விமல் நடித்த SIR திரைப்படத்தின் இரண்டாம் டிரைலர் வெளியானது

போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார். சார் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விமல் நடித்த SIR  திரைப்படத்தின் இரண்டாம் டிரைலர் வெளியானது
Published on

போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சார் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து அவர்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நட்டி, மைம் கோபி, ரியோ, இயக்குனர் தமிழ், விஜய் சேதுபதி அவர்களது பாராட்டை பதிவிட்டனர்.

திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இரண்டான் டிரைலரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் மாஞ்சோலை கிராம மக்களுக்கு கல்வி கிடைப்பது எவ்வளவு கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது என காட்சிகள் அமைந்துள்ளது. திரைப்படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இப்படம் போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படத்திற்கு பிறகு விமல் நடித்து வெளியாகும் திரைப்படமாகும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com