என் மலர்
சினிமா செய்திகள்
- ஹரி இயக்கத்தில் வெளிவந்த ரத்னம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- மிஷ்கின் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியானது துப்பறிவாளன் திரைப்படம்,
'திமிரு', தாமிரபரணி, மலைக்கோட்டை என பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானவர் விஷால்.இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது 'துப்பறிவாளன்- 2' படம் மூலம் புதிய இயக்குநராக மாறி இருக்கிறார். விஷால் நடிப்பிற்கு வருவதற்கு முன் ஆக்ஷன் கிங் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர் குறிப்பிடத்தக்கது.
இவரது நடிப்பில் கடைசியாக ஹரி இயக்கத்தில் வெளிவந்த ரத்னம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மிஷ்கின் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியானது துப்பறிவாளன் திரைப்படம், இப்படம் ஒரு டிடெக்டிவி கதைக்களமாக அமைந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் விஷால் இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நவம்பர் மாதம் முதல் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அஜர்பைஜான், லண்டன் மற்றும் மல்டா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
படத்தில் நடிக்க கூடிய மற்ற நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
- அடுத்த பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிம்பு நடித்த `பத்து தல' திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு பெரிய வரலாற்று பின்னணி கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படமாகும்.
இந்நிலையில் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் நேற்று ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்தார் அது இணையத்தில் வைரலானது. அதில் அவர் 2000 களில் நடித்த படங்களான தம், மன்மதன், வல்லவன், விடிவி, இவையெல்லாம் சேர்த்து ஜென் சி மோடில் அப்படி இருக்க போறது நம்முடைய அடுத்த திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து தற்பொழுது அடுத்த பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூட்ல நாளைக்கு 6.06 மணிக்கு ஷார்ப்பா வரேன்" என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது எதைக் குறித்த அப்டேட் என எந்த தகவலும் இல்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இப்படம் அவரது 50- வது திரைப்படத்தை குறிக்கிறது அதை அவரே இயக்கவும் உள்ளார் என்ற செய்திகள் பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார்.
சசிகுமார் நடிப்பில் அண்மையில் நந்தன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'.
- திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது.
வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.
கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான் Vamos Brincar Babe என்ற பாடல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர் கிச்சா சுதீப்.
- கிச்சா சுதீப் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழில் நான் ஈ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் (வயது 86) வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நேற்று மதியம் ஒரு சொகுசு கார் வந்து நின்றது. காரில் இருந்து நடிகர் பெஞ்சமின் மற்றும் 2 பேர் இறங்கி பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்களிடம் ஜூஸ் பாட்டில் வழங்கினர்.
அதில் ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தமான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இதை வாங்கி பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து நடிகர் பெஞ்சமின் மற்றும் அவருடன் வந்திருந்த 2 பேரை சூழ்ந்து கொண்டு யார் நீங்கள்? எதற்காக வந்தீர்கள், மதமாற்றம் செய்கிறீர்களா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிறைந்தது.
இதனையடுத்து நடிகர் பெஞ்சமின் தன்னுடன் வந்தவர்களை காரில் ஏற்றிக்கொண்டு உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார்.
அவர்கள் வந்த காரிலும் ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தமான வாசகம் இடம் பெற்றிருந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கிறது.
- படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர் சிவா. தற்போது இவர் இயக்கியுள்ள கங்குவா திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. கங்குவா படத்தில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தவிர திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கிறது. படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் சிவா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். விஜய் படத்தை இயக்குவது தொடர்பான கேள்விக்கும் இயக்குநர் சிவா பதில் அளித்தார்.

"நான் பலமுறை விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறேன். படம் எடுப்பதற்கு கதையையும் கூறியிருக்கிறேன். படம் தொடர்பாக நிறைய சந்திப்புகள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் கூட அவரை சந்தித்தேன். ஆனால் சரியான காலம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்," என்று இயக்குநர் சிறுத்தை சிவா தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், சாச்சனா வெளியேற்றப்பட்டார்.
- முதல் வார எவிக்ஷனில் ரவீந்திரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் கடந்த 6ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில், புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு, இரண்டாவது வார எவிக்ஷன் என ரசிகர்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், சாச்சனா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளானது.
பிறகு, முதல் வாரத்தின் இறுதியில் ரவீந்திரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், 2வது வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று நடந்தது. அதன்படி, இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் வி.ஜே.விஷால், தர்ஷா குப்தா, ரஞ்சித், ஜெப்ரி உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர்.
இவர்களில் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் நடிகர் அர்னவ் வெளியேற்றபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
- தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு பெரிய வரலாற்று பின்னணி கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படமாகும்.
இந்நிலையில் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் 2000 களில் நடித்த படங்களான தம், மன்மதன், வல்லவன், விடிவி, இவையெல்லாம் சேர்த்து ஜென் சி மோடில் அப்படி இருக்க போறது நம்முடைய அடுத்த திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.
இப்படம் அவரது 50- வது திரைப்படத்தை குறிக்கிறது அதை அவரே இயக்கவும் உள்ளார் என்ற செய்திகள் பரவி வருகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நந்தன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
- ஓடிடியில் வெளியான பிறகு நந்தன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.
உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்
இப்படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஓடிடியில் வெளியான பிறகு நந்தன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இத்திரைப்படத்தை பாராட்டி பேசியுள்ளனர்.
இந்நிலையில் நந்தன் படத்தை பாராட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், OTT தளத்தில் 'நந்தன்' திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.
தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் சசிகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் இரா.சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த 'நந்தன்' திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த வாரம் பிளாக் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- நாயகனாக ஜீவா நடித்துள்ளார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக ஜீவா நடித்துள்ள பிளாக் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். டைம் லூப் திரைப்படமாக இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
கடந்த வாரம் பிளாக் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியுள்ளார். இதில் நாயகனாக ஜீவா நடித்துள்ளார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் கார்த்தி படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் " வாழ்த்துக்கள் ஜீவா ப்ரோ. ப்ளாக் திரைப்படம் முழுவதுமாகவே பார்ப்பவர்களை த்ரில்லிங்கான அனுபவத்தை அடிக்கடி கொடுத்த வண்ணம் இருந்தது. மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். ஒரு பெரிய அறிவுசார்ந்த விஷயத்தை மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் அமைத்ததற்கு பாராட்டுகள்" என பதிவிட்டுள்ளார்.
நீண்ட நாளுக்கு பிறகு ஜீவாவுக்கு ஒரு கம் பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்திற்கு பிறகு பிரியா பவானி சங்கருக்கு மேலும் ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நாகா 90-களில் மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பப் பட்ட மர்ம தேசம் தொடரை இயக்கியவராவார்.
- தொடர் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை சாய் தன்ஷிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஐந்தாம் வேதம் என்ற வெப் தொடர் வெளியாகவுள்ளது. இந்த வெப் தொடரை நாகா இயக்கியுள்ளார்.
நாகா 90-களில் மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பப் பட்ட மர்ம தேசம் தொடரை இயக்கியவராவார். இந்த தொலைக்காட்சி தொடருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐந்தாம் வேதம் வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி மகேந்திரன், கிரிஷா குருப் , பொன்வன்னன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்தொடரை அபிராமி மீடியா வொர்க்ஸ் தயாரித்துள்ளது. இத்தொடரின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்.
தற்பொழுது இத்தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. தொடர் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சாய் தன்ஷிகாவிடம் ஒரு ஆன்மிக பெட்டியை கொடுத்து ஐயங்காரபூரத்தில் உள்ள ஒரு கோவில் பூசாரியிடம் கொடுக்க சொல்கிறார்கள். அந்த மர்மம் நிறைந்த பெட்டியை சுற்றியே டிரைலர் நகர்கிறது.
இது ஒரு திரில்லர் கதைக்களத்தில் இருப்பதனால் இத்தொடர் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






