search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கொலை செய்யும் அளவுக்கு எனக்கு எதிரிகள் இல்லை - நடிகர் யஷ் பேட்டி
    X

    கொலை செய்யும் அளவுக்கு எனக்கு எதிரிகள் இல்லை - நடிகர் யஷ் பேட்டி

    கே.ஜி.எஃப் படத்தில் நடித்த நடிகர் யஷ் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படும் நிலையில், யஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், கொலை செய்யும் அளவுக்கு தனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று கூறினார். #Yash
    கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான கேஜிஎப் படம் பெரிய வெற்றி பெற்றது. விஷால், ஆர்யா உள்ளிட்டவர்களுக்கும் யஷ் நண்பர் ஆவார். கேஜிஎப் படத்தை விஷால் தமிழில் ரிலீஸ் செய்தார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு ஒரு மர்மக் கும்பலிடமிருந்து தொடர் கொலை மிரட்டல்கள் வருவதாக யஷ் போலீசில் புகார் அளித்தார். கடந்த ஆண்டு மற்றொரு கன்னட நடிகரான அர்ஜுன் தேவ், தனக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகப் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அந்த புகார்கள் விசாரிக்கப்பட்டன.

    கடந்த 7-ந் தேதி கர்நாடக போலீசாரால், பாரத் என்கிற ‘ஸ்லம்‘ பாரத் என்ற ரவுடி உள்பட நான்கு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஒரு வழக்கில் கைதான இவர்களை, 3 நாள்களாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையின் போது பாரத், தனது கும்பல் விரைவில் ஒரு கன்னட நடிகரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான்.



    இந்தத் தகவல் வெளியானதும், பழைய வழக்குகளைக் கருத்தில் கொண்டு, அது யஷ் அல்லது அர்ஜுன் தேவாக இருக்கலாம் என போலீசார் யூகித்தனர். இந்தச் செய்தி வெளியானதும், கன்னட சினிமா துறையினரும், யஷ் ரசிகர் மன்ற உறுப்பினர்களும் கொந்தளித்தனர்.

    ரசிகர்களில் சிலர், யஷுக்கு திரையுலகில் போட்டியாக இருக்கும் நடிகர்களைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். இதுகுறித்து யஷ், சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, “எனக்கு இதுவரை எந்தக் கொலை மிரட்டலும் வரவில்லை. நான் பாதுகாப்பாக உள்ளேன்,” என்றார். மேலும், “திரையுலகில் யாரும் எனக்கு எதிரி கிடையாது. இங்கே இருப்பது ஆரோக்கியமான போட்டி. கொலை செய்யும் அளவுக்கு கீழ்த்தரமாக யாரும் நடந்து கொள்ளப் போவதில்லை. அதனால், என் ரசிகர்கள் பிற நடிகர்களைக் குறைசொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். #Yash

    Next Story
    ×