கவனம் ஈர்க்கும் அயலான் படத்தின் புதிய வீடியோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அயலான்’.இப்படம் முதல் வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
கவனம் ஈர்க்கும் அயலான் படத்தின் புதிய வீடியோ
Published on

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அயலான்' தான். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இப்படம் வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'அயலான்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அயலா.. அயலா' பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com