியான திசையிலும் உச்சத்தை நோக்கச் செல்வது மகிழ்ச்சி.!

    இந்தப் பயணத்தில் இதுவரை என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு படத்திலும் பணியாற்றிய லைட்மேன்கள் முதல் எனது உதவியாளர்கள் வரை, அனைத்து படக்குழு உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


    என் மீது அன்பும், ஆதரவும் காட்டிய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என் பணிகளை பற்றி, நேர்மையாக விமர்சனங்களைத் தந்து, நான் சரியான திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்க ஊக்கம் தந்த. விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் நான் முழு மனதுடன் நன்றி தொவித்துக் கொள்கிறேன்.

    எனது வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில், எனக்கு மிகப்பெரும் ஆதரவாக, எனது குடும்பம் இருந்தது. நல்லது கெட்டது இரண்டிலும் எப்போதும் தோள் கொடுக்க முன்வரும் என் பெற்றோர். மனைவி, சகோதரிகள், சகோதரன் மற்றும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


    விஷ்ணு விஷால் அறிக்கை

    அடுத்து வெளிவர இருக்கும் பல சுவாரஸ்யமான படைப்புகளில் நான் இணைந்திருக்கிறேன் என்பது. எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. இந்நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - 'வாழ்க்கை உங்களைச் சோதிக்கும். உங்கள் திறமைக்குப் பலசவால்களைத் தரும். ஆனால் விடாமுயற்சியுடன் தெளிவான நோக்கத்துடன். உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்தி, வலுவாக நின்றால், வெற்றியை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது.!" என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகை எமிஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார்.
    • திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமிஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அருண் விஜய்யுடன் மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்திருந்தார்.


    பிரிட்டீஸை சேர்ந்த எமிஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார். திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாட்டால் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த எமிஜாக்சன், நடிகர் எட்வெஸ்ட் விக்கை காதலித்து வந்தார். இருவரும் ஜாலியாக ஆங்காங்கே சுற்றி திரியும் படங்களை அவ்வப்போது எமிஜாக்சன் வெளியிட்டு வந்தார்.


    இந்த நிலையில், நடிகர் எட்வெஸ்ட் விக் நடிகை எமிஜாக்சனிடம் மோதிரம் நீட்டி புரொபோஸ் செய்துள்ளார். அவரது புரொபோஸை ஏற்றுக்கொண்ட எமிஜாக்சன் அந்த மோதிரத்தை கையில் அணிந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை எமி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    • ராபர்ட் டி நீரோ 2 முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.
    • 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்' படத்துக்காக சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினேட் ஆகி உள்ளார்.

    ரேஜிங் புல், தி காட்பாதர் பார்ட் II, டாக்ஸி டிரைவர், குட் ஃபெல்லாஸ், ஐரிஷ்மேன் என பல படங்களில் நடித்தவர் ராபர்ட் டி நீரோ. இவர் 2 முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றுள்ளார். இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்' படத்துக்காக சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினேட் ஆகி உள்ளார்.


    இவர் தற்போது 'அபவுட் மை ஃபாதர்' படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவரது ஆறு குழந்தைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கு 6 இல்லை இப்பொழுது 7 குழந்தைகள் உள்ளன. 80 வயதில் மகளை வளர்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    என் குழந்தையின் முகத்தை பார்க்கும் பொழுது என்னுடைய கவலைகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. என்னால் முடிந்த வரை அவளுடன் நாட்களை செலவிடுவேன். நான் கவலைப்படும் விஷயங்கள் எல்லாம் அவளைப் பார்க்கும் பொழுது மறந்துவிடும். எனக்கு அதுவே அதிசயமானது. என்னால் முடிந்தவரை அவளை ரசிக்க விரும்புகிறேன்" என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.


    ராபர்ட் டி நீரோவுக்கு ஏற்கனவே ட்ரேனா, ரஃபேல், ஜூலியன் மற்றும் ஆரோன் என்ற இரட்டையர்கள் எலியாட், ஹெலன் கிரேஸ் என ஆறு குழந்தைகள் உள்ளனர். தற்போது 7-வது குழந்தைக்குத் தந்தையான செய்தியை ராபர்ட் டி நிரோ சென்ற ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தார். அக்குழந்தையின் பெயர் கியா என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘சைரன்’.
    • இப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், 'சைரன்' படத்தின் முதல் பாடலான 'நேற்று வரை' பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. சித்ஸ்ரீராம் குரலில் காதல் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    • ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
    • இறுதி அறிக்கையை நான்கு மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து இறுதி அறிக்கையை நான்கு மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் குறிப்பிட்ட விசாரணையை முடிக்கவில்லை என்று ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்ப்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.


    இந்த வழக்கு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நடிகர் இளவரசு காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அது தொடர்பான கண்காணிப்பு கேமராக்கள் காவல் நிலையத்தினரால் சமர்பிக்கப்பட்டது. இதற்கு இளவரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து 13-ஆம் தேதி தான் வாக்குமூலம் அளித்ததாகவும் 12-ஆம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் போலியானவை என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கே இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன்களையும் மொபைல் அழைப்புகளையும் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மொபைல் லோகேஷன் மற்றும் அழைப்புகள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இளவரசு 12-ஆம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரம் செல்லவில்லை என்றும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


    காவல் துறை சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான ஆவணங்கள் இருக்கிறது நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் 12-ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதாக கூறி மன்னிப்பு கோரினால் அதை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்த நீதிபதி இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து காவல்துறை தாக்கல் செய்த விவரங்களுக்கு விளக்கமளிக்குபடி இளவரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.

    நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஷாலின் 'எனிமி' படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படம் இந்த ஆண்டு கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் நிறைவு பெற்றது.


    ரோமியோ போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • நடிகை திவ்ய பாரதி 'கிங்ஸ்டன்’ படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தினை ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கிறார்.

    இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கி வரும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இது இவரின் 25-வது படமாகும். இவருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடிக்கிறார். மேலும், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் ஷாபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


    கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம் ஆகும்.


    இந்நிலையில், நடிகை திவ்ய பாரதி 'கிங்ஸ்டன்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×