என் மலர்
சினிமா செய்திகள்
கே.ஜி.எஃப் படத்தில் நடித்த நடிகர் யஷ் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படும் நிலையில், யஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், கொலை செய்யும் அளவுக்கு தனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று கூறினார். #Yash
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான கேஜிஎப் படம் பெரிய வெற்றி பெற்றது. விஷால், ஆர்யா உள்ளிட்டவர்களுக்கும் யஷ் நண்பர் ஆவார். கேஜிஎப் படத்தை விஷால் தமிழில் ரிலீஸ் செய்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு ஒரு மர்மக் கும்பலிடமிருந்து தொடர் கொலை மிரட்டல்கள் வருவதாக யஷ் போலீசில் புகார் அளித்தார். கடந்த ஆண்டு மற்றொரு கன்னட நடிகரான அர்ஜுன் தேவ், தனக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகப் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அந்த புகார்கள் விசாரிக்கப்பட்டன.
கடந்த 7-ந் தேதி கர்நாடக போலீசாரால், பாரத் என்கிற ‘ஸ்லம்‘ பாரத் என்ற ரவுடி உள்பட நான்கு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஒரு வழக்கில் கைதான இவர்களை, 3 நாள்களாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையின் போது பாரத், தனது கும்பல் விரைவில் ஒரு கன்னட நடிகரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

இந்தத் தகவல் வெளியானதும், பழைய வழக்குகளைக் கருத்தில் கொண்டு, அது யஷ் அல்லது அர்ஜுன் தேவாக இருக்கலாம் என போலீசார் யூகித்தனர். இந்தச் செய்தி வெளியானதும், கன்னட சினிமா துறையினரும், யஷ் ரசிகர் மன்ற உறுப்பினர்களும் கொந்தளித்தனர்.
ரசிகர்களில் சிலர், யஷுக்கு திரையுலகில் போட்டியாக இருக்கும் நடிகர்களைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். இதுகுறித்து யஷ், சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, “எனக்கு இதுவரை எந்தக் கொலை மிரட்டலும் வரவில்லை. நான் பாதுகாப்பாக உள்ளேன்,” என்றார். மேலும், “திரையுலகில் யாரும் எனக்கு எதிரி கிடையாது. இங்கே இருப்பது ஆரோக்கியமான போட்டி. கொலை செய்யும் அளவுக்கு கீழ்த்தரமாக யாரும் நடந்து கொள்ளப் போவதில்லை. அதனால், என் ரசிகர்கள் பிற நடிகர்களைக் குறைசொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். #Yash
நடிகர் சிம்பு நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில், அவரது தம்பி குறளரசன், சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். #STR #Kuralarasan
டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசனுக்கு வருகிற ஏப்ரல் 26-ந் தேதி சென்னையில் வைத்து திருமணம் நடக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
குரளரசன் இஸ்லாமிய பெண் ஒருரை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், தனது பெற்றோர் சம்மதத்துடன் அவர் சமீபத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இதுகுறித்து குறளரசனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,

ஏப்ரல் 26-ல் எனக்கு திருமணம் என்பதில் உண்மையில்லை. ஆனால் நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். எனது திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். அண்ணன் சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்வது பற்றி கேட்டதற்கு, புன்முறுவலுடன் பதிலளித்த குறளரசன், எனக்கு திருமணம் நடந்து முடிந்தால், அடுத்து அனைவரது கவனமும் சிம்புவின் பக்கம் திரும்பும். எனவே திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து அவருக்கு வேறு வழி இருக்காது. என்றார்.
குறளரசன் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. #STR #Kuralarasan #TRajendar
ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்த நிலையில், வருகிற 14-ந் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. #AryawedsSayyeshaa #Arya #Sayyeshaa
‘அறிந்தும் அறியாமலும்‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆர்யா. ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
கடந்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ட்விட்டர் பக்கத்தில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். கடந்த 9-ந் தேதி மாலை ஐதராபாத்தில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் ஆர்யா - சாயிஷாவின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

ஆர்யா-சாயிஷா திருமணம் நேற்று இஸ்லாமிய முறைப்படி நடந்தது. திருமண நிகழ்ச்சியிலும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஷாம், ராணா தயாரிப்பாளர்கள் ராஜசேகர பாண்டியன், ஞானவேல் ராஜா, தனஞ்செயன் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். வருகிற 14-ந் தேதி சென்னையில் ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. #AryawedsSayyeshaa #Arya #Sayyeshaa
சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். #PadmaAwards #Mohanlal #Prabhudeva
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
திரைத்துறை சார்பில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான், பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று (11.3.19) டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலரும் பத்ம விருதுகளை பெற்றுக் கொண்டனர். #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva #ShankarMahadevan
தடையறத் தாக்க, தடம் படங்களின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனியுடன் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அருண் விஜய் கூறினார். #ArunVijay #Thadam
நடிகர் அருண் விஜய் நடித்த தடம் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்த அருண் விஜய் மற்றும் பட குழுவினர் இந்த திரைப்படம் ஓடும் திரையரங்களுக்கு நேரில் சென்று வருகிறார்கள்.
நெல்லையில் ராம் தியேட்டரில் இந்த படம் திரையிடப்பட்டு உள்ளது. நேற்று காலையில் முதல் காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது நடிகர் அருண் விஜய், இயக்குனர் மகிழ்திருமேனி, நடிகைகள் தன்யாஹோப், ஸ்மிருதி ஆகியோர் வந்தனர். அவர்களை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
ரசிகர்கள் மத்தியில் அருண் விஜய் பேசியதாவது:-
தடம் திரைப்படம் எனது வாழ்க்கையில் ஒரு மைல் கல். இந்த படம் திரையிடப்பட்ட சினிமா தியேட்டர்களில் நேரிடையாக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறேன். ரசிகர்களும் எங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ரசிகர்கள் உற்சாகப்படுத்தினால் தான் என்னால் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முடியும்.

மலைமலை, மாஞ்சாவேலு உள்ளிட்ட திரைப்படங்கள் வணிகரீதியில் பெரிய அளவில் வெற்றியை தந்தது. என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. வாய்ப்பு கிடைத்தால் அஜித்துடனும், விஜயுடனும் நடிக்க தயாராக இருக்கிறேன்.
தற்போது அக்னி சிறகுகள், பாக்சர் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் மூலம் பல திரைப்படங்கள் வெளியிடப்படுகிறது. அப்படி இருந்தும் நல்ல படங்களை ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று பார்த்து வருகிறார்கள். நானும், மகிழ்திருமேனியும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளது. அதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அருண்விஜயுடன், ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். முன்னதாக தியேட்டருக்கு வந்த அருண் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. #Thadam #ArunVijay #MagizhThirumeni
‘என்.ஜி.கே.’, ‘காப்பான்’ படங்களை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, ராணுவ அதிகாரியாக நடிப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Suriya38 #SudhaKongara
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
2டி எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கிறார். பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதை, இது. படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்க இருக்கிறது.

சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படம் சூர்யாவின் 38-வது படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விவேக் பாடல்களை எழுதுகிறார். #Suriya38
#SudhaKongara #GRGopinath
எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி. கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி இருக்கும் `நீயா 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் லட்சுமி ராயால் ஜெய் சங்கடத்திற்குள்ளானார். #Neeya2 #Jai
கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் `நீயா'. 39 வருடங்களுக்கு பிறகு `நீயா 2' என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது.
படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் இயக்குநர் எல்.சுரேஷ், ஜெய், ராய் லட்சுமி, பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
பொதுவாக பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நடிகர் ஜெய் நீயா 2 படத்திற்காக பங்கேற்றிருந்தார். அவர் பேசும்போது,
தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாகிவிட்டது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார். முடிவில் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜெய் மற்றும் ராய் லட்சுமி இணைந்து புகைப்படம் எடுத்தனர். அப்போது ராய் லட்சுமி போட்டிருந்து காலணியின் ஹீல்ஸ் மிக உயராக இருந்ததால், நாயகியுடன் சிரமப்பட்டுக் கொண்டு ஜெய் நின்றுள்ளார்.

படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #Neeya2 #Jai #RaaiLaxmi
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் நடிப்பில் உருவாகும் பிங்க் ரீமேக் கதையை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளதாக ஷ்ரத்தா ஸ்ரீனாத் கூறியுள்ளார். #NerkondaPaarvai #Thala59 #AjithKumar
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
நேர்கொண்ட பார்வை என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. பிங்க் கதையை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்காக சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று படத்தில் டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

படம் அஜித் பிறந்தநாளான மே1-ந் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட வேகமாக சென்றாலும், விஸ்வாசம் படத்திற்கு இப்போது வரை, வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருக்கிறது.
இதனால் மே 1-ந் தேதி வெளியீட்டுக்கு பதிலாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். #NerkondaPaarvai #Thala59 #AjithKumar #ThalaAjith #VidyaBalan #ShraddhaSrinath
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Devi2 #Prabhudeva
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர்.
நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
My next with @Tamannaahspeaks & @Nanditasweta A Much Excited Horror Sequal #Devi2 Dir by Vijay will be releasing on April 12th Worldwide #Devi2FromApr12
— Prabhudheva (@PDdancing) March 9, 2019
A @SamCSMusic Musical Prod by GV Films & @tridentartsofflpic.twitter.com/1IBoshtXpK
ஜி.வி.பிலிம்ஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்.சி.எஸ் இசையமைக்க, அயனன்கா போஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Devi2 #Prabhudeva
அன்னா போடன், ரியான் ப்ளெக் இயக்கத்தில் ஃப்ரீ லார்சன் - சாமுவேல் ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கேப்டன் மார்வெல்' படத்தின் விமர்சனம். #CaptainMarvel #CaptainMarvelReview
1995-ல் ஹலா கிரகத்தில் கீரி இனத்தவருடன் ஸ்டார்போர்ஸ் உறுப்பினராக இருக்கிறார் வெர்ஸ் (ஃப்ரீ லார்சன்). ஜெட் விமானியான வெர்சுக்கு தனது கடந்த கால நினைவுகள் அவ்வப்போது வந்து செல்கிறது. அதீத சக்தி படைத்த வெர்சுக்கு போர் பயிற்சிகளை அளித்து வருகிறார் யோன் ராக் (ஜூட் லா). இந்த நிலையில், தங்களது கிரகத்திற்குள் ஸ்கிரல்ஸ் இனம் புகுந்த தகவல் கிடைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
இந்த தேடலில் வெர்சும் இடம்பெறுகிறார். அப்போது இரு கும்பலுக்கும் இடையேயான சண்டையில், ஸ்கிரல்ஸ், வெர்ஸை கடத்தி சென்று அவளது மூளையில் இருக்கும் பழைய நினைவுகளை திருட முயற்சிக்கிறார்கள். தன்னையறியாமல் தனக்கும் இருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் வெர்ஸ், ஸ்கிரல்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சிக்கிறாள்.

அப்போது வெர்ஸ் செல்லும் விண்கலத்தை ஸ்கரல்ஸ் தாக்கிவிட விண்வெளியில் அந்த விண்கலம் வெடித்து, வெர்ஸ் பூமியில் வந்து விழுகிறாள். அங்கு ஷூல்டு ஏஜெண்ட் சாமுவேல் எல்.ஜாக்சன் - வெர்ஸ் இருவரும் சந்திக்கிறார்கள். அதேநேரத்தில் வெர்சை தேடி ஸ்கிரல்ஸ் பூமிக்கு வந்துவிடுகிறது.
கடைசியில், ஸ்கிரல்ஸ் வெர்ஸை தேடி வருவதற்கான காரணம் என்ன? வெர்சுக்கு பழைய நியாபகங்கள் திரும்பியதா? அவர் எப்படி கேப்டன் மார்வெல்லாக மாறுகிறார்? என்பதே படத்தின் படத்தின் மீதிக்கதை.

ஃப்ரீ லார்சன், சாமுவேல் எல்.ஜாக்சன், பென் மெண்டல்சோன், டிஜிமோன் ஹோச்சோ, லீ பேஸ், லக்ஷனா லிஞ்ச், ஜூட் லா என அனைத்து கதாபாத்திரங்களுமே அசத்தியிருக்கிறார்கள். சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ சமீபத்தில் மறைந்த நிலையில், இந்த படத்திலும் அவர் சிறப்பு தோற்றம் ஏற்றிருக்கிறார்.
அன்னா போடன், ரியான் ப்ளெக் இயக்கத்தில் மார்வெல்லின் வழக்கமான சூப்பர் ஹீரோ கதையாக உருவாகி இருக்கிறது. காமெடி, ஆக்ஷன், பிரமிப்பு என மற்ற அனைத்து ரசிக்கும்படியாக இருந்தாலும், மற்ற கதைகளில் இருக்கும் ஸ்வாரஸ்யம் சற்றே குறைவு தான். படத்தின் முடிவில் வரும் போஸ்ட் கிரெடிட் ரசிகர்களை கவர்வதுடன், அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் பூனை கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

பினார் தோபார்க்கின் பின்னணி இசை, பென் டேவிசின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் `கேப்டன் மார்வெல்' புதுமை. #CaptainMarvel #CaptainMarvelReview #BrieLarson #SamuelLJackson
ஜெகன் ராஜ்சேகர் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் - லால் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்திற்கு காட் ஃபாதர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #GodFather
நட்டி நட்ராஜ் நடிப்பில் சதுரங்க வேட்டை பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான போங்கு படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையில், அவரது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
ஜெகன் ராஜ்சேகர் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். காட் ஃபாதர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நட்டியுடன் நடிகர் லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நட்டி - லாலின் பாதி முகங்கள் இடம்பெற்றிருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் அதியமானாக நட்டியும், மருது சிங்கமாக லாலும் நடிக்கிறார்கள்.
Congrats team 💐
— VijaySethupathi (@VijaySethuOffl) March 8, 2019
Here it is #GodFather first look poster.@firstclap1@jeganrajshekar@natty_nataraj@shammysaga@theedittable@ajithvasudev04@onlynikilpic.twitter.com/sUUzP3nv08
பர்ஸ்ட் கிளாப் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு நவீன் ரவிந்திரன் இசையமைக்க, என்.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பையும், அருண்சங்கர் துரை கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
படத்தின் டிரைலர் மற்றும் இசை ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது. #GodFather #Natty #Lal
`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்திற்கு `டெடி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #Teddy #Arya #ShakthiSoundarRajan
ஆர்யாவின் முந்தைய படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், கடைசியாக வெளியான `கஜினிகாந்த்' மட்டும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், `மிருதன்', `டிக் டிக் டிக்' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த சக்தி சவுந்தர் ராஜன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், படத்திற்கு டெடி என்று தலைப்பு வைத்துள்ளனர்.
Thank you for this wonderful gift brothers @ShaktiRajan@kegvraja@immancomposer 😘😘😘🤗🤗🤗👌👌👌#TeddyTheFilm🐻 super excited for this one 💪💪👍@StudioGreen2pic.twitter.com/U4j5gxnnnJ
— Arya (@arya_offl) March 9, 2019
ஆர்யா தற்போது சூர்யாவுடன் இணைந்து `காப்பான்' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர கன்னடத்தில் வரவேற்பை பெற்ற `மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே ஆர்யா - சாயிஷாவுக்கு ஐதராபாத்தில் வைத்து இன்று திருமணம் நடந்தது. #Teddy #Arya #ShakthiSoundarRajan






