search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivanthi Adithanar"

    • தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும்.
    • சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.

    இதில், கனிமொழி எம்பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.

    இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்த ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும் என திமுக பாராளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனர் பரிந்துரைத்துள்ளார்.

    மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் கடல்சார் பல்கலைக் கழகம், சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வாக்குச்சாட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

    • நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார்.
    • விழாவில் மாணவ - மாணவிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றன.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் செயல்படும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குறைந்தோர் சிறப்புப் பள்ளி 11-வது ஆண்டு விழா, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழரசன், குருசாமிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் தவமணி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் தாசில்தார் பாலகிருஷ்ணன், வேலுச்சாமி, வக்கீல் செந்தில்குமார், டாக்டர் மயில்வாகனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பள்ளி மாணவ - மாணவிகளின் ஆடல், பாடல் மற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றன.

    வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பேரூராட்சிமன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். தமிழ் ஆசிரியர் வாசு கணேசன், அம்ஜத்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் சிறப்பாசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, உதவி ஆசிரியர் மகேஸ்வரி, கவிதா, முத்துலட்சுமி, அருண், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ரூ.1.34 கோடியில் மணிமண்டபம் கட்ட அரசாணை வந்துள்ளதால் அதற்கான பணி விரைவில் தொடங்கும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #SivanthiAditanar
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மற்றும் இசை மேதை நல்லப்ப சுவாமிகள் ஆகிய இருவருக்கும் இன்று பிறந்த நாள். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு ரூ.1.34 கோடியில் மணிமண்டபம் கட்ட அரசாணை வந்துள்ளது. மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.

    அதே போல் நல்லப்ப சுவாமிக்கு விளாத்திகுளத்தில் ரூ.20 லட்சத்தில் நினைவு தூண் கட்ட அரசாணை வந்துள்ளது. நல்லப்ப சுவாமி பிறந்த நாள் அமைச்சர் தலைமையில் அரசு விழாவாக இன்று மாலை கொண்டாடப்படுகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் பொதுமக்களிடம் நேற்று கருத்து கேட்டனர். ஆய்வுக்குழுவிடம் மொத்தம் 2 ஆயிரத்து 500 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


    ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர தாதுவை அகற்ற அந்த நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதை வாங்கக்கூடிய நபர்கள் வந்ததும் தாமிர தாது அகற்றும் பணி தொடங்கும்.

    தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்து வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மலேசிய மணல் இருப்பு உள்ளது. அதில் கோர்ட்டு உத்தரவுப்படி முதல் கட்டமாக 11 ஆயிரம் டன் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை நாளை தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SivanthiAditanar #thoothukudicollector #sandeepnanduri
    ×