என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

    நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் சூர்யா வின் 45-வது திரைப்படமாகும் . இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார். இந்த கூட்டணி புதியதொரு கூட்டணியாக இருப்பதால் திரைப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரின் அருவாள், குதிரை என இடம் பெற்றுள்ளதால்.

    இப்படம் ஒரு தெய்வீக ஃபேன்டசி திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தில் சூர்யாவுக்கு ருக்மிணி வசந்த் மற்றும் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஷ்மிரா பர்தேஷி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    திரைப்படத்திற்கு கருப்பு என தலைப்பாக இருக்கும் என இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பற்றிய மற்றி தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி வெளியானது தங்கலான்.
    • மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது.

    பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் 'தங்கலான்'. இதில், விக்ரமுடன், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி டேனியல் கால்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்தனர்.

    மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியாகு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    அதனைத்தொடர்ந்து, விரைவில் ஓ.டி.டியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தங்கலான் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவ மதத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், ஓ.டி.டியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், தணிக்கை சான்று பெற்று திரையரங்குகளில் வெளியான படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து 'தங்கலான்' விரைவில் ஓ.டி.டியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருபவர் நாக சைதன்யா.
    • பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

    தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருபவர் நாக சைதன்யா.

    நடிகர் நாகார்ஜூன் மகனான நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவுடன் திருமணம் ஆகி அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து சமந்தா மீண்டும் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார்.

    இதையடுத்து நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலி பாலாவுக்கும் காதல் உருவானது.

    இருவரும் பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஆண்டு இறுதியில் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வருகின்றனர்.

    அப்போது நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் சார் திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி வெளியானது.
    • இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்கியுள்ளது.

    போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் சார் திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்கியுள்ளது.

    திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பார்த்து அவர்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நட்டி, மைம் கோபி, ரியோ, இயக்குனர் தமிழ், விஜய் சேதுபதி, சீமான் அவர்களது பாராட்டை பதிவிட்டனர்.

    கல்வியின் முக்கியத்துவத்தையும், கல்வி அனைவருக்கும் சமம்மான ஒன்று என அழுத்தி கூறியிருக்கும் திரைப்படம் சார்.

    இந்நிலையில் சார் திரைப்படத்தின் முதல் 6 நிமிடங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது
    • ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. பின்னணியில் ஏஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் - ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது.

    காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும். குறிப்பாகச் சென்னை பிவிஆர் விஆர் (pvr vr mall) திரையில் ரீரிலீஸ் ஆகி இப்படம் இன்றுடன் 1000-வது நாளைக் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

     

    பிவிஆர் திரையில் கடந்த 142 வாரங்களாக [2.75 ஆண்டுகளாக] இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ரீரிலீசில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்ற சாதனையை தனதாகியுள்ளது விண்ணைத் தாண்டி வருவாயா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி.
    • சென்னை வந்து ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ரஜினிகாந்த்.

    ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

    படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாக்ராஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார் . அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

    விசாகபட்டணத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் அதை முடித்துக் கொண்டு சென்னை வந்து ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ரஜினிகாந்த். தற்போதுவரை அவர் ஓய்வெடுத்து வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன்படி இன்றுமுதல் சென்னையில் நடக்க உள்ள கூலி படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான் ஏற்கனவே அரசியல்வாதிதான்.
    • புது அரசியல்வாதி என்ன செய்ய போகிறார் என்பதை டி.வி.யில் எதற்காக பார்க்க வேண்டும்.

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வருகிற 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் விஷாலிடம் விஜய் கட்சி மாநாடு பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    விஜய் கட்சி மாநாட்டில் அழைத்தால் கலந்து கொள்வேன். வாக்காளர் என்ற முறையில் அழைப்பு விடுத்தால் மட்டுமல்ல அழைப்பு விடுக்காமலேயே மாநாட்டில் கலந்து கொள்வேன். அவர் மக்களுக்கு என்ன கூற போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே செல்வேன். புதிய அரசியல்வாதி வருகிறார். அவர் என்ன பேச போகிறார் என்பதை கேட்க ஒரு வாக்காளராக ஆவலாக இருக்கிறேன்.

    நான் ஏற்கனவே அரசியல்வாதிதான். சமூக சேவை செய்கிற அனைவருமே அரசியல்வாதிகள்தான். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. மாநாட்டை மக்களோடு மக்களாக நின்று நானும் பார்ப்பேன். இதற்கு அழைப்பு வேண்டும் என்று அவசியம் இல்லை.

    புது அரசியல்வாதி என்ன செய்ய போகிறார் என்பதை டி.வி.யில் எதற்காக பார்க்க வேண்டும். நேரில் பார்த்தால் நல்லா இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மிருணாள் தாகூர் குளியல் தொட்டியில் நீச்சல் உடையில் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.
    • இதனை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான சீதாராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் மிருனாள் தாகூர். மேலும் பல இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் மிருனாள் தாகூர் குளியல் தொட்டியில் நீச்சல் உடையில் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

    இதனை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வரும் மிருனாள் தாகூர் இப்படி ஆபாசமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கலாமா என்றும் பலர் கேள்வி எழுப்பி கண்டித்துள்ளனர்.

    விசாரணையில் அது போலி டீப் பேக் புகைப்படம் என்று தெரிய வந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் மிருனாள் தாகூர் முகத்தை இன்னொரு பெண்ணின் உடலோடு ஒட்டி இந்த புகைப்படத்தை உருவாக்கி உள்ளனர். இது பரபரப்பாகி உள்ளது. ஏற்கனவே பல நடிகைகளின் டீப் பேக் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.
    • இப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கியுள்ளார்.

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் புங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார் நடிகை ஐஷ்வர்யா லட்சுமி. அதைத்தொடர்ந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

    இவர் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் ஹலோ மம்மி. இப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கியுள்ளார். படத்தின் கதையை மலையாள திரைப்படமான ஃபலிமி புகழ் சஞ்சோ ஜோசஃப் எழுதியுள்ளார்.

    இப்படத்தில் ஷரஃப் உ தீன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஒரு காமெடி கலந்த ஃபேண்டசி திரைப்படமாக உருவாகியுள்ளது. இவர்களுடன் இப்படத்தில் அஜு வர்கீஸ், ஜெகதீஷ், ஜானி ஆண்டனி, பிந்து பேனிக்கர், சன்னி இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஒளிப்பதிவை பிரவீன் குமார் மேற்கொண்டுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை ஹேங்க் ஓவர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டாரை படக்குழு வெளியிட்டது. படத்தை குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த செப் 20 ஆம் தேதி நந்தன் திரைப்படம் வெளியாகியது.
    • அண்மையில் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது.

    'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த செப் 20 ஆம் தேதி திரைப்படம் வெளியாகியது.

    உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

    இப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அண்மையில் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. திரைப்படம் ஓடிடியில் வெளியானப் பிறகு பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து இணையத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அமேசான் பிரைமில் திரைப்படம் 7 நாட்களில் இதுவரை 38 மில்லியன் நிமிடங்களை கடந்து புதிய ரெக்கார்டை படைத்துள்ளது நந்தன் திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'.
    • திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.

    கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதுவரை படக்குழு வெளியிட்ட போஸ்டர்களில் கங்குவா தலைவனான பழங்குடி தன்மையுடைய கதாப்பாத்திரத்தின் போஸ்டர்கள் தான் வெளியானது.

    ஆனால் தற்பொழுது படக்குழு சூர்யாவின் புது தோற்றமுடைய ஃப்ரான்சிஸ் கதாப்பாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • படத்தின் போஸ்டர்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தின் போஸ்டர்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான தீமா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    படத்தை காட்சி படுத்திய விதத்தையும் , அதனுடைய பிஹைண்ட் தி சீன் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×