என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
    • வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்த படத்துக்கு 'லக்கி பாஸ்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு புதுப் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    ஏமாற்றும் பிச்சைக்காரனுக்கு ஒரு நாள் பெரிய ஆசை வருகிறது. அதற்காக அவன் ஒரு பெரிய பணக்கார வீட்டிற்குள் செல்கிறான். அங்கு அவன் மாட்டிக்கொள்கிறான் அதற்கு அடுத்து என்ன நடந்தது போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் இன்று சார் திரைப்படம் வெளியானது.
    • இவருக்கு வயது 83. இவரது இறுதி சடங்கு நாளை மாலை சொந்த ஊரான அறந்தாங்கியில் நடக்கிறது.

    போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் இன்று சார் திரைப்படம் வெளியானது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கல்வியின் அவசியத்தையும் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இப்படம் பேசியுள்ளது.

    இந்நிலையில் ஒரு துயரமான நிகழ்வு நடைப்பெற்றுள்ளது. நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட்டின் தாயார் ராஜாமணி இன்று மாலை 5 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 83. இவரது இறுதி சடங்கு நாளை மாலை சொந்த ஊரான அறந்தாங்கியில் நடக்கிறது. 

    • அஜித் குமார் எடுத்துக் கொண்ட செல்ஃபி படங்கள் வெளியாகி உள்ளது.
    • ரேசிங் பந்தயத்திலும் கலந்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். இதில் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது.

    திரைப்படங்கள் மட்டுமின்றி பைக் ரைடிங் செல்வதில் ஆர்வம் கொண்டவர் அஜித். இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ரேசிங் பந்தயத்திலும் கலந்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே அஜித் குமார் எடுத்துக் கொண்ட செல்ஃபி படங்கள் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தப் படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.
    • புதிய படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஆமீர் கான். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரையுலகில் கவனம் செலுத்தி வரும் ஆமீர் கான் 'சித்தாரே ஜமீன் பர்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.

    ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியிருக்கும் சித்தாரே ஜமீன் பர் படத்தில் ஆமீர் கான் ஜோடியாக ஜெனிலியா நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆமீர் கான் நடிக்க இருக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில், ஆமீர் கான் தமிழில் வெளியாகி, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கஜினி பட தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த் மற்றும் மது மந்தெனாவிடம் பேசிய ஆமீர் கான், படத்தின் கருவை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தமிழில் சூர்யா, அசின், நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான கஜினி திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. மேலும் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் வசூலை குவித்தது. அந்த வகையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உண்மையில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழியில் வெளிவந்த எம்.ஜி.ஆர்-ன் சகோதரர் சக்ரபாணி நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
    • நடிகை கோமளம் தனது 35-வது வயதில் சந்திரசேகர மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    மலையாள திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகை கோமளம். கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையை சேர்ந்த இவர் தனது 96-வது வயதில் காலமானார்.

    இருதய கோளாறால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், பாறசாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பிரபல நடிகையான கோமளம், 1951-ம் ஆண்டு சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தார். "வனமாலா" என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். சினிமாவில் நடிக்க பெண்கள் தயங்கிய காலக்கட்டத்தில் சினிமா துறைக்கு பல்வேறு தடைகளை தாண்டி நடிக்க வந்தார்.

    பின்பு குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்ப்பு காரணமாக கோமளத்தின் நடிப்பு வாழ்க்கை பாதியில் நின்றது. இதனால் 1951 முதல் 1955-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளே சினிமாவில் நடித்தார். 1954-ம் ஆண்டு நாகூர் இயக்கிய தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழியில் வெளிவந்த எம்.ஜி.ஆர்-ன் சகோதரர் சக்ரபாணி நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

    நடிகை கோமளம் தனது 35-வது வயதில் சந்திரசேகர மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான 6 ஆண்டுகளிலேயே கணவரை இழந்த அவருக்கு குழந்தை இல்லை. 1955-ம் ஆண்டு நடித்த "நியூஸ்பேப்பர் பாய்" என்ற திரைப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

    பிரபல நடிகர் பிரேம் நசீரின் முதல் படமான "மருமகள்" என்ற படத்தில் கோமளா கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் நடிகர் பிரேம் நசீரின் முதல் கதாநாயகி என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
    • வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20 ஆம் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தை வட இந்தியாவில் ப்ரோமோஷன் பணிக்காக மட்டும் 15 கோடி ரூபாய் செலவளித்துள்ளதாகவும். வட இந்தியாவில் படத்தை திரையிட 7 கோடி ரூபாயும், மொத்தம் 22 கோடி ரூபாய் வட இந்தியாவில் படத்தை வெளியிடுவதற்காக செலவு செய்துள்ளோம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாகூறியுள்ளார்.

    இந்நிலையில், இன்று மும்பையில் நடைபெற்ற கங்குவா புரமோஷனில் சூர்யா, திஷா பதானி, சிறுத்தை சிவா, ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது, ரசிகர்கள் சூர்யாவை சூழ்ந்து கொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இதனையடுத்து சூர்யா தனது ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • செப்டம்பர் 6-ந்தேதி படம் ரிலீஸ் ஆக இருந்தது.
    • தணிக்கைக்குழு அனுமதி அளிக்காததால் ரிலீஸ் தள்ளிப்போனது.

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 முதல் 1977 வரை 21 மாதங்கள் எமர்ஜென்சி இந்தியாவில் அமலில் இருந்தது. இதை மையமாக வைத்து எமர்ஜென்சி படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டதை காண்பிக்கக் கூடாது என கங்கனா ரனாவத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

    இப்படத்தை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் துணை தயாரிப்பாளரும் அவர்தான். கடந்த செப்டம்பர் 6-ந்தேதி இப்படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் சீக்கிய அமைப்பினர் ஆட்சேபனை தெரிவிக்க படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. தணிக்கைக் குழு பல காட்சிகளை நீக்க வலியுறுத்தியது. அத்துடன் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது.

    இந்த நிலையில் படத்தை தயாரித்த நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கக் கோரி தணிக்கைக் குழுவிற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தது.

    உயர்நீதிமன்றமும் இது தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கங்கனா ரனாவத் நாங்கள் தெரிவித்த காட்சியை நீக்க ரனாவத் சம்மதம் தெரிவித்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இந்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய தணிக்கைக் குழு அனுமதி அளித்துள்து. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அமைதி மற்றும் ஆதரவு தெரிவித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு (Zee Entertainment Enterprises) நன்றி என தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

    எமர்ஜென்சி படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் மும்பையில் உள்ள தனது சொத்தை விற்கும் கட்டாயம் ஏற்பட்டது என ரனாவத் தெரிவித்திருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார்.
    • அமலாக்கத்துறை இயக்குநரகம் நடிகை தமன்னாவுக்கு 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது.

    ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    ஃபேர்பிளே என்பது மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியாகும். இது கிரிக்கெட் போன்ற பல்வேறு நேரடி விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலியாகும். மகாதேவ் ஆன்லைன் செயலியை துபாயைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் உருவாக்கினர்.

    இந்த செயலி மீது கடந்தாண்டு பண மோசடி வழக்குப் பதியப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஓராண்டாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை தமன்னா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பு செய்ய உதவியதால், தங்கள் நிறுவனத்திற்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாகாம் நிறுவனம் புகார் அளித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நடிகை தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.

    இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் அமலாக்கத்துறை இயக்குநரகம் நடிகை தமன்னாவுக்கு 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது.

    இதனையடுத்து இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் அதிகாரிகள் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். ஆனாலும் விசாரணை விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அன்புமணி ராமதாஸ்க்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என 3 மகள்கள் இருக்கிறார்கள்.
    • அலங்கு என்ற திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸின் மனைவியான செளமியா அன்புமணி போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் நேரத்தில் தனது அம்மாவிற்கு ஆதரவாக மகள் சங்கமித்ரா தொடர் பிரச்சாரங்கள் மேற்கொண்டது மக்களிடையே கவனம் பெற்றது.

    அன்புமணி ராமதாஸ் - சவுமியா தம்பதிக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என 3 மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் சங்கமித்ரா தற்போது அலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது சினிமா தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

    புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் அலங்கு என்ற திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே 'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புலனாய்வு திரில்லர் 'லெவன்' திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார்
    • முன்னணி இசை நிறுவனமான சரிகம இப்பாடலை வெளியிட்டுள்ளது.

    தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்' திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ள 'தி டெவில் இஸ் வெயிட்டிங்' எனும் இப்பாடலின் வரிகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதியுள்ளார். முன்னணி இசை நிறுவனமான சரிகம இப்பாடலை வெளியிட்டுள்ளது.

    'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான 'லெவன்' திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

    இயக்குநர் சுந்தர் சி இடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்', 'இன்ஸ்பெக்டர் ரிஷி' இணையத் தொடர், 'சரபம்', 'சிவப்பு' மற்றும் சசிகுமாரின் 'பிரம்மன்' உள்ளிட்டவற்றில் நடித்துள்ள இவர், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் எதிர் நாயகனாக தற்போது நடித்து வருகிறார்.

    'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் 'விருமாண்டி' புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், 'மெட்ராஸ்' புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

    'லெவன்' திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், "ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக 'லெவன்' அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.

    ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் திரைப்படமான 'லெவன்' படத்தை நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
    • கடந்த வருடம் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

    ரகு தாத்தா படத்தை தொடர்ந்து இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

    பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    கடந்த வருடம் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

    இந்நிலையில், இன்று கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் டீசரை தற்பொழுது படக்குழு வெளியிடுள்ளது.

    அதில் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு இருக்கும் கீர்த்தி சுரேஷின் ஹேண்ட் பேக்கை ஒரு கும்பல் திருடி செல்கின்றனர். பின் அந்த பேக்கிற்குள், துப்பாக்கி, வெடி குண்டு, கத்தி என எல்லாம் இருக்கிறது. பேக்கை திருடிய கும்பல் இதைப் பார்த்து அலறுகின்றனர். அப்பொழுது பேக்கை வாங்க கதவை உடைத்துக் கொண்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். யார் நீ என்ற கேள்வியுடன் டைட்டில் போஸ்டர் வருகிறது.

    இந்த டைட்டில் டீசரின் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×