என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'.
    • இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


    இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சில நாட்களில் வேறு இடத்திற்கு செல்ல உள்ளதாக படக்குழு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதற்கான வேலையை ராஜ்கமல் நிறுவனம் கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது.
    • படம் குறித்து புதிய தகவல் கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எச்.வினோத், நடிகர் கமல்ஹாசனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'கேஎச் 233' என்று பெயரிடப்பட்டு உள்ளது. 

    திரைக்கதை மற்றும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த படம் கைவிடப்படுகிறது எனவும், தயாரிப்பாளர்களால் அதைப்பற்றிய எந்த அறிவிப்பும் பகிரப்படவில்லை எனவும் தகவல் பரவி வந்தது.

     இந்நிலையில் இன்று இதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் கமல் - வினோத் இணையும் #KH233கைவிடப்படவில்லை எனவும் வேறு ஒருநேரத்தில் இந்த படம் நிச்சயம் எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கான வேலையை ராஜ்கமல் நிறுவனம் கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது. திரைக்கதை மற்றும் 'கால்ஷீட்'பிரச்சினை காரணமாக இந்தபடம் கைவிடப்படுகிறது என்ற தகவல் பரவி வந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து புதிய தகவல் கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட விளம்பரத்திற்காக எதுவும் இல்லை.
    • லால் சலாம் படம் சூப்பரா வந்துருக்கு.

    சென்னை:

    சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    படப்பிடிப்பிற்காக ஆந்திர மாநிலம் கடப்பா செல்கிறேன்.

    சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை. சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை.

    அப்பா ஆன்மிகவாதி, எல்லா மதங்களையும் விரும்ப கூடியவர் என்றுதான் ஐஸ்வர்யா கூறினார். பட விளம்பரத்திற்காக எதுவும் இல்லை. லால் சலாம் படம் சூப்பரா வந்துருக்கு. படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள் என்றார்.

    • படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார்.
    • 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பிறகு இயக்குனர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

    துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேசிங்கு ராஜா'. இதில் விமல் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.


    மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பிறகு இயக்குனர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

    கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களின் கதையை மையமாக வைத்து காமெடி கலந்து உருவாகும் இந்த படத்தை மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    • ’வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா, "பாஸ் என்கிற பாஸ்கரன் படம் நடிக்கும்போது எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன் தான். அப்போது கேரவனுக்குள்ளேயே சந்தானத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர். நிச்சயம் 'வடக்குப்பட்டி ராமசாமி' ஹிட்டாகும். இயக்குனர் கார்த்திக்கும் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஸ்வா தெலுங்கில் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் இந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கும்.


    65 நாட்கள் ஷூட்டிங் என்றதும் ஹெல்த் டிப்ஸ் எல்லாம் கேட்டார். நானும் சொன்னேன். பிறகு கேட்டால் அவர் மேகா ஆகாஷூடன் ஷெட்டில் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அளவுக்கு ஹெல்த் கான்ஷியஸ் அவருக்கு உண்டு. படத்தில் அனைவரும் சிறப்பாக உழைப்பைக் கொடுத்துள்ளனர். நானும் சந்தானமும் இணைந்து அட்வென்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம்" என்றார்.

    • ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’.
    • இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார்.

    ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.


    இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


    இந்நிலையில், இப்படத்தை ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர். வெளியான இரண்டு நாட்களில் படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருவதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    • அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பிரேமம்'.
    • மலர் டீசர் கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

    கடந்த 2015-ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'பிரேமம்'. இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா ஜெபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    இப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அல்போன்ஸ் புத்திரனுக்கு இப்படம் மிகப்பெரிய மையில்கல்லாக அமைந்தது. 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவியை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ராஜேஷ் முருகன் இசையில் 'பிரேமம்' படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் 'மலரே நின்னை காணாதிருந்தால்' பாடல் இன்றும் காதலர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், 'பிரேமம்' திரைப்படம் தமிழில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மலையாள சினிமாவிற்கு ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கியது.


    இந்நிலையில், மலர் டீச்சரை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'பிரேமம்' திரைப்படம் பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    • நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.
    • இந்த திரைப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பேசியதாவது, இந்த படம் குறித்து நிறைய சர்ச்சைகள் எழுகிறது. அது மாதிரி எதுவும் இந்த படத்தில் இருக்காது. இது மிகவும் ஜாலியான படம். வடக்குப்பட்டி ராமசாமி என்பவரின் கதையை தான் படமாக கார்த்திக் எடுத்திருக்கிறார்.


    படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி கவுண்டமணி சாருடைய தீவிரமான ரசிகர். நானும் கவுண்டமணியுடைய ரசிகன் தான். அதனால் தான் இந்த பெயர் வந்தது. நான் சினிமாவிற்கு வந்தது மக்களை சிரிக்க வைக்கதான். மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் எண்ணமும் தாக்கி பேசும் எண்ணமும் எனக்கு இல்லை. இது கடவுளுக்கும் என் ரசிகர்களுக்கும் தெரியும் என்று பேசினார். 

    • நடிகர் நரேன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தை இயக்குனர் சுகீத் இயக்குகிறார்.

    இயக்குனர் சுகீத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆத்மா'. இந்த படத்திற்கு ராகேஷ் சங்கர் கதை, திரைக்கதை எழுத, கே. சந்துரு வசனம் எழுதியுள்ளார். கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,  ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் அசத்தியுள்ளார்  நடிகர் நரேன். கதாநாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். மேலும், பால சரவணன், காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடிக்க  ஃபிலிப்பினோவைச் சேர்ந்த  நடிக்கைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  


    மங்கள் சுவர்னன், சஸ்வதி சுனில்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேக் மேனன் ஒளிப்பதிவு செய்ய நவீன் விஜயன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். பெரும் பொருட்செலவில், KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி இப்படத்தினை தயாரித்துள்ளார். தமிழகமெங்கும் பிரபல இயக்குனர் சுசீந்திரன் இப்படத்தினை வெளியிடுகிறார்.


    ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது. பரப்பரபான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.


    ஆத்மா போஸ்டர்

    துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘அதோமுகம்’.
    • இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார்.

    அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'அதோமுகம்'. இந்த படத்தில் கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. கதையின் நாயகி  சைத்தன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார்.


    சரண் ராகவன் பின்னணி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அருண் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷ்ணு விஜயன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை இதுவரை பட விநியோக வியாபாரத்தில் இருந்து வந்த ரீல் பெட்டி நிறுவனம் தரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 


    ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லாராக படம் உருவாகியுள்ளது.  கதாநாயகன் தனது மனைவி  மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை. இதை சுற்றி பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையை வடிவமைத்து 'அதோமுகம்' படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக பவதாரிணி சிகிச்சை பெற்று வந்தார்.
    • பவதாரிணி உடல் தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் உயிரிழந்தார்.


    இசை விழா ஒன்றுக்காக இலங்கை சென்றிருந்த இளையராஜாவுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரிக்கு சென்று பவதாரிணியின் உடலை பார்த்து கண் கலங்கினார். 47 வயதே ஆன பாடகி பவதாரிணியின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.


    பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இவரது உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று (சனிக்கிழமை) அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

    இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா, பாடகி பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

    • ’போர்’ படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "போர்". இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


    குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர், 'போர்' திரைப்படத்தை தயாரித்துள்ளனர். "போர்" திரைப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.


    இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    ×