என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தற்போது திரிஷா அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    • சினிமாவை தாண்டி திரிஷா தோழிகளுடன் ஜாலியாக பொழுதை கழிப்பதை மிகவும் விரும்புவார்.

    தமிழ் திரை உலகில் 21 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் திரிஷா. தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    கமலுடன் தக் லைஃப் படத்திலும் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி திரிஷா தோழிகளுடன் ஜாலியாக பொழுதை கழிப்பதை மிகவும் விரும்புவார்.

    அடிக்கடி தோழிகளுடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சேர்ந்து குதூகலமாக இருப்பது திரிஷாவிற்கு பிடித்த விஷயம்.

    அந்த வகையில் திரிஷா- விஜய் நடித்த தி கோட் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு ஜாலியாக சுற்றுலா சென்றுள்ளார்.

    அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார் திரிஷா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
    • இந்தியில் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்துள்ளார்

    இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.

    தொடர்ந்து பைரவா, தசரா, மாமன்னன், அண்ணாத்த, ரஜினி முருகன், சானி காகிதம், சைரன், ரகு தாத்தா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் சமூக வலைதள பக்கங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தனது கவர்ச்சி தோற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு சேலையில் கவர்ச்சியான தோற்றத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது 32-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அவருக்கு திரை உலக ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

    கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா திரைப்படத்தை தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மனிக்கு வெளியாகவுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்தியில் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். 

    • இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. இதுக்குறித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
    • இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், அமரன் படத்தின் இரண்டாவது பாடல்- 'வெண்ணிலவு சாரல்' தற்போது வெளியாகி இருக்கிறது. யுகபாரதி வரிகளில் வெண்ணிலவு சாரல் பாடலை கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர்.

    படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைப்பெறவுள்ளது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி மற்றும் படத்தில் நடித்தவர்களும் படக்குழுவும் கலந்துக்கொள்வார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • சார் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், சார் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து அவர்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நட்டி, மைம் கோபி, ரியோ, இயக்குனர் தமிழ், விஜய் சேதுபதி அவர்களது பாராட்டை பதிவிட்டனர்.

    திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இரண்டான் டிரைலரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் மாஞ்சோலை கிராம மக்களுக்கு கல்வி கிடைப்பது எவ்வளவு கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது என காட்சிகள் அமைந்துள்ளது. திரைப்படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இப்படம் போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படத்திற்கு பிறகு விமல் நடித்து வெளியாகும் திரைப்படமாகும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எனக்கு எதிராக கருத்து தெரிவித்த போது தெலுங்கு உள்ளிட்ட சினிமா குழுவினர் என்னை கைவிடவில்லை.
    • என்னுடைய சிரமங்களை எதிர்கொள்ள இந்த ஆதரவு முக்கியமானது.

    நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமராவ் தான் காரணம் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் பெண் மந்திரி கொண்டா சுரேகா என்பவர் கூறினார். இது தெலுங்கு திரை உலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    காங்கிரஸ் பெண் மந்திரிக்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலக நடிகர், நடிகைகள் ஒன்று திரண்டு கடுமையான வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், எஸ்.எஸ்.ராஜமவுலி, நானி, மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா ,ரோஜா, குஷ்பு பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தனக்கு ஆதரவளித்த நடிகர்- நடிகைகளுக்கு சமந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

    எனக்கு எதிராக கருத்து தெரிவித்த போது தெலுங்கு உள்ளிட்ட சினிமா குழுவினர் என்னை கைவிடவில்லை. என் மீது அவர்கள் வைத்திருந்த அன்பும் நம்பிக்கையும் நான் மீண்டும் எழுச்சி பெற உதவியது. என்னுடைய சிரமங்களை எதிர்கொள்ள இந்த ஆதரவு முக்கியமானது.

    அவர்களின் ஆதரவு இல்லாமல் எனது நிலைமையை சமாளிக்க எனக்கு அதிக நேரம் எடுத்திருக்கும். என்னை சுற்றி உள்ளவர்களின் நம்பிக்கையால் தான் நான் இன்று இங்கே இருக்கிறேன் என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லண்டனை சேர்ந்த பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
    • கருவுற்ற பிறகு முதல் முறையாக பொது வெளியில் தோன்றினார்.

    பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் லண்டனை சேர்ந்த பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சிஸ்ட்ர் மிட்நைட்' திரைப்படம் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே கருவுற்று இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கருவுற்ற பிறகு முதல் முறையாக பொது வெளியில் தோன்றி இருப்பதை அடுத்து ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சிஸ்டர் மிட்நைட் யு.கே. பிரீமியர்" என்று மட்டும் குறிப்பிட்டு நிகழ்வில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைத்துள்ளார். தனது முதல் குழந்தையை பெற்றெடுக்க இருக்கும் ராதிகா ஆப்தேவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமரன் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
    • அமரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், அமரன் படத்தின் இரண்டாவது பாடல்- 'வெண்ணிலவு சாரல்' தற்போது வெளியாகி இருக்கிறது. யுகபாரதி வரிகளில் வெண்ணிலவு சாரல் பாடலை கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
    • கடந்த வருடம் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது .

    ரகு தாத்தா படத்தை தொடர்ந்து இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

    பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    கடந்த வருடம் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான முறையில் வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நந்தன் படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது.
    • நந்தன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியாகியுள்ளது.

    'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.

    உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

    இப்படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், நந்தன் படத்தை பாராட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் பத்திரிகையாளர் இரா.சரவணன் இயக்கி நடிகர் சசிகுமார் நடித்த நந்தன் திரைப்படம் பார்த்தேன். உள்ளாட்சிகளின் வாயிலை நந்தன்களுக்கு சட்டம் திறந்து விட்டாலும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் மூடி விடுகின்றனர் என்ற சமூகநீதியின் கருப்பு வரலாற்றைத் தான் நந்தன் திரைப்படம் பேசுகிறது. உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கான உரிமைகளை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களையும் தயாரித்து வருகிறார்.
    • பியார் பிரேமா காதல் மற்றும் மாமனிதன் திடைப்படங்களை அவர் தயாரித்துள்ளார்.

    யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தி கோட் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களையும் தயாரித்த வருகிறார்.

    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் மற்றும் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திடைப்படங்களை அவர் தயாரித்துள்ளார்.

    இந்நிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜா இயக்குநர் அவதாரம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த யுவன் சங்கர் ராஜா, "தான் இயக்கப்போகும் படத்தில் கதாநாயகனாக சிம்புவை நடிக்க வைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அலங்கு திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார்.
    • இவர் ஏற்கனவே 'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து 'அலங்கு' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

    புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே 'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.

    இத்திரைப்படத்தை பற்றி இயக்குநர் S.P.சக்திவேல் கூறுகையில், "நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே திரைக்கதையின் பிரதானம். படத்தின் 95% காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

    இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த "செல்ஃபி" திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ள அலங்கு திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் முதல் பிரதியை பார்த்து ரசித்த சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் உலகம் முழுவதும் இத்திரைப்படத்தை வெளியிடும் உரிமைகளை வாங்கி உள்ளார்.

    ×