பிக்பாஸ் சீசன் 8- இந்த வார எவிக்ஷனில் வெளியேற்றப்பட்ட அர்னவ்

போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், சாச்சனா வெளியேற்றப்பட்டார்.முதல் வார எவிக்‌ஷனில் ரவீந்திரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 8- இந்த வார எவிக்ஷனில் வெளியேற்றப்பட்ட அர்னவ்
Published on

தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் கடந்த 6ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில், புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு, இரண்டாவது வார எவிக்ஷன் என ரசிகர்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், சாச்சனா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளானது.

பிறகு, முதல் வாரத்தின் இறுதியில் ரவீந்திரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், 2வது வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று நடந்தது. அதன்படி, இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் வி.ஜே.விஷால், தர்ஷா குப்தா, ரஞ்சித், ஜெப்ரி உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர்.

இவர்களில் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் நடிகர் அர்னவ் வெளியேற்றபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com