என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’.
    • இப்படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான'லிஃப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.


    டாடா

    இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'டாடா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    டாடா

    மேலும், இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் 'டாடா' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டாடா படம் பார்த்தேன். உணர்வு ரீதியாக அப்படம் என்னைத் தொட்டது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் விதமான குடும்ப திரைப்படம். இயக்குனர் கணேஷ் கே பாபு மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • 8 தொட்டாக்கள், ஜீவி, c/o காதல், வனம், ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் வெற்றி.
    • இவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 8 தொட்டாக்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வெற்றி. இப்படத்தை தொடர்ந்து ஜீவி படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச பட விழாக்களிலும் விருதுகள் கிடைத்தன. அதன்பின்னர் c/o காதல், வனம், ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.


    இரவு
    இரவு

    இந்நிலையில் வெற்றி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இரவு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்கவுள்ளார். மேலும் இதில் சந்தான பாரதி, மன்சூர் அலிகான், பொன்னம்பலம், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 

    • லைகா புரொடக்ஷன்ஸ் தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது.
    • இந்நிறுவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளார்.

    தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. தற்போது 'பொன்னியின் செல்வன் 2', 'இந்தியன் 2', 'லால் சலாம்' மற்றும் அஜித் 62 படத்தை தயாரித்து வருகிறது.


    திருவின் குரல்

    திருவின் குரல்

    இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் நிருவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 'திருவின் குரல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    அருள்நிதி தற்போது 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
    • சச்சின் டெண்டுல்கரை சந்தித்து நடிகர் சூர்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    சூர்யா - சச்சின் டெண்டுல்கர்

    சூர்யா - சச்சின் டெண்டுல்கர்

    இந்நிலையில் நடிகர் சூர்யா நேற்று மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரன் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
    • ஷாருக்கான் ஜவான் படத்திற்காக அட்லீ மீது கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


    ஜவான்

    ஜவான்


    பான் இந்தியா படமாக உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விஜய் தற்போது லியோ பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அவர் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் அல்லு அர்ஜுனை நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


    அட்லீ - ஷாருக்கான்

    அட்லீ - ஷாருக்கான்


    இந்நிலையில் ஜாவன் படத்திற்காக அட்லீ தான் படத்திற்கு நினைத்ததை விட அதிகமாக செலவு செய்ததால் ஷாருக்கான் அவர் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கும் அட்லீ சென்னை வந்து தனது மன வேதனையை தெரிவித்ததாக சில செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் ஜவான் இந்த ஆண்டு ஜூன் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜவான் வெளியீடு தள்ளிப்போகும் எனவும் கூறப்படுகிறது. 

    • வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‘வாத்தி’.
    • ’வாத்தி’ திரைப்படம் நாளை (பிப்ரவரி 17-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    ஜிவி பிரகாஷ் குமார்

    ஜிவி பிரகாஷ் குமார்

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் நாளை (பிப்ரவரி 17-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பிரின்ஸ், வாரிசு உள்ளிட்ட பல படங்களின் இசையமைப்பாளரான தமன், வாத்தி படத்தின் பாடல்களுக்காக ஜிவிபிரகாஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், விருதுகளுக்கு தயாராகுங்கள் அன்பு சகோதரர் ஜிவி பிரகாஷ். வாத்தி மற்றும் சார் படத்திற்கு முன்கூட்டியே வாழ்த்துகள். அடுத்த முறை உங்களுடன் இணைய முயற்சி செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

    • தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு.
    • இவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தான் விளையாடிய பேட்டை பரிசளித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொம்மை நாயகி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    யோகிபாபு

    யோகிபாபு


    இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) படத்தில் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது.


    யோகிபாபு

    யோகிபாபு

    இந்நிலையில் தோனி பயிற்சியில் பயன்படுத்திய பேட்டை யோகிபாபுவுக்கு பரிசாக அளித்துள்ளதாகவும், இதற்காக நன்றி தெரிவித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு யோகிபாபு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'லவ் டுடே'.
    • இப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபற்றது.

    ஜெயம் ரவி நடித்து 2019-ல் வெளியான 'கோமாளி' படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படம் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களை கடந்து உள்ளது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

    இந்த வெற்றி விழா நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பங்கேற்று பேசும்போது, "லவ் டுடே படத்தில் கதாநாயகனாக நடிக்க நான் விரும்பியதும் பலர் தயங்கினர். ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம் என்றனர். ஹீரோவாக எதற்கு நடிக்கிறாய் என்றும் பேசினர். படம் தோற்று கீழே விழுந்தால் திரும்ப எழுவது கஷ்டம் என்பதும் நிறைய பேர் கேலி செய்வார்கள் என்பதும் எனக்கும் புரிந்தது.

     

    பிரதீப் ரங்கநாதன்

    பிரதீப் ரங்கநாதன்

    ஆனாலும் மலை ஏற மற்ற உபகரணங்களை விட மலை முக்கியம் என்று கருதினேன். லவ் டுடே கதையை மலையாக நம்பி அதில் ஏறினேன். வெற்றி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் லவ் டுடே வசூல் ஈட்டி உள்ளது. அறிமுக நாயகனாக நான் இருந்தாலும் கதையின் மீது நம்பிக்கை வைத்து 'லவ் டுடே' படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி. என்றைக்கும் இதை மறக்க மாட்டேன். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் மலை ஏறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்'' என்றார்.

    • நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர்.
    • ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மிகவும் பிரலமடைந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார். 


    இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில், அனுமதியின்றி வளர்த்து வந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.




    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.




    இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் 30 நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிக்கும் திரைப்படம் ‘மாவீரன்’.
    • இந்த படத்தில் அதிதி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    "டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர்.




    இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு முதல் பாடலான சீன்னு சின்னு பாடல் வருகிற 17ம் தேதியன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைதலாகி வருகிறது.

    • நடிகர் நானி தற்போது ‘தசரா’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.




    இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஓரி வாரி' பாடலை படக்குழு நேற்று வெளியிட்டிருந்த நிலையில் இதன் தமிழ் பாடலான தீக்காரி பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    ×