என் மலர்
சினிமா செய்திகள்
- ஸ்ரீகாந்த் தேவா பக்தி பரவச பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.
- இந்த பாடலை 'சூப்பர் சிங்கர்' ஸ்ரீநிதா மற்றும் அக்ஷரா லஷ்மி பாடியுள்ளனர்.
சமீபத்தில் தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, முருகப்பெருமான் குறித்த பக்தி பரவச பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் பவண் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஆடியோவாகவும், வீடியோவாகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ள இந்த பாடலை பிரபல நடிகரும் முருக பக்தருமான யோகிபாபுவும், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டியும் வெளியிட்டனர்.

'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர் ஸ்ரீநிதா மற்றும் சூப்பர் சிங்கர் அக்ஷரா லஷ்மி பாடியுள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் மெய் சிலிர்த்து கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது.

இந்த பாடலைப் பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறியதாவது, "வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் மூலம் வெளியாக உள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் முருக கடவுளின் பாடல்களில் வரும் காலங்களில் முக்கிய இடத்தை பெறும். முருகப் பெருமானைப் பற்றி குழந்தைகள் கூட பக்தியோடு பாட வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய மெட்டில், எளிய தமிழில் இதை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலை கேட்டு தைப்பூசத்தில் முருகனை தரிசனம் செய்து, முருக பக்தியில் எந்நாளும் திளைத்திடுவோம்" என்றார்.

பாடலை எழுதிய இயக்குனர் பவண், "இந்த வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். சொல்ல சொல்ல இனிக்கும், அள்ள அள்ள அருளும் முருகப்பெருமானை பற்றிய அருமையான பாடல் அவன் அருளாலே மிகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்றார்.
- பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.
- பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார்.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.
இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது.
பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 6.30 மணியில் இருந்தே மாவட்ட தலைவர்கள் வரத் தொடங்கினர். விஜய் காலை 9 மணிக்கு வந்தார். அதைத்தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு விரைவில் விஜயிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும் என்றும் கட்சி கொடி, சின்னம் மற்றும் வண்ணங்கள் முடிவு செய்யும் பணி தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'ரெபெல்'.
- இப்படத்தை நிக்கேஷ் இயக்கியுள்ளார்.
அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 'ரெபெல்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மார்ச் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நடிகர் ஷாந்தனு 'புளூ ஸ்டார்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை எஸ்.ஜெயகுமார் இயக்கியுள்ளார்.
இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். 'புளூ ஸ்டார்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் ஷாந்தனு தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், 'சக்கரக்கட்டி' முதல் 'புளூ ஸ்டார்'வரையிலான இந்த பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. வாழ்க்கை முழுவதும் நினைத்து பார்க்கக்கூடிய நிறைய நல்ல நினைவுகளை கொடுத்தது. உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம்தான் 'புளூ ஸ்டார்'. இன்று முதல் உலகமெங்கும் வெளியாகிறது. திரையரங்கிற்கு சென்று பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு இந்த படம் பிடிக்கும். ஜெயிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
- விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்னம்’.
- இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை போன்ற இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

ரத்னம் போஸ்டர்
இந்நிலையில், 'ரத்னம்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
Save the date for our biggie this summer ?#Rathnam hits the screens on the 26th of April 2024. In Tamil and Telugu.
— Vishal (@VishalKOfficial) January 25, 2024
A film by #Hari. Coming to theatres, summer 2024.
A @ThisisDSP musical. @stonebenchers @ZeeStudiosSouth @mynnasukumar @dhilipaction @PeterHeinOffl… pic.twitter.com/LZVCh2omLI
- இயக்குனர் பார்த்திபன் 'டீன்ஸ்' திரைப்படத்தை இயக்குகிறார்.
- இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகுகிறது.
இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் நடிகர்-இயக்குனரான பார்த்திபன் 'டீன்ஸ்' எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்.

இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார் . ஒளிப்பதிவு பணிகளை காவ்மிக் ஆரி மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் பார்த்திபன் முதல் முறையாக இணைந்துள்ளார். இமான் மற்றும் காவ்மிக் ஆரியின் சிறந்த படைப்புகளில் முன்னணி வகிக்கும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஆர். சுதர்சன் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், 'டீன்ஸ்' திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே சாதனை படைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, 'டீன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோ முதல்முறையாக சென்சார் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனை உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து பாராட்டியுள்ளது.

இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இயக்குனர் பார்த்திபன், "TEENZ-first look-released in theatres with a censor certificate, இதுக்காக world book of records ஒரு சான்றிதழ் வழங்கினார்கள். அதை இ(சை)மானுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்க நேற்று ஒரு சின்ன மேடையமைத்துக் கொண்டாடினோம். இனி 'Teenz' உங்கள் மனதில் இடம் பெற தொடர் முயற்சிகள் முடுக்கி விடப்படும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார்.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், அன்னதானம் மற்றும் குழந்தைகளுக்கு பால், ரொட்டி, சத்துணவுகள் வழங்கி வருகிறார்கள்.
அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.
இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 6.30 மணியில் இருந்தே மாவட்ட தலைவர்கள் வரத் தொடங்கினர். விஜய் காலை 9 மணிக்கு வந்தார். அதைத்தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- 'அயலான்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
- இப்படம் முதல் வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக படக்குழு அறிவித்தது.
ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அயலான்' தான். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இப்படம் வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

அயலான் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அயலான்' திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Dominating across galaxies, it's a celestial collection from all around ?#Ayalaan - Soaring over 75+ crores worldwide ?@Siva_Kartikeyan @TheAyalaan 'Chithha' #Siddharth @arrahman @Ravikumar_Dir @KJRuniverse @Phantomfxstudio @bejoyraj @Gangaentertains @Hamsinient @SunTV… pic.twitter.com/IBhzzlmFO5
— KJR Studios (@kjr_studios) January 24, 2024
- சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்'.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'பேங் பேங்', 'வார்' படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்'. இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற கதாபாத்திரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், அனில் கபூர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் நாளை (ஜனவரி 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வான்வழியில் ஆக்ஷன், திரில்லர் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள 'ஃபைட்டர்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் 'ஃபைட்டர்' திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் மட்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து இயக்குனர் சித்தார்த் கூறியதாவது:-
'ஃபைட்டர்' லட்சியம் கொண்ட படம். 2024-ம் ஆண்டு மீண்டும் அதே பதட்டத்துடன் தொடங்குகிறது. பதான் மீது பொழிந்த அதே அன்பை ஃபைட்டருக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
- இயக்குனர் சேரன் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் சேரன் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராமதாஸாக நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கை படத்தில் அவரது இளம் வயது நிகழ்வுகள், டாக்டராக பணி செய்து கொண்டே பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களின் ஏழ்மை நிலையை அகற்றவும், கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், தனி ஒதுக்கீடு பெறவும் போராட்டங்கள் நடத்தியது மற்றும் அரசியல் கட்சி தொடங்கியது உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சேரன் கன்னட நடிகர் சுதீப் நடிக்கும் படத்தைத் தமிழ், கன்னடத்தில் இயக்குகிறார். அதை முடித்துவிட்டு மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கைக கதையை இயக்குவார் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
- டி.இமான் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
- இவர் 'விஸ்வாசம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவர் தற்போது இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் 'TEENZ' திரைப்படத்திற்கு பிசியாக இசையமைத்து வருகிறார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் டி. இமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிறந்த ஏழு பாடல்களுக்கும் தந்தையான டி.இமான் அவர்களுக்கு நன்றி. பின்னணி இசையிலும் தூள் கிளப்ப வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Good morning friends pic.twitter.com/V6ZjY2UWCY
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 24, 2024
- பிஜோய் நம்பியார் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "போர்". இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர், 'போர்' திரைப்படத்தை தயாரித்துள்ளனர். "போர்" திரைப்படம் கதை சொல்லலின் எல்லைகளைத் மாற்றியமைத்து, நமக்கு ஒரு வித்தியாசமான, பரபரப்பான அனுபவத்தை தரும் படைப்பாக இருக்கும்.

போர் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் இந்த போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. இதிலிருந்து பார்வையாளர்களை ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும், வித்தியாசமான சவாலைத் தருகிறது இந்த ஃபர்ஸ்ட் லுக்.






