நெதர்லாந்தில் உலா வரும் சூரி

நடிகர் சூரி பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.இவர் தற்போது ‘கருடன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நெதர்லாந்தில் உலா வரும் சூரி
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூரி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'கொட்டுக்காளி', 'கருடன்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சூரி நெதர்லாந்து சென்றுள்ளார். அதாவது, நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 1' மற்றும் இரண்டாம் பாகம் திரையிடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சூரி நெதர்லாந்து சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சூரி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com