நீங்கள்தான் என் உத்வேகம்- அயலானை பாராட்டிய எந்திரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அயலான்'.இப்படம் இதுவரை ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
நீங்கள்தான் என் உத்வேகம்- அயலானை பாராட்டிய எந்திரன்
Published on

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அயலான்' தான். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 'அயலான்' திரைப்படம் இரண்டு வாரங்களில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

இதையடுத்து 'அயலான்' படக்குழுவினர் சமூக வலைதளத்தில் நேரலையில் வந்து பல கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் 'அயலான்' படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக தெரிவித்தார்.

அதில், 'ரஜினிகாந்த் சார் அயலான் படத்தை பார்த்துவிட்டு என்னை போனில் அழைத்து பாராட்டினார். நான், சார் உங்களின் எந்திரன் மற்றும் 2.0 படம் தான் எனக்கு உந்துதலாக இருந்தது என்றேன். ஆனால் அவர், இப்போது நீங்கள்தான் என் உத்வேகம். 'மாவீரன்', 'அயலான்' என ரசிகர்களுக்கு புதிதாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், பெரிதாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். படம் மிக பிரமாண்டமாக இருந்தது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com