நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் த்ரில்லர்

நடிகர் நரேன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இந்த படத்தை இயக்குனர் சுகீத் இயக்குகிறார்.
நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் த்ரில்லர்
Published on

இயக்குனர் சுகீத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆத்மா'. இந்த படத்திற்கு ராகேஷ் சங்கர் கதை, திரைக்கதை எழுத, கே. சந்துரு வசனம் எழுதியுள்ளார். கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,  ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் அசத்தியுள்ளார்  நடிகர் நரேன். கதாநாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். மேலும், பால சரவணன், காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடிக்க  ஃபிலிப்பினோவைச் சேர்ந்த  நடிக்கைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

மங்கள் சுவர்னன், சஸ்வதி சுனில்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேக் மேனன் ஒளிப்பதிவு செய்ய நவீன் விஜயன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். பெரும் பொருட்செலவில், KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி இப்படத்தினை தயாரித்துள்ளார். தமிழகமெங்கும் பிரபல இயக்குனர் சுசீந்திரன் இப்படத்தினை வெளியிடுகிறார்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது. பரப்பரபான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ஆத்மா போஸ்டர்

துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com