அரக்கோணம் திரையரங்கிற்கு வந்த Blue Star படக்குழு

அசோக் செல்வன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘புளூ ஸ்டார்’.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
அரக்கோணம் திரையரங்கிற்கு வந்த Blue Star படக்குழு
Published on

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். 'புளூ ஸ்டார்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இதையடுத்து இந்த திரைப்படம் அரக்கோணம் சிந்து தியேட்டரில் வெளியானது. நேற்று இந்த தியேட்டருக்கு நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, நடிகை கீர்த்தி பாண்டியன் மற்றும் இயக்குனர் ஜெயக்குமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பேசினர்.

அப்போது பேசிய இயக்குனர் ஜெயக்குமார் தனது பள்ளி பருவத்தை நினைவு கூர்ந்தார் .மேலும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து அரக்கோணத்தில் இந்த படம் எடுக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com