Im On The Way - கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டைட்டில் டீசர் வெளியீடு

இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.கடந்த வருடம் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
Im On The Way - கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டைட்டில் டீசர் வெளியீடு
Published on

ரகு தாத்தா படத்தை தொடர்ந்து இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

கடந்த வருடம் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில், இன்று கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் டீசரை தற்பொழுது படக்குழு வெளியிடுள்ளது.

அதில் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு இருக்கும் கீர்த்தி சுரேஷின் ஹேண்ட் பேக்கை ஒரு கும்பல் திருடி செல்கின்றனர். பின் அந்த பேக்கிற்குள், துப்பாக்கி, வெடி குண்டு, கத்தி என எல்லாம் இருக்கிறது. பேக்கை திருடிய கும்பல் இதைப் பார்த்து அலறுகின்றனர். அப்பொழுது பேக்கை வாங்க கதவை உடைத்துக் கொண்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். யார் நீ என்ற கேள்வியுடன் டைட்டில் போஸ்டர் வருகிறது.

இந்த டைட்டில் டீசரின் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com