என் மலர்
சினிமா செய்திகள்
- ’போர்’ படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "போர்". இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர், 'போர்' திரைப்படத்தை தயாரித்துள்ளனர். "போர்" திரைப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- பாடகி பவதாரிணி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
- இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் உயிரிழந்தார்.

இசை விழா ஒன்றுக்காக இலங்கை சென்றிருந்த இளையராஜாவுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரிக்கு சென்று பவதாரிணியின் உடலை பார்த்து கண் கலங்கினார். 47 வயதே ஆன பாடகி பவதாரிணியின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இவரது உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று (சனிக்கிழமை) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், சிறு வயதில் பாடல் பாடிக்கொண்டிருக்கும் பொழுது அழும் பவதாரிணியை இளையராஜா தேற்றும் வீடியோவை நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதனை ரீ டுவிட் செய்துள்ள நடிகர் பார்த்திபன், "மகள் அழுகையில் தேற்றிய தந்தையை
தேற்றிட மகள் ஏனோ இன்றில்லையே.
பற்றினைப் பற்றிட
பற்றிடும் சோகத்தீயை
அனைத்திட ஏதுமுளதோ?
இப்பூமியில்…!" என்று குறிப்பிட்டுள்ளார்.
மகள் அழுகையில் தேற்றிய தந்தையை
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 27, 2024
தேற்றிட மகள் ஏனோ இன்றில்லையே.
பற்றினைப் பற்றிட
பற்றிடும் சோகத்தீயை
அனைத்திட ஏதுமுளதோ?
இப்பூமியில்…! https://t.co/eeKEzwfVvp
- நடிகை ராதிகா பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
- இவர் டாப் ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா 1978-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பூவரசம்பூ பூத்தாச்சு' பாடல் இன்று வரை ரசிகர்கள் நினைவில் இருக்கும் பாடலாக உள்ளது. தொடர்ந்து இவர் தயாரித்து நடித்த 'மீண்டும் ஒரு காதல் கதை' திரைப்படம் இயக்குனரின் சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திரா காந்தி விருதை வென்றது.

நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கி, இந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை குவித்துள்ள ராதிகா இன்றும் தன் நடிப்பு திறமையால் மிளிர்கிறார். இவர் தற்போது பல டாப் ஹீரோக்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை ராதிகா ஒரு படத்தை விமர்சித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'எந்தப் படத்தையாவது பார்த்து கிரிஞ்சா இருக்குனு யாருக்காவது தோணிருக்கா? இந்த படத்தை பார்க்கும் பொழுது வாமிட் வரும் அளவிற்கு கோபம் வருது' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனிமல் மற்றும் ஹனுமான் திரைப்படத்தை ராதிகா விமர்சிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Have anyone cringed watching a movie? I wanted to throw up watching a particular movie????so so angry
— Radikaa Sarathkumar (@realradikaa) January 27, 2024
- சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’.
- இந்த படத்தின் பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

கங்குவா போஸ்டர்
அதன்படி, 'கங்குவா' படத்தில் பாபி தியோலின் 'உதிரன்' கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. பாபி தியோல் சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ruthless. Powerful. Unforgettable?️
— Studio Green (@StudioGreen2) January 27, 2024
Happy Birthday to our #Udhiran, #BobbyDeol sir✨ #Kanguva ? #HBDBobbyDeol @thedeol@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @GnanavelrajaKe @UV_Creations @KvnProductions @PenMovies @NehaGnanavel @saregamasouth pic.twitter.com/wMms4HzOqP
- ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
- இந்த திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், 'லால் சலாம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜலாலி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சரத் சந்தோஷ் பாடியுள்ள இந்த பாடலில் 'ஏய் நீ ஆட்டாத வால்.. கிட்ட வந்தா நீ ஹலால்' போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- அசோக் செல்வன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘புளூ ஸ்டார்’.
- இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். 'புளூ ஸ்டார்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இதையடுத்து இந்த திரைப்படம் அரக்கோணம் சிந்து தியேட்டரில் வெளியானது. நேற்று இந்த தியேட்டருக்கு நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, நடிகை கீர்த்தி பாண்டியன் மற்றும் இயக்குனர் ஜெயக்குமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பேசினர்.

அப்போது பேசிய இயக்குனர் ஜெயக்குமார் தனது பள்ளி பருவத்தை நினைவு கூர்ந்தார் .மேலும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து அரக்கோணத்தில் இந்த படம் எடுக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி என கூறினார்.
- பவதாரிணியின் உடல் சென்னை தியாகராய நகர் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
- பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் உயிரிழந்தார்.
இசை விழா ஒன்றுக்காக இலங்கை சென்றிருந்த இளையராஜாவுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரிக்கு சென்று பவதாரிணியின் உடலை பார்த்து கண் கலங்கினார்.
47 வயதே ஆன பாடகி பவதாரிணியின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பவதாரிணியின் உடலை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மாலை பவதாரிணியின் உடல் சென்னை தியாகராய நகர் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதைப்போல நடிகர்கள் சிவகுமார், ராமராஜன், விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், சதீஷ், ஆனந்த்ராஜ், உதயா, விஜய்யின் தாயாரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர், காயத்ரி ரகுராம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, எழில், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுதா கொங்கரா, சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்ட பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஏராளமான பொதுமக்களும் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பவதாரிணியின் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தெலுங்கு முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சித்தலைவருமான பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரிணியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று (சனிக்கிழமை) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
பவதாரிணியின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- 'லால் சலாம்' படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
- நான் எனது தந்தையை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி.
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள புதிய படம் 'லால் சலாம்'. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலா் நடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. 'லால் சலாம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நேற்று இரவு நடந்தது.
இந்த விழாவில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது:-
இது ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம். 'லால் சலாம்' படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
நான் எனது தந்தையை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கூறும்போது மிகவும் கோபமாக இருந்தது. இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும், எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்தால் 'லால் சலாம்' படத்தில் இருக்க மாட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மகளின் பேச்சை கேட்ட ரஜினிகாந்த் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி போனார்.
- தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது.
- விஜயை போட்டியாக நினைப்பதோ, என்னை அவர் போட்டியாக நினைப்பதோ இருவருக்கும் கவுரவம் ஆகாது.
லால் சலாம் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில கலந்து கொண்ட ரஜினி காந்த் பேசியதாவது:-
விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் சூட்டிங்போது விஜய்க்கு 13, 14 வயசு இருக்கும். சூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தார். சூட் முடிஞ்சதும் சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார்.
"என் பையன். நடிப்புல ரொம்ப ஆர்வம் இருக்கு. படித்த முடித்த பிறகு நடிக்கலாம் என நீங்க சொல்லுங்க" எனத் தெரிவித்தார். நான் விஜயிடம் "நல்லா படிப்பா. அதன்பின் நடிகர் ஆகலாம் என்று சொன்னேன்.
அதன்பின் விஜய் நடிகராகி, படிப்படியாக அவருடைய டிசிப்ளின், திறமை, உழைப்பால் தற்போது இந்த உயர்வான இடத்துல இருக்கிறார். சமூக சேவை செய்து வருகிறார். அடுத்து அரசியல்... இதுல எனக்கும் விஜய்க்கும் போட்டி என சொல்வது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிறது.
தயவு செய்து ரெண்டு பேரின் ரசிகர்களும் எங்களை ஒப்பிட வேண்டாம். ஒப்பிடுவதை நிறுத்துங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்.
நான் கூறிய காக்கா- கழுகு கதை விஜயை விமர்சித்து கூறியதாக பலர் தவறாக புரிந்து கொண்டனர். விஜயை விமர்சித்ததாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது வருத்தம் ஏற்படுத்தியது.
விஜய் படிப்படியாக வளர்ந்து பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார். விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை. எனக்கு நானே போட்டி. விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுகின்றனர். எனக்கு என் படங்களே போட்டி. அவருக்கு அவரே போட்டி. விஜயை போட்டியாக நினைப்பதோ, என்னை அவர் போட்டியாக நினைப்பதோ இருவருக்கும் கவுரவம் ஆகாது.
என்றும் நான் விஜயின் நலம் விரும்பியாக இருப்பேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
- இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று இரவு காலமானார்.
- அவரது உடல் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது.
சென்னை:
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இளையராஜா தனது எக்ஸ் தளத்தில், அன்பு மகளே என பதிவிட்டு பவதாரிணியின் சிறுவயது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
- பவதாரிணி உடல் விமானம் மூலம் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
- அவரது உடலுக்கு நடிகர்கள், இயக்குனர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை:
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையம் வந்தடைந்த பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது.
பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்களும், திரை பிரபலங்களும் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர்கள் ராமராஜன், சிவகுமார், விஜய் ஆண்டனி, ஆனந்த்ராஜ், ஸ்ரீகாந்த், இயக்குனர் வெற்றிமாறன், கேயார் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் விஷால், கார்த்திக் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
- கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார்.
- இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இலங்கையில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு தி. நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பவதாரணி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, "பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது. இளையராஜாவை தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தேன்" என்றார்.






