என் மலர்
சினிமா செய்திகள்

இளையராஜாவை நேரில் சந்தித்த கமல்
- பவதாரிணி ஜனவரி 25-ஆம் தேதி உயிரிழந்தார்.
- இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனவரி 25-ஆம் தேதி உயிரிழந்தார். 47 வயதான பவதாரிணி மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு இவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பண்ணையபுரம், லோயர்கேம்ப் அருகே உள்ள இளையராஜாவின் குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரிணி உடல் அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.