என் மலர்
சினிமா செய்திகள்
- டி.இமான் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
- இவர் 'விஸ்வாசம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவர் தற்போது இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் 'TEENZ' திரைப்படத்திற்கு பிசியாக இசையமைத்து வருகிறார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் டி. இமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிறந்த ஏழு பாடல்களுக்கும் தந்தையான டி.இமான் அவர்களுக்கு நன்றி. பின்னணி இசையிலும் தூள் கிளப்ப வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Good morning friends pic.twitter.com/V6ZjY2UWCY
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 24, 2024
- பிஜோய் நம்பியார் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "போர்". இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர், 'போர்' திரைப்படத்தை தயாரித்துள்ளனர். "போர்" திரைப்படம் கதை சொல்லலின் எல்லைகளைத் மாற்றியமைத்து, நமக்கு ஒரு வித்தியாசமான, பரபரப்பான அனுபவத்தை தரும் படைப்பாக இருக்கும்.

போர் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் இந்த போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. இதிலிருந்து பார்வையாளர்களை ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும், வித்தியாசமான சவாலைத் தருகிறது இந்த ஃபர்ஸ்ட் லுக்.
- ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது.
- ஜெயிலராக நடித்திருக்கும் எமி ஜாக்சனும் அதிரடி ஆக்க்ஷனில் அனல் பறக்கவிடுகிறார்.
பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்களில் எந்த படம் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று அதிகம் எதிர்பார்ப்போம். அதில் ஏதாவது சில படங்கள் முன் வரிசையிலும் மற்றும் ஒரு சில படங்கள் அடுத்த வரிசையிலும் இருப்பதை நாம் சிறுவயது முதல் பார்த்திருக்கிறோம். இந்த தை பொங்கலில் வெளிவந்த படங்களான கேப்டன் மில்லர், அயலான், மெரி கிறிஸ்துமஸ், ஹனுமான் மற்றும் மிஷன் சாப்டர்-1 ஆகிய படங்களில் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது.

பொதுவாக படத்தில் சண்டை என்றால் ஹீரோவுடன் ஒருவர் அல்லது நான்கு பேர் மோதலாம் இதில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட் நடிகர்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் படம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் படத்தில் சண்டை காட்சிகள் பின்னி எடுத்திருக்காங்க என்றும், சண்டைக் காட்சிகள் மிகப்பிரமாண்டமாக இருக்கின்றது என்றும் சொல்கிறார்கள்.
இப்படத்தில் ஜெயிலராக நடித்திருக்கும் எமி ஜாக்சனும் அதிரடி ஆக்க்ஷனில் அனல் பறக்கவிடுகிறார். இதற்கு காரணம் சண்டை பயிற்சி இயக்குனர் 'ஸ்டண்ட் சில்வா தான்.

ஸ்டண்ட் சில்வா, இவர் இந்திய சினிமாவில் ஒரு மிக சிறந்த ஸ்டண்ட் இயக்குனர், ஸ்டண்ட் நடிகர், மற்றும் திரைப்பட இயக்குனரும் ஆவார். இந்தியாவின் மிக சிறந்த வெற்றிபட இயக்குனரான எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளி வந்து ஆக்ஷனில் மிகப்பெரிய வெற்றி அடைந்த 'எமதொங்கா' படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்கனராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலயாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, பெங்காலி மற்றும் சிங்களம் என பல மொழிகளில் 300 படங்களுக்கு மேலாக சண்டைபயிற்சியாளராக பணியாற்றி பல அரிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சண்டை பயிற்சி அளிப்பது மட்டுமின்றி பல படங்களில் நடித்து நல்ல ஸ்டண்ட் நடிகர் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அஜித் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த ஸ்டண்ட் சில்வா. பிறகு அதே அஜித்துடன் அருண் விஜய் நடிக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம் சும்மா திரையில் அதிர வைத்திருப்பார். இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால் நடிகர் அருண் விஜய் தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருவதற்கு இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.

ஸ்டண்ட் சில்வா தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் 'சித்திரை செவ்வானம்' சமுத்திரக்கனி மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா நடிப்பில் 2022-ஆம் ஆண்டு வெளியான இப்படம் அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்து மிகப்பெரிய எமோஷனல் வெற்றி படமாக அமைந்தது.
இத்திரைபடத்தின் மூலமாக சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றும் சோஷியல் மீடியாவை எப்படி கையாளவேண்டும் என்பதை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு ஏற்கனவே ஒப்புக்கொண்ட பல படங்களில் ஸ்டண்ட் இயக்குனர் பணி இருந்ததால் உடனே படங்கள் இயக்க முடியவில்லை.

இந்நிலையில், ஸ்டண்ட் சில்வா இந்த 2024-ஆம் ஆண்டு மிக பிரமாண்டமான சூப்பரான அதிரடி ஆக்க்ஷன் திரைப்படத்தை இயக்க போகிறார். இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- செல்லா அய்யாவு இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
- இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். 'கட்டா குஸ்தி' திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்துள்ளார் . இந்த படத்தையும் விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இப்படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
- இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'.
- இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

ஹிட்லர் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஹிட்லர்' படத்தின் முதல் பாடலான 'டப்பாசு' பாடல் நாளை (ஜனவரி 25) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
- வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா.
- இனியா திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. கதையோடு ஒன்றி கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் இனியா திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இனியா கடந்த ஆண்டு துவங்கிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் தான் அனோரா ஆர்ட் ஸ்டுடியோ. பெண்களுக்கான ஆடைகள், உடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் என எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் வழங்குவதில் அனோரா சிறந்து விளங்குகிறது.

நடிகை இனியாவின் அனோரா ஆர்ட் ஸ்டுடியோ தனது முதலாவது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. இந்த கொண்டாட்டம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சிறப்பான சந்திப்பாக அமைந்தது. இதில் திரைப்பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நடிகை இனியா மற்றும் அவரது அனோரா ஆர்ட் ஸ்டூடியோவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து மழையில் நனைந்த இனியா தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'தக் லைஃப்' .
- இந்த படத்தில் நடிகர் கமல் நடிக்கிறார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோவை சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இந்நிலையில், 'தக் லைஃப்' (Thug Life) திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை படக்குழு மாஸான வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், 'இன்று முதல் படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்' என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.
- தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.
- வினீத் என்ற நபரையும் அறிமுகப்படுத்தினார்.
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் இவர் நடித்த மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளார். இவர் தமிழில் சித்திரை செவ்வானம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் இவர், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருந்தார். மேலும் தனது காதலன் இவர் தான் வினீத் என்ற நபரையும் அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில், இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது.
- ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
லாஸ்ஏஞ்சல்ஸ்:
சர்வதேச அளவில் திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 96-வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த படமாக ஓப்பன்ஹைமர், பார்பி, கில்லர்ஸ் ஆப்தி ஃபுளோர் மூன், புவர் திங்ஸ், மாஸ்ட்ரோ, பாஸ்ட் லிவ்ஸ், தி சோன் ஆப் இன்ட்ரெஸ்ட் உள்பட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டு தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை கங்கனா இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

எமர்ஜென்சி போஸ்டர்
இந்நிலையில், 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகை கங்கனா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Unlock the story behind India's darkest hour. Announcing #Emergency on 14th June,2024
— Kangana Ranaut (@KanganaTeam) January 23, 2024
Witness history come alive as the most feared & fiercest Prime Minister #IndiraGandhi thunders into cinemas ?#Emergency in cinemas on 14th June,2024@AnupamPKher #SatishKaushik… pic.twitter.com/hOBRnXt4uu
- சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அயலான்’.
- இப்படம் முதல் வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அயலான்' தான். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இப்படம் வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'அயலான்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அயலா.. அயலா' பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
- அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இவரின் 63-வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் புதிய புகைப்படத்தை அவரது மனைவி நடிகை ஷாலினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கூலாக அஜித் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.






