வெற்றி கொண்டாட்டம்.. தெறிக்கவிட்ட Blue Star படக்குழு

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘புளூ ஸ்டார்’.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வெற்றி கொண்டாட்டம்.. தெறிக்கவிட்ட Blue Star படக்குழு
Published on

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். 'புளூ ஸ்டார்' திரைப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'புளூ ஸ்டார்' திரைப்படத்தின் வெற்றியை இயக்குனர் எஸ்.ஜெயகுமார், தயாரிப்பாளர் பா.இரஞ்சித், பாடகர் அறிவு மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படத்தை நீலம் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com