இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி காலமானார்

ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர்.
இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி காலமானார்
Published on

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி சற்றுமுன் காலமாகி இருக்கிறார். அவர் புற்றுநோயால் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், இலங்கையில் அவர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது சுமார் 47.

கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர். இலங்கையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இன்று மாலை 5. 20 மணிக்கு மரணம் அடைந்தார்.

இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. பவதாரிணியின் கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். தம்பதிக்கு குழந்தை இல்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com