என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'.
    • இப்படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசையமைத்துள்ளார்.

    'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

    மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


    இதில் இசையமைப்பாளர் மிஷ்கின் பேசியதாவது, வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்.


    ஒரு படத்தை  நீங்கள் உண்மையாக  எடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த படத்திற்குள் கேளிக்கைகள்,  சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கலாம். அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று சொல்வேன். அதுதான்  திரைப்படத்திற்கான உயிர்.  நான் விதார்த்திடம் நீ இன்னும் 50 வருடம் நடித்துக் கொண்டிருப்பாய்… என்று கூறினேன். அவன் சினிமா இல்லை என்றால் இறந்துவிடுவான்… சினிமாவில் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்கும் நபர் விதார்த்.. நானும் அப்படித்தான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன். விஜய் சேதுபதியைப் போல் விதார்த் முகத்திலும் தமிழ் லான்ஸ்கெப் இருக்கும்.


    Living truthfully in an imaginary situation  என்பது நடிப்பு பற்றி கொடுக்கப்படும் விளக்கம். நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர், நடிகைகள் என்பேன்.. பூர்ணா அந்த மாதிரியான நடிகை. சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன்… அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா… பூர்ணாவின் குழந்தை காலை எடுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன்.. அது போல் தான் பூர்ணாவின் காலையும்… பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என்னையும் அவளையும் குறித்து சிலர் தவறாகப் பேசுவார்கள். அவள் எனக்குத் தாய் போன்றவள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள்.


    என் தம்பி மிக எளிமையானவன், வாழ்க்கையின் கஷ்டங்களை இப்பொழுது புரிந்து கொள்ள துவங்கியிருக்கிறான்…. அவன் மொழியில் வளமை இல்லை என்றாலும் உணர்வு இருக்கிறது… வெற்றிமாறனுக்குப் பிறகு நாவலில் இருந்து கதையை எடுத்திருக்கிறான்… அந்த ஸ்கிரிப்டில் என்னை தலையிடக்கூடாது என்று  சொல்லிட்டான்.. இன்றுவரை அந்த ஸ்கிரிப்டை எனக்கு படிக்க கொடுக்கவில்லை. கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன்… வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எதற்காக வாழ வேண்டும் என்பதற்கான கேள்விகளின் பதில் இருப்பதால் இப்படம் நல்ல படம் என்பேன்… சில முயற்சிகள் எடுத்திருக்கிறான்… மிகச்சிறந்த படம் என்று சொல்வதற்கில்லை.


    ஒரு பெண்ணின் உணர்வு நிலையில் ஏற்படும் குழப்பநிலை இது காதலா.. இல்லை காமமா என்கின்ற குழப்பத்தை பதிவு செய்திருக்கிறான்… இசையில் நூறு மார்க் வாங்குபவர்கள் எப்பொழுதும் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தான். நான் இளையராஜா ஐயாவிடம் இருந்து சண்டை போட்டு வந்ததற்குப் பின்னர் 6 ஆண்டுகளாக இசையை கற்று வருகிறேன்… இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டதும் ஏற்றுக் கொண்டு இசையமைத்து இருக்கிறேன்…. என் இசைக்கு  35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன்… தம்பி படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும்… நன்றாக இல்லை என்றால், ஓடாது… பரவாயில்லை. தொடர்ச்சியாக நீ ஓடு… தோல்வி என்பது ஒன்றுமே இல்லை.  நீ தொடர்ச்சியாக ஓடிக் கொண்டே இரு.. இந்த நிகழ்விற்கு வந்த அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.

    • சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’.
    • இப்படத்தினை சிவா இயக்கியுள்ளார்.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.


    கங்குவா போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கங்குவாவின் வலிமைமிக்க 'உதிரன்' நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. கையில் ரத்தத்தில் நனைந்த தங்க காசுகள் உள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • பின்னணி பாடகியாக வலம் வந்தவர் பவதாரிணி.
    • இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.


    47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.


    இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தேசிய விருதுபெற்ற

    பாடகி பவதாரிணியின் மறைவு

    அதிர்ச்சியும் கவலையும் தருகிறது

    துயர்ப்படும்

    உள்ளங்களுக்கெல்லாம்

    ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை.
    • இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்.

    சென்னை :

    இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,


    மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

    • வைஜெயந்திமாலா, சிரஞ்சீவு, வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஐந்து பேர் விபூஷன் விருது பெறுகிறார்கள்.
    • விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேர் பத்ம பூஷன் விருது பெறுகிறார்கள்.

    2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன.

    இந்நிலையில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 28-ம்தேதி விஜயகாந்த் காலாமானார்.

    பத்ம விபூஷன் விருது பெறுபவர்களின் விவரம்:-

    1. வைஜெயந்திமாலா- தமிழ்நாடு, 2. சிரஞ்சீவி- ஆந்திரப் பிரதேசம், 3. வெங்கையா நாயுடு - ஆந்திரப் பிரதேசம், 4. ஸ்ரீ பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப்பின்) - பீகார், 5. பத்மா சுப்ரமணியம்- தமிழ்நாடு

    பத்ம பூஷன் விருது:

    6. விஜயகாந்த் (மரணத்திற்குப் பின்) - தமிழ்நாடு, 7. ஹோர்முஸ்ஜி- மகாராஷ்டிரா, 8. மிதுன் சக்ரவர்த்தி- மேற்கு வங்காளம், 9. சீதாராம் ஜிண்டால்- கர்நாடகா, 10. யங் லியு- தைவான், 11. அஷ்வின் பாலசந்த்- மகாராஷ்டிரா, 12. சத்யபிரதா முகர்ஜி (மரணத்திற்குப் பின்)- மேற்கு வங்காளம், 13. ராம் நாயக் - மகாராஷ்டிரா, 14. தேஜஸ் மதுசூதன் படேல்- குஜராத், 15. ஓலஞ்சேரி ராஜகோபால்- கேரளா, 16. ராஜ்தத்- மஹாராஷ்டிரா, 17. டோக்டன் ஆர்ஹூம்போ) மற்றவை - ஆன்மிகம் - லடாக், 18. பியாரேலால் சர்மா- மகாராஷ்டிரா, 19. சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர்- பீகார், 20. உஷா உதுப்- மேற்கு வங்காளம், 21. பாத்திமா பீவி (மரணத்திற்குப் பின்)- கேரளா, 22. குந்தன் வியாஸ் - மகாராஷ்டிரா

    • நடிகை ரேவதி இயக்கிய 'மித்ர் மை பிரண்ட்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
    • இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.

    பின்னணி பாடகி பவதாரிணி, தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர். இவரது மென்மையான குரலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

    இவர் திரை பின்னணி பாடகி, இசையமைப்பாளர், இளையராஜவின் மகள், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி.

    பவதாரிணி அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய 'மயில்போல பொண்ணு ஒண்ணு..' பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

    முதன்முதலாக 'ராசய்யா அப்படீங்கற' படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப்பாடல் பெரிய ஹிட்டானதையடுத்து, இவர் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். தேவா, சிற்பி ஆகியோருக்கும் பாடியுள்ளார்.

    இவர் நடிகை ரேவதி இயக்கிய 'மித்ர் மை பிரண்ட்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் தெலுங்கு பட உலகில் நுழைந்தார். இவர் ரேவதி இயக்கிய 'பிர் மிலேங்கே' படத்திற்கும் இசையமைத்தார். இதுபோன்று சுமார் 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    மேலும், இவர் 'வெள்ளிச்சி' என்ற கிராமப்புற இசைக்கு நல்ல பெயர் வாங்கினார். 

    அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் படு ஹிட்டானது. மேலும், இவர் பாடிய கல பாடல்கள் ஹிட்டானது. அதில் குறிப்பிடும்படியானவை, உல்லாசம் படத்தில் 'முத்தே முத்தம்மா', தனுஷ் நடித்த படத்தில் இவர் பாடிய ஹிட்டான பாடல் 'ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா..' என்பதாகும்.

    இதைத்தவிர, அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, டைம், பிரண்ட்ஸ், தாமிரபரணி, கோவா, மங்காத்தா உள்பட 23 படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மலையாளத்திலும் பவதாரிணி சில பாடல்களை பாடியுள்ளார்.

    இவர் வித்யாசமான குரல் வளம் கொண்டவர். இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.

    • ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
    • கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர்.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி சற்றுமுன் காலமாகி இருக்கிறார். அவர் புற்றுநோயால் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், இலங்கையில் அவர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது சுமார் 47.

    கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர். இலங்கையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இன்று மாலை 5. 20 மணிக்கு மரணம் அடைந்தார்.

    இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. பவதாரிணியின் கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். தம்பதிக்கு குழந்தை இல்லை.

    • சூரி நடிக்கும் திரைப்படம் ‘கருடன்’.
    • இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

    இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருடன்'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'கருடன்' படத்திற்கு ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கருடன்' படத்தின் டப்பிங் பணியை நடிகர் சூரி இன்று தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை சூரி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சூரி ஆவேசமாக பேசும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டெவில்".
    • "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் மிஷ்கின்.

    'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.


    மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.


    இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பெருந்திணை' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.




    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் 'தக் லைஃப்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • கமலின் 233-வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 234-வது படமான 'தக் லைஃப்' திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.


    இதைத்தொடர்ந்து கமலின் 233-வது படத்தை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்குவதாக கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படம் அரசியல் சம்பந்தமான திரைப்படம் என்றும் கூறப்பட்டது.


    இந்நிலையில், கமலின் 233-வது படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. அதாவது, கமல் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் எச்.வினோத் இயக்கும் 233-வது படம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீகாந்த் தேவா பக்தி பரவச பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.
    • இந்த பாடலை 'சூப்பர் சிங்கர்' ஸ்ரீநிதா மற்றும் அக்ஷரா லஷ்மி பாடியுள்ளனர்.

    சமீபத்தில் தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, முருகப்பெருமான் குறித்த பக்தி பரவச பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

    தேசிய விருது பெற்ற இயக்குனர் பவண் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஆடியோவாகவும், வீடியோவாகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ள இந்த பாடலை பிரபல நடிகரும் முருக பக்தருமான யோகிபாபுவும், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டியும் வெளியிட்டனர்.


    'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர் ஸ்ரீநிதா மற்றும் சூப்பர் சிங்கர் அக்ஷரா லஷ்மி பாடியுள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் மெய் சிலிர்த்து கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது.


    இந்த பாடலைப் பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறியதாவது, "வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் மூலம் வெளியாக உள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் முருக கடவுளின் பாடல்களில் வரும் காலங்களில் முக்கிய இடத்தை பெறும். முருகப் பெருமானைப் பற்றி குழந்தைகள் கூட பக்தியோடு பாட வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய மெட்டில், எளிய தமிழில் இதை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலை கேட்டு தைப்பூசத்தில் முருகனை தரிசனம் செய்து, முருக பக்தியில் எந்நாளும் திளைத்திடுவோம்" என்றார்.


    பாடலை எழுதிய இயக்குனர் பவண், "இந்த வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். சொல்ல சொல்ல இனிக்கும், அள்ள அள்ள அருளும் முருகப்பெருமானை பற்றிய அருமையான பாடல் அவன் அருளாலே மிகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.
    • பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

    இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது.

    பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 6.30 மணியில் இருந்தே மாவட்ட தலைவர்கள் வரத் தொடங்கினர். விஜய் காலை 9 மணிக்கு வந்தார். அதைத்தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றது.

    இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு விரைவில் விஜயிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும் என்றும் கட்சி கொடி, சின்னம் மற்றும் வண்ணங்கள் முடிவு செய்யும் பணி தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×