யாரையும் தாக்கி பேசும் எண்ணம் எனக்கு இல்லை- சந்தானம்

நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.இந்த திரைப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
யாரையும் தாக்கி பேசும் எண்ணம் எனக்கு இல்லை- சந்தானம்
Published on

'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பேசியதாவது, இந்த படம் குறித்து நிறைய சர்ச்சைகள் எழுகிறது. அது மாதிரி எதுவும் இந்த படத்தில் இருக்காது. இது மிகவும் ஜாலியான படம். வடக்குப்பட்டி ராமசாமி என்பவரின் கதையை தான் படமாக கார்த்திக் எடுத்திருக்கிறார்.

படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி கவுண்டமணி சாருடைய தீவிரமான ரசிகர். நானும் கவுண்டமணியுடைய ரசிகன் தான். அதனால் தான் இந்த பெயர் வந்தது. நான் சினிமாவிற்கு வந்தது மக்களை சிரிக்க வைக்கதான். மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் எண்ணமும் தாக்கி பேசும் எண்ணமும் எனக்கு இல்லை. இது கடவுளுக்கும் என் ரசிகர்களுக்கும் தெரியும் என்று பேசினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com