என் மலர்
சினிமா செய்திகள்
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் த்ரில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #K13 #Arulnidhi
அருள்நிதி நடிப்பில் `புகழேந்தி எனும் நான்', `கே 13' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் `கே 13' படத்தை பரத் நீலகண்டன் இயக்குகிறார். அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் பரத் கூறுகையில், "ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் அதற்கு நேர்மாறாக, இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்தார். படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
#K13 Teaser Countdown Starts !
— SP CINEMAS (@thespcinemas) March 10, 2019
Director @Adhikravi 👍 #K13Diaries@sankarsp007@arulnithitamil@ShraddhaSrinath@dir_barath@kisham77@narentnb@AntonyLRuben@AravinndSingh@ur_rameshthilak@VijayVzOfficial@DoneChannel1pic.twitter.com/rOse7sMkBh
சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர். #K13 #Arulnidhi #ShraddhaSrinath #AdhikRavichandran
கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் புதிய படத்தில் இளம் இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். #Sivakarthikeyan
கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது இளம் இசையமைப்பாளர் ஷபீர் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
எங்கள் படத்திற்கு ஷபீர் இசையமைப்பது மகிழ்ச்சி. எங்களது உழைப்பை ஷபீரின் இசை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என் நம்புகிறோம்" என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால்.
இசையமைப்பாளர் ஷபீர் கூறும்போது, "துடிப்பான இளைஞர்கள் உள்ள ஒரு குழுவில் இணைந்தது மகிழ்ச்சி. யூடியூபில் அவர்களது நகைச்சுவை நிகழ்ச்சிகள் பிரபலம். ஒரு புதுமையான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். குறிப்பாக, சிவகார்த்திகேயன் சார் பேனரில் பணிபுரியும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவே எனக்கு சிறந்த இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது" என்றார்.

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த 'தயாரிப்பு எண் 2' படத்தில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் பல யூடியூப் பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
போஸ் வெங்கட் இயக்கி வரும் புதிய படத்தில் நடிகர் ரோபோ ஷங்கர் புதிய அவதாரம் ஒன்று எடுத்துள்ளார். #BoseVenkat #RoboShankar
நடிகர் போஸ் வெங்கட் புதுமுகங்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் ஆட்டோ டிரைவர்களின் அன்றாட சோதனைகள் மற்றும் சவால்களை பற்றிப் பேசும் ஒரு பாடல் படத்தில் இருக்கிறது, இந்த பாடலை நடிகர் ரோபோ ஷங்கர் பாடியிருக்கிறார்.
இது குறித்து நடிகர் மற்றும் இயக்குனரான போஸ் வெங்கட் கூறும்போது, "நான் ஆரம்பித்த இடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். நான் ஒரு ஆட்டோ டிரைவராக என் தொழிலை துவங்கினேன், அதற்கு மரியாதை செய்ய விரும்பினேன். பாடல் பற்றிய கருத்தாக்கம் உருவான போதே, அதை ராகம் மற்றும் ஸ்ருதி பற்றி தெரியாத யாரோ ஒருவர் தான் அதை பாட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். சாதாரண ஒரு தொழிலாளி பாடுவதை போல பாடல் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். பாடலை பாட நல்ல பிரபலமான ஒரு குரலை தேடினோம். ரோபோ ஷங்கர் குரல் அதற்கு பொருத்தமாக இருந்தது. பாடலின் இறுதி வடிவம் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு சில யோசனைகள் மற்றும் அனுமானங்கள் இருந்தபோதிலும், இசையமைப்பாளர் ஹரி சாய், அவர் பங்குக்கு சில துள்ளலான விஷயங்களை சேர்த்துக் கொண்டார்.

ஸ்ரீராம் கார்த்திக், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அறிமுக நடிகை காயத்ரி (யார் கண்ணன் மகள்), வலீனா ப்ரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்ரமணி மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிசால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய, இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்ய, ஹரி சாய் இசையமைக்கிறார். சிவ சங்கர் (கலை), விவேகா (பாடல்கள்), தினேஷ் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), ஜோசப் ஜாக்சன் (டிசைன்ஸ்), ஆர்.பாலகுமார் (ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்கிறார்’ என்றார்.
சர்கார், சண்டகோழி 2 படத்தை தொடர்ந்து, பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். #Varalakshmi
கடந்த ஆண்டு சர்கார், சண்டகோழி 2 ஆகிய படங்களில் நடித்த வரலட்சுமியின் கைவசம் வெல்வட் நகரம், கன்னி ராசி, நீயா 2, காட்டேரி, டேனி, கன்னித்தீவு உள்ளிட்ட படங்கள் உள்ளன.
இந்நிலையில் ராஜ பார்வை படத்திலும் நடித்து வருகிறார். ஜே.கே இயக்கும் இந்தப் படத்தில் கத்தியை லாவகமாகச் சுற்றும் காட்சி இடம்பெறுகிறது.
அதற்காக நிஜக் கத்தியை அவர் பிடிப்பதை வீடியோ பதிவாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “பெண்கள் சண்டையிட முடியாது என்று யார் சொன்னது? நிஜக் கத்தியுடன் ராஜ பார்வை படத்திற்காக பயிற்சி செய்கிறேன்.

பயிற்சியே முழுமையைத் தரும் அப்போது மிகுந்த மகிழ்ச்சியைப் பெறலாம். இதை படம் பிடித்த சிகை அலங்கார கலைஞர் ஸ்ரீதருக்கு நன்றி” என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் வரலட்சுமி பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கிறார்.
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனை பாட வைக்க முயற்சி செய்வதாக இசையமைப்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார். #Sunny #SunnyLeone #Veeramadevi
மூத்த நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் நடிகராக அறிமுகமாகி இசையமைப்பாளராக கலக்கி கொண்டிருப்பவர். கடந்த வாரம் வெளியான சத்ரு, பொட்டு 2 படங்களும் இவர் இசையில் வெளியானவை. அடுத்து திரிஷா, சன்னி லியோன், ஆண்ட்ரியா படங்களுக்கும் இசையமைக்கிறார்.
தான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் புதுமையான முயற்சிகளில் ஈடுபடும் அம்ரீஷ் அடுத்து பிரபுதேவாவை யங் மங் சங் படத்தில் பாடலாசிரியராக மாற்றி இருக்கிறார்.
இது பற்றி அவர் கூறும்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் லாரன்சை பாடகராக்கினேன். கா படத்தில் ஆண்ட்ரியாவை ஒரு பாடல் பாட வைத்துள்ளேன். கர்ஜனை, பரமபத விளையாட்டு என திரிஷா நடிக்கும் 2 படங்களுக்கு இசையமைக்கிறேன். திரிஷாவை பாட வைக்க முயற்சி செய்தேன். அவரோ அதற்கான நம்பிக்கை இன்னும் தனக்கு வரவில்லை என்றார்.

சன்னி லியோன் தமிழில் நாயகியாக அறிமுகமாகும் வீரமாதேவி படத்தில் அவரை பாட வைக்க திட்டமிட்டுள்ளேன். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் விருப்பம் இல்லை. இசையில் மட்டும்தான் எனது முழு கவனமும்’. இவ்வாறு அவர் கூறினார்.
சர்கார் படத்தை அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் முருகதாஸ், அடுத்ததாக பிரபல நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #ARMurugadoss
தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வரும் முருகதாஸ் கடந்த ஆண்டு விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கினார். வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றிபெற்ற நிலையில் தற்போது ரஜினிகாந்தைக் கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து முருகதாஸ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைக் கதாநாயகனாக கொண்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கில் சிரஞ்சீவியைக் கதாநாயகனாக வைத்து ஸ்டாலின் படத்தை இயக்கினார். அங்கு நல்ல வரவேற்பு பெற்ற அந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு மகேஷ் பாபுவைக் கதாநாயகனாக வைத்து ஸ்பைடர் படத்தைத் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியிருந்தார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். #Amalapaul
அமலாபால் நடிப்பில் தற்போது ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து ஆடை என்ற படத்திலும் அமலாபால் நடித்து வருகிறார்.
நடிகை அமலாபால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அது பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் கவலைப்படுவது இல்லை. கண்டு கொள்வதும் இல்லை.

தற்போது பீச்சில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பீச்சில் அலை சறுக்கு விளையாட்டை கற்று வரும் அமலாபால், அப்போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விஜய்யும், சூர்யாவும் அமைதியானவர்கள், அளந்து அளந்துதான் பேசுவார்கள் என்று அவருடன் நடித்த பிரபல நடிகை கூறியிருக்கிறார். #Vijay #Suriya #ThalapathyVijay
‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் அறிமுகமானவர் சாந்தி கிருஷ்ணா. தொடர்ந்து மணல் கயிறு, நேருக்கு நேர் முதலான பல படங்களில் நடித்தார். தற்போது கிருஷ்ணன் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-
’நேருக்கு நேர்’ படத்தில் எனக்கு தம்பியாக சூர்யா நடித்திருந்தார். அதுதான் அவருக்கு முதல் படம். அமைதியாக இருப்பார். அளந்து அளந்துதான் பேசுவார்.

சூர்யாவைப் போலத்தான் விஜய்யும். இருவருமே லேசாகத்தான் சிரிப்பார்கள். ஆனால் இதெல்லாம் கேமராவுக்கு வெளியேதான். கேமராவுக்கு எதிரே வந்து நின்றுவிட்டால், அப்படியொரு நடிப்பை வழங்குவார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
நேருக்கு நேர் படம் இப்போது ரீமேக் செய்யப்பட்டால், தனுஷ் நடிக்கலாம். சூர்யா கேரக்டரை கார்த்தி செய்தால், சிறப்பாக இருக்கும்’. இவ்வாறு சாந்தி கிருஷ்ணா தெரிவித்தார்.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமல், மது போதையில் புதுமுக நடிகரை தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Vimal
பெங்களூரை சேர்ந்தவர் புதுமுக நடிகர் அபிஷேக். இவர் விருகம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ‘அவன் அவள் அது’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நேற்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமர்ந்து அபிஷேக் போனில் பேசிக் கொண்டிந்தார். அப்போது அங்கு வந்த நடிகர் விமல் மற்றும் 4 பேர் சேர்ந்து அபிஷேக்கிடம் தகராறு செய்து கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நடிகர் அபிஷேக்கின் நெற்றி, கண், கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அபிஷேக் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக அபிஷேக் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில் மது போதையில் இருந்த நடிகர் விமல், அவரது ஆட்களும் என்னை தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விமல் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் முன்னோட்டம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ள படம் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'.
ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நாயகியாகவும் நடித்துள்ளனர். மாகாபா ஆனந்த், பால சரவணன், பொன்வண்ணன், பன்னீர் புஷ்பங்கள் புகழ் சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - கவின், இசை - சாம்.சி.எஸ், படத்தொகுப்பு - பவன் ஸ்ரீகுமார், தமிழக வெளியீடு - ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ், தயாரிப்பு - பாலாஜி கப்பா, எழுத்து, இயக்கம் - ரஞ்சித் ஜெயக்கொடி.

படம் பற்றி இயக்குநர் பேசும் போது,
எதிர் எதிர் முனையில் இருக்கும் ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை இது. இந்த படம் ஹரிஷ் கல்யாணை புதிய பரிமாணத்துடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என நம்புகிறேன் என்றார்.
படம் வருகிற மார்ச் 15-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan #ShilpaManjunath
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் டிரைலர்:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் நாயகனாக நடிக்கும் `ராஜ பீமா' படத்தின் படப்பிடிப்பு முழுவதுவமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #RajaBheema #Arav
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆரவ் நாயகனாக நடிக்கும் நடிக்கும் படம் `ராஜ பீமா'. நரேஷ் சம்பத் இயக்கும் இந்த படத்தில் ஆரவ் ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓவியா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதோடு, ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.
படத்தில் யானைக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித, விலங்கு முரணை பேசும் படமாக உருவாகியிருக்கிறது.
படம் குறித்து இயக்குநர் நரேஷ் சம்பத் பேசும் போது,
" பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில விஷயங்களை காகிதங்களில் கதையில் எழுதும்போது நன்றாக இருக்கும், ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது. குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருக்கிறோம் " என்றார்.
Happy to announce that we have bagged the TN theatrical rights for #RajaBheema after blockbuster #Viswasam..
— Sathya Jyothi Films (@SathyaJyothii) March 9, 2019
Shooting wrapped.. Releasing soon this summer🙂 pic.twitter.com/uxjgUD4EbG
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சத்யஜோதி பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. #RajaBheema #Arav #AshimaNarwal
கே.ஜி.எஃப் படத்தில் நடித்த நடிகர் யஷ் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படும் நிலையில், யஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், கொலை செய்யும் அளவுக்கு தனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று கூறினார். #Yash
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான கேஜிஎப் படம் பெரிய வெற்றி பெற்றது. விஷால், ஆர்யா உள்ளிட்டவர்களுக்கும் யஷ் நண்பர் ஆவார். கேஜிஎப் படத்தை விஷால் தமிழில் ரிலீஸ் செய்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு ஒரு மர்மக் கும்பலிடமிருந்து தொடர் கொலை மிரட்டல்கள் வருவதாக யஷ் போலீசில் புகார் அளித்தார். கடந்த ஆண்டு மற்றொரு கன்னட நடிகரான அர்ஜுன் தேவ், தனக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகப் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அந்த புகார்கள் விசாரிக்கப்பட்டன.
கடந்த 7-ந் தேதி கர்நாடக போலீசாரால், பாரத் என்கிற ‘ஸ்லம்‘ பாரத் என்ற ரவுடி உள்பட நான்கு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஒரு வழக்கில் கைதான இவர்களை, 3 நாள்களாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையின் போது பாரத், தனது கும்பல் விரைவில் ஒரு கன்னட நடிகரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

இந்தத் தகவல் வெளியானதும், பழைய வழக்குகளைக் கருத்தில் கொண்டு, அது யஷ் அல்லது அர்ஜுன் தேவாக இருக்கலாம் என போலீசார் யூகித்தனர். இந்தச் செய்தி வெளியானதும், கன்னட சினிமா துறையினரும், யஷ் ரசிகர் மன்ற உறுப்பினர்களும் கொந்தளித்தனர்.
ரசிகர்களில் சிலர், யஷுக்கு திரையுலகில் போட்டியாக இருக்கும் நடிகர்களைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். இதுகுறித்து யஷ், சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, “எனக்கு இதுவரை எந்தக் கொலை மிரட்டலும் வரவில்லை. நான் பாதுகாப்பாக உள்ளேன்,” என்றார். மேலும், “திரையுலகில் யாரும் எனக்கு எதிரி கிடையாது. இங்கே இருப்பது ஆரோக்கியமான போட்டி. கொலை செய்யும் அளவுக்கு கீழ்த்தரமாக யாரும் நடந்து கொள்ளப் போவதில்லை. அதனால், என் ரசிகர்கள் பிற நடிகர்களைக் குறைசொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். #Yash






