என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இளையராஜா மகள் பவதாரிணி நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.
    • அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

    சென்னை:

    கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையம் வந்தடைந்த பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சுதா கொங்கரா, நடிகர் பிரேம்ஜி, பாரதிராஜா மகன் மனோஜ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். பொதுமக்களும், திரை பிரபலங்களும் குவிந்து வருகின்றனர்.

    இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் இன்று இரவு 10 மணியளவில் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது என தகவல் வெளியானது.

    • சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அயலான்'.
    • இப்படம் இதுவரை ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

    ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அயலான்' தான். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 'அயலான்' திரைப்படம் இரண்டு வாரங்களில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

    இதையடுத்து 'அயலான்' படக்குழுவினர் சமூக வலைதளத்தில் நேரலையில் வந்து பல கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் 'அயலான்' படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக தெரிவித்தார்.


    அதில், 'ரஜினிகாந்த் சார் அயலான் படத்தை பார்த்துவிட்டு என்னை போனில் அழைத்து பாராட்டினார். நான், சார் உங்களின் எந்திரன் மற்றும் 2.0 படம் தான் எனக்கு உந்துதலாக இருந்தது என்றேன். ஆனால் அவர், இப்போது நீங்கள்தான் என் உத்வேகம். 'மாவீரன்', 'அயலான்' என ரசிகர்களுக்கு புதிதாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், பெரிதாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். படம் மிக பிரமாண்டமாக இருந்தது" என்று கூறினார்.

    • சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்".
    • இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷகீலா நடித்துள்ளார்.

    இயக்குனர் சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்". இந்த படத்தில் சாய் பிரபா மீனா, ராஜ் மித்ரன், மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ஆஷா, கவிதா, சங்கீதா, கீர்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ஷகீலா நடித்துள்ளார்.


    சாய் ராம் ஏவிஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன் மற்றும் எஸ்.பி.எம். பிக்சர்ஸ் சாய் சரண் இணைந்து வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் ராம் இசையமைக்க பால்பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் மீசை ராஜேந்திரன் பேசியதாவது, என்னை சினிமாவிலும் அரசியலிலும் அறிமுகப்படுத்திய விஜயகாந்திற்கு என் வணக்கம். கேப்டன் 53 இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அதே போல் இயங்கி வரும் ஜெய் ஆகாஷுக்கு என் வாழ்த்துக்கள். என் வெற்றிக்கு என் வாழ்வுக்கு காரணம் சினிமா தான். சினிமா பலரை வாழவைக்கிறது.


    சினிமா பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சினிமா தெரியாமலே இன்று நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சினிமா மிக பவர்ஃபுல்லானது. அதில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. சாய் பிரபாவின் இரண்டு படத்திலும் நான் நடித்துள்ளேன், மிகப்பெரிய உழைப்பாளி. இந்தப்படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துகள் நன்றி என்றார்.

    • இயக்குனர் ஏ. காளீஸ்வரன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.

    இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'விடி18' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


    கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

    இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


    'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்', 'ஜவான்' என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ.. திரைத்துறையில் தன்னுடைய உதவியாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக ஏ ஃபார் ஆப்பிள் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இந்நிறுவனம் சார்பில் 'சங்கிலி புங்கிலி கதவை திற' மற்றும் 'அந்தகாரம்' என இரண்டு திரைப்படங்களை தயாரித்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியையும் பெற்றிருக்கிறார்.


    இதனிடையே தமிழில் வெற்றிகரமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்த அட்லீ.. தற்போது இந்தி திரையுலகில் ஷாருக்கானின் 'ஜவான்' படத்தை இயக்கி, அங்கும் இயக்குனராக தன்னுடைய வெற்றியைத் தொடர்கிறார் என்பதும், தற்போது இந்தி திரைப்படத்தை தயாரிப்பதன் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராகி, அங்கும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.
    • இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


    கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பவதாரிணிக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா Our hearts are with you in this time of sorrow" என்று குறிப்பிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பவதாரிணி சிகிச்சை பலனின்றி காலமானார்.
    • பவதாரிணி உடலுடன் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு உள்ளனர்.

    இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி (வயது 47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் நேற்று காலமானார். கல்லீரல் புற்றுநோய் பாதிப்பினால் இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பவதாரிணி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.


    பவதாரிணி மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சமூக வலைதளத்தில் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாடகி பவதாரிணி உடல் இலங்கை, கொழும்புவில் இருந்து சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பவதாரிணி உடலுடன் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு உள்ளனர். விமான நிலைய விதிமுறைகள் முடிந்தவுடன் அவரது உறவினர்களிடம் பவதாரிணி உடலை ஒப்படைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.


    சென்னை, தியாகராயநகரில் உள்ள இளையராஜா வீட்டில் பவதாரிணி உடல் பொது மக்கள் மற்றும் திரை உலகினர் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் தீரஜ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அறிமுக இயக்குனர் மீரா மஹதி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'டபுள் டக்கர்'. தீரஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், இரண்டு அழகான அனிமேஷன் கதாபாத்திரங்கள் அவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளது. இது பார்வையாளர்களுக்கு மிகப்புதுமையான சினிமா அனுபவமாக இருக்கும்.

    மேலும், ஸ்ம்ருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏர் பிலிக்ஸ் புரொடக்ஷன் (Air Flick Production) தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைக்க கவுதம் ஒளிப்பதிவு செய்கிறார், வெற்றி படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தினை இந்த கோடையில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    • நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இந்திய நாட்டின் குடியரசு தினத்தை தங்கள் பாணியில் உற்சாகமாக கொண்டாடினர்.
    • நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.

    நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோர்டான் நாட்டில் பிரபல பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் குடியசு தின விழாவை உற்சாகமாக கொண்டாடினார். 'படே மியான் சோட்மியான்' படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் தற்போது நடந்து வருகிறது.

    இந்த படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இந்திய நாட்டின் குடியரசு தினத்தை தங்கள் பாணியில் உற்சாகமாக கொண்டாடினர்.

    ஜோர்டான் நாட்டு கடற்கரையில் இருவரும் இன்று அதிகாலை பெரிய அளவிலான மூவர்ண கொடியை கையில் ஏந்தியவாறு உற்சாகமாக ஓடி, குடியரசு தினவிழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர். பின்னணியில் ஒலிக்கும் வந்தே மாதரம் பாடலுடன் ஜோர்டான் கடற்கரையில் இருவரும் ஓடியவாறு எடுக்கப்பட்ட வீடியோ நாட்டின் தேச உணர்வைத் தூண்டுவதாக அமைந்தது.

    இந்த வீடியோவை 'எக்ஸ்' தள பக்கத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.


    • பவதாரிணி நேற்று இலங்கையில் காலமானார்.
    • இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


    கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சகோதரி பவதாரிணி மறைவு ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு பாரதிராஜா வீட்டு நிகழ்ச்சியில் அவரை சந்தித்தேன். மிகவும் நன்றாக பேசினார். ரொம்ப எளிமையான ஒரு மனிதர். இளையராஜா சார், கார்த்தி மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வருதத்துடன் தெரிவித்துள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'சைரன்'.
    • இப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், 'சைரன்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடலான 'நேற்று வரை' பாடலின் லிரிக் வீடியோ 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • பவதாரிணி நேற்று காலமானார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


    கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் வடிவேலு வருதத்துடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மாரீசன் படத்திலிருந்து இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே இந்த அதிர்ச்சியான செய்தி என்னை அப்படியே நிலைகுலையச் செய்துவிட்டது. அருமை அண்ணன் இசைஞானி அவருடைய தங்க மகள் பவதாரிணி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு ஒன்றும் புரியவில்லை. 47 வயது பெண். அவர் இறந்த செய்தி நெஞ்சமெல்லாம் நொறுங்கிவிட்டது.


    பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல. அது ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். அவருடைய மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் அனைவரும் இன்னைக்கு நொறுங்கிப்போய் இருக்கிறார்கள். தைப்பூச நாளில் பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் இளைப்பாருவார்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என அழுதபடி ஆடியோவை வெளியிட்டுள்ளார்.


    • ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'.
    • இப்படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசையமைத்துள்ளார்.

    'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

    மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


    இதில் இசையமைப்பாளர் மிஷ்கின் பேசியதாவது, வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்.


    ஒரு படத்தை  நீங்கள் உண்மையாக  எடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த படத்திற்குள் கேளிக்கைகள்,  சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கலாம். அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று சொல்வேன். அதுதான்  திரைப்படத்திற்கான உயிர்.  நான் விதார்த்திடம் நீ இன்னும் 50 வருடம் நடித்துக் கொண்டிருப்பாய்… என்று கூறினேன். அவன் சினிமா இல்லை என்றால் இறந்துவிடுவான்… சினிமாவில் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்கும் நபர் விதார்த்.. நானும் அப்படித்தான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன். விஜய் சேதுபதியைப் போல் விதார்த் முகத்திலும் தமிழ் லான்ஸ்கெப் இருக்கும்.


    Living truthfully in an imaginary situation  என்பது நடிப்பு பற்றி கொடுக்கப்படும் விளக்கம். நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர், நடிகைகள் என்பேன்.. பூர்ணா அந்த மாதிரியான நடிகை. சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன்… அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா… பூர்ணாவின் குழந்தை காலை எடுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன்.. அது போல் தான் பூர்ணாவின் காலையும்… பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என்னையும் அவளையும் குறித்து சிலர் தவறாகப் பேசுவார்கள். அவள் எனக்குத் தாய் போன்றவள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள்.


    என் தம்பி மிக எளிமையானவன், வாழ்க்கையின் கஷ்டங்களை இப்பொழுது புரிந்து கொள்ள துவங்கியிருக்கிறான்…. அவன் மொழியில் வளமை இல்லை என்றாலும் உணர்வு இருக்கிறது… வெற்றிமாறனுக்குப் பிறகு நாவலில் இருந்து கதையை எடுத்திருக்கிறான்… அந்த ஸ்கிரிப்டில் என்னை தலையிடக்கூடாது என்று  சொல்லிட்டான்.. இன்றுவரை அந்த ஸ்கிரிப்டை எனக்கு படிக்க கொடுக்கவில்லை. கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன்… வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எதற்காக வாழ வேண்டும் என்பதற்கான கேள்விகளின் பதில் இருப்பதால் இப்படம் நல்ல படம் என்பேன்… சில முயற்சிகள் எடுத்திருக்கிறான்… மிகச்சிறந்த படம் என்று சொல்வதற்கில்லை.


    ஒரு பெண்ணின் உணர்வு நிலையில் ஏற்படும் குழப்பநிலை இது காதலா.. இல்லை காமமா என்கின்ற குழப்பத்தை பதிவு செய்திருக்கிறான்… இசையில் நூறு மார்க் வாங்குபவர்கள் எப்பொழுதும் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தான். நான் இளையராஜா ஐயாவிடம் இருந்து சண்டை போட்டு வந்ததற்குப் பின்னர் 6 ஆண்டுகளாக இசையை கற்று வருகிறேன்… இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டதும் ஏற்றுக் கொண்டு இசையமைத்து இருக்கிறேன்…. என் இசைக்கு  35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன்… தம்பி படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும்… நன்றாக இல்லை என்றால், ஓடாது… பரவாயில்லை. தொடர்ச்சியாக நீ ஓடு… தோல்வி என்பது ஒன்றுமே இல்லை.  நீ தொடர்ச்சியாக ஓடிக் கொண்டே இரு.. இந்த நிகழ்விற்கு வந்த அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.

    ×