என் மலர்
சினிமா செய்திகள்
- சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யா இரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திஷா பதானி , பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ப்ரோமோஷன் பணிகளில் கலந்துக்கொள்ளும் போது சூர்யா ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்தார் அதில் அவர் ' நான் சமீபத்தில் நடிகர் அஜித் சாரை சந்தித்தேன். அப்பொழுது அவர் கூறினார் இப்பொ தெரியுதா நான் ஏன் இயக்குனர் சிவா-வ விடலன்னு" என கூறினார்.
இந்த காணொலி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
- திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணைந்து படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை மாவீரன் திரைப்படத்தை இயக்கிய சாந்தி டாக்கீஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றனர். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார்.
- பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்பொழுது 'பிரதர்', 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார். படத்தில் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது ஜெயம் ரவியுடன் அவர்கள் இணையும் 3-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னம் எழுதியுள்ளார். படப்பிடிப்பு பணிகள் டிசம்பரில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
- இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
- சில விமர்சனங்களை சந்தித்ததை தொடர்ந்து சில காட்சிகள் கட் செய்யப்பட்டது.
'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கியுள்ளார். இது கார்த்தியின் 27-வது படமாகும். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், 'மெய்யழகன்' திரைப்படம் வருகிற 27-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு சில விமர்சனங்களை சந்தித்ததை தொடர்ந்து சில காட்சிகள் கட் செய்யப்பட்டது.
தற்போது ஓடிடி தளத்தில் கட் செய்யப்படாத காட்சிகளுடன் முழுமையாக படம் வெளியாக உள்ளது.
முன்னதாக இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வருகிற 25-ந்தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ௨ நாட்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தி திரையுலகின் முன்னணி பெண் தயாரிப்பாளராக இருப்பவர் ஏக்தா கபூர்.
- இவருக்கு 2020-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்தி திரையுலகின் முன்னணி பெண் தயாரிப்பாளராக இருப்பவர் ஏக்தா கபூர். இவர் பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திரா, ஷோபா கபூர் ஆகியோரின் மகள் ஆவார். ஏக்தா கபூர் இந்தி படங்கள் மட்டுமன்றி வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களும் தயாரித்து இருக்கிறார்.
இவருக்கு 2020-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் தயாரிப்பில் காந்தி பாட்டி என்ற நிகழ்ச்சி ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அதில் மைனர் நடிகையின் ஆபாச காட்சிகள் இடம் பெற்று இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் தயாரிப்பாளர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து இருப்பது பரபரப்பாகி உள்ளது.
- ஜெயம் ரவி தற்போது ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படத்தின் டீசர் மற்றும் மக்காமிஷி என்ற பாடல் மிகப்பெரியளவில் ஹிட்டாகியது.
ஜெயம் ரவி தற்போது ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.
திரைப்படத்தின் ஜெயம் ரவியுடன், சரண்யா பொன்வண்ணன்,பூமிகா, விடிவி கணேஷ், சீதா, நட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டீசர் மற்றும் மக்காமிஷி என்ற பாடல் மிகப்பெரியளவில் ஹிட்டாகியது.
திரைப்படத்திற்கு யு சான்றிதழை தணிக்கை குழு கொடுத்துள்ளது. படத்தின் காலநேரம் 2 மணி நேரம் 20 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் பாடலான மெதக்குது காலு ரெண்டும் என்ற பாடல் வரும் 23 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதைப்படக்குழு ஒரு கல்யாண பத்திரைக்கையைப் போல வடிவமைத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
திரைப்படம் ஒரு அக்கா மற்றும் தம்பி பாசப்பின்னணியில் கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படம் தீபாவளிக்கு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து.
- லப்பர் பந்து திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. வெளியானது முதல் ஒவ்வொரு வாரமும் அதிக திரைகளில் ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது. திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், லப்பர் பந்து திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
- படத்தின் டிரைலர் தற்பொழுது வெளளியாகியுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் டிரைலர் தற்பொழுது வெளளியாகியுள்ளது. டிரைலரி சாதாரண ஒரு வங்கி ஊழியராக இருக்கும் துல்கர் சல்மான் பல பண நெருக்கடியை சமாளித்து வருகிறார். திடீர் என்று பணக்காரண் ஆவதுப் போல் டிரைலரில் காட்சிகள் அமைந்துள்ளது. டிரைலரின் காட்சிகள் படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
- சொர்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜியும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் நேற்று வெளியிட்டுள்ளார்.
ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்திற்கு சொர்கவாசல் என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளனர்.
கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி அவரே இயக்கி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் சொர்கவாசல் பாலாஜிக்கு கை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களமாக அமைந்துள்ளது. ஆகஷன் அதிரடி என காட்சிகள் அமைந்துள்ளது. முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார் கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் முக்கியகதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- சிம்பு நடிக்கப்போகும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்
- அஷ்வத் மாரிமுத்து தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிம்பு நடித்த `பத்து தல' திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு பெரிய வரலாற்று பின்னணி கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படமாகும்.
இந்நிலையில் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் நேற்று ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்தார் அது இணையத்தில் வைரலானது. அதில் அவர் 2000 களில் நடித்த படங்களான தம், மன்மதன், வல்லவன், விடிவி, இவையெல்லாம் சேர்த்து ஜென் சி மோடில் அப்படி இருக்க போறது நம்முடைய அடுத்த திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.
தற்பொழுது அவர் நடிக்கப்போகும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இவர் அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.
இதுக்குறித்து வெளியிட்ட போஸ்டரில் சிம்பு அவரது 2000 களில் வெளிவந்த படங்களில் உள்ள கெட்டப்பில் இருக்கிறார். கையில் கர்சீப் சுற்றி, டேட்டூ குத்தி மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் உள்ளார்.
அஷ்வத் மாரிமுத்து தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'.
- திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.
கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடலை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






