தனுஷ் படப்பிடிப்பால் போக்குவரத்து நெரிசல்- மக்கள் கடும் அவதி

நடிகர் தனுஷ் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இவரின் 51-வது படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார்.
தனுஷ் படப்பிடிப்பால் போக்குவரத்து நெரிசல்- மக்கள் கடும் அவதி
Published on

நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் என பன்முக தன்மை கொண்டவராக வலம் வருகிறார் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இவரின் 51-வது படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இப்படி பிசியான நடிகராக வலம் வரும் தனுஷின் படப்பிடிப்பு ஒன்று திருப்பதி அலிபிரி பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதால் அலிபிரியில் பாதுகாவலர்கள் குவிக்கப்பட்டனர்.

வெளியூர் பக்தர்களுக்கு படப்பிடிப்பு நடைபெறுவது தெரியாததால் அலிபிரியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com