துயரப்படுபவர்கள் பாக்கியவான்கள் - ஆர்.ஜே பாலாஜி நடித்த சொர்கவாசல் டீசர் வெளியானது

ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். சொர்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
துயரப்படுபவர்கள் பாக்கியவான்கள் - ஆர்.ஜே பாலாஜி நடித்த சொர்கவாசல் டீசர் வெளியானது
Published on

நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜியும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் நேற்று வெளியிட்டுள்ளார்.

ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்திற்கு சொர்கவாசல் என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளனர்.

கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி அவரே இயக்கி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் சொர்கவாசல் பாலாஜிக்கு கை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களமாக அமைந்துள்ளது. ஆகஷன் அதிரடி என காட்சிகள் அமைந்துள்ளது. முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார் கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் முக்கியகதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com