ஐஷ்வர்யா லட்சுமி நடிக்கும் ஹலோ மம்மி - ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.இப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கியுள்ளார்.
ஐஷ்வர்யா லட்சுமி நடிக்கும் ஹலோ மம்மி - ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
Published on

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் புங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார் நடிகை ஐஷ்வர்யா லட்சுமி. அதைத்தொடர்ந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

இவர் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் ஹலோ மம்மி. இப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கியுள்ளார். படத்தின் கதையை மலையாள திரைப்படமான ஃபலிமி புகழ் சஞ்சோ ஜோசஃப் எழுதியுள்ளார்.

இப்படத்தில் ஷரஃப் உ தீன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஒரு காமெடி கலந்த ஃபேண்டசி திரைப்படமாக உருவாகியுள்ளது. இவர்களுடன் இப்படத்தில் அஜு வர்கீஸ், ஜெகதீஷ், ஜானி ஆண்டனி, பிந்து பேனிக்கர், சன்னி இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவை பிரவீன் குமார் மேற்கொண்டுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை ஹேங்க் ஓவர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டாரை படக்குழு வெளியிட்டது. படத்தை குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com