கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது

தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார்.கடந்த வருடம் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது .
revolver rita - Keerthy Suresh
Published on

ரகு தாத்தா படத்தை தொடர்ந்து இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

கடந்த வருடம் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான முறையில் வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com