சினிமாவில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல- மீசை ராஜேந்திரன்

சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்".இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷகீலா நடித்துள்ளார்.
சினிமாவில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல- மீசை ராஜேந்திரன்
Published on

இயக்குனர் சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்". இந்த படத்தில் சாய் பிரபா மீனா, ராஜ் மித்ரன், மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ஆஷா, கவிதா, சங்கீதா, கீர்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ஷகீலா நடித்துள்ளார்.

சாய் ராம் ஏவிஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன் மற்றும் எஸ்.பி.எம். பிக்சர்ஸ் சாய் சரண் இணைந்து வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் ராம் இசையமைக்க பால்பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் மீசை ராஜேந்திரன் பேசியதாவது, என்னை சினிமாவிலும் அரசியலிலும் அறிமுகப்படுத்திய விஜயகாந்திற்கு என் வணக்கம். கேப்டன் 53 இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அதே போல் இயங்கி வரும் ஜெய் ஆகாஷுக்கு என் வாழ்த்துக்கள். என் வெற்றிக்கு என் வாழ்வுக்கு காரணம் சினிமா தான். சினிமா பலரை வாழவைக்கிறது.

சினிமா பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சினிமா தெரியாமலே இன்று நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சினிமா மிக பவர்ஃபுல்லானது. அதில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. சாய் பிரபாவின் இரண்டு படத்திலும் நான் நடித்துள்ளேன், மிகப்பெரிய உழைப்பாளி. இந்தப்படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துகள் நன்றி என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com