ஜெயம் ரவி 34 படத்தில் இணைந்த ரத்ன குமார் & பிரதீப் ஆண்டனி

ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார். பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவி 34 படத்தில் இணைந்த ரத்ன குமார் & பிரதீப் ஆண்டனி
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்பொழுது 'பிரதர்', 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார். படத்தில் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது ஜெயம் ரவியுடன் அவர்கள் இணையும் 3-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னம் எழுதியுள்ளார். படப்பிடிப்பு பணிகள் டிசம்பரில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com