search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Padmashri"

  • கே.ஜே.யேசுதாஸ் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
  • இவர் 8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

  கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

  8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அது மட்மின்றி மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாடகர் ஜேசுதாசுக்கு இன்று 84-வது பிறந்தநாள் ஆகும்.


  இந்த ஆண்டு தனது பிறந்த நாளில் கேரளாவில் இருக்க ஜேசுதாஸ் விரும்பினார். ஆனால் அமெரிக்காவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக அவர் அங்கு சென்றிருக்கிறார். இதன் காரணமாக அவர் நினைத்தபடி தனது பிறந்தநாளில் கேரளாவில் இருக்க முடியாமல் போனது.

  இருந்தபோதிலும் அவர் தனது பிறந்தநாளை ஆன்லைன் மூலமாக ரசிகர்களுடன் கொண்டாடினார். அவர் ஆன்லைனில் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி, கேக் வெட்டினார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜேசுதாசுக்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் மற்றும் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

  • நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார்.
  • விழாவில் மாணவ - மாணவிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றன.

  சிவகிரி:

  வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் செயல்படும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குறைந்தோர் சிறப்புப் பள்ளி 11-வது ஆண்டு விழா, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழரசன், குருசாமிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் தவமணி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் தாசில்தார் பாலகிருஷ்ணன், வேலுச்சாமி, வக்கீல் செந்தில்குமார், டாக்டர் மயில்வாகனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பள்ளி மாணவ - மாணவிகளின் ஆடல், பாடல் மற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றன.

  வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பேரூராட்சிமன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். தமிழ் ஆசிரியர் வாசு கணேசன், அம்ஜத்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் சிறப்பாசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, உதவி ஆசிரியர் மகேஸ்வரி, கவிதா, முத்துலட்சுமி, அருண், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். #PadmaAwards #Mohanlal #Prabhudeva
  ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

  திரைத்துறை சார்பில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான், பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில், இன்று (11.3.19) டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலரும் பத்ம விருதுகளை பெற்றுக் கொண்டனர். #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva #ShankarMahadevan

  மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. #PadmaAwards #Mohanlal #Padmabushan
  ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  அதன்படி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அதேபோல் நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.  பத்ம விருதுகள் வென்ற பிரபலங்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva

  ×