என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    வாத்தி

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலாக வெளியான 'வா வாத்தி' பாடல் தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    'வாத்தி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • கமல்ஹாசன் தற்போது இந்தியன் -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் தற்போது மீண்டும் இந்தியன் -2 படப்பிடிப்பில் இறங்கியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இவர் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி.15 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்.
    • இப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து உலக அளவில் ஹிட் அடித்தது.

    நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.


    அரபிக்குத்து - பீஸ்ட்

    அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களைக்கு மேல் கடந்துள்ளது. இதையடுத்து இப்பாடல் வெளியாகி ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்து படக்குழு வீடியோ ஒன்றி வெளியிட்டது.


    அரபிக்குத்து - பீஸ்ட்

    இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே அரப்பிக்குத்து பாடலின் புதிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.


    • சில தினங்களுக்கு முன்பு நடிகை பூர்ணா துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்ததையடுத்து வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, சமீபத்தில் துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


    பூர்ணா

    சில தினங்களுக்கு முன்பு பூர்ணா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்ததையடுத்து வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது புதிய போட்டோஷுட் நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ள பூர்ணா, "வாழ்க்கையின் மிகப் பெரிய அதிசயம், உங்களுக்குள் உயிர் வளர்வதுதான்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.


    • நடிகர் கிச்சா சுதீப் தொடர்ந்து பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிக்கும் ‘கப்ஜா’ திரைப்படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் 'நான் ஈ' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இவர் தற்போது பான் இந்தியா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இயக்குனர் ஆர். சந்துரு இயக்கத்தில் இவர் நடிக்கும் 'கப்ஜா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வருகிற மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


    கிச்சா சுதீப்

    கார்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நடிகர் கிச்சா சுதீப் அரசியலில் களமிறங்கப் போவதாக தகவல் பரவி வந்தது. இதற்கு நடிகர் சுதீப் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியதாவது, "அனைத்து அரசியல் தலைவர்களுடனும் எனக்கு தொடர்பு இருக்கிறது. ஆனால் அரசியலுக்கு வருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. அது பற்றி முடிவு எடுக்கும் போது கண்டிப்பாக அதை தெரியப்படுத்துவேன். அதற்கு முன் என் ரசிகர்கள் அதை விரும்புகிறார்களா? என்று தெரிந்துகொள்ள வேண்டும். அரசியல் இல்லாமல் சேவை செய்ய முடியும் என்கிற போது, நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்" என்று கூறினார்.

    • தமிழில் முகமுடி படத்தின் மூலம் அறிமுகமானவர் ‘பூஜா ஹெக்டே’.
    • இவர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார்.

    தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.


    பூஜா ஹெக்டே

    இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெறவே தன் சம்பளத்தை ரூ.3 கோடியிலிருந்து ரூ.3.5 கோடியாக உயர்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் சமீபத்தில் நடித்த 'ராதே ஷ்யாம்' போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம் ‘ஆர்சி15’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.


    ஆர்.சி.15

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நடைபெற்று வருகிறது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஆர்சி15 படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’.
    • இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    "டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    மாவீரன் போஸ்டர்

    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீன்னா சீன்னா' பாடல் வருகிற 17-ம் தேதியன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டை கொடுத்து வருகிறது.


    மாவீரன் போஸ்டர்

    அதன்படி, 'சீன்னா சீன்னா' பாடலை கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் எழுதியுள்ளனர். மேலும், இந்த பாடலுக்கு சோபி பவுல்ராஜ் நடன இயகுனராக பணிபுரிந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.


    • சிறிய பட்ஜெட்டில் உருவாகி அனைவரையும் திரும்பி பார்க்க செய்த திரைப்படம் ’காந்தாரா’.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    காந்தாரா

    கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


    ரிஷப் ஷெட்டி

    இந்நிலையில், 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா வருகிற 20 -ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கே.எஸ்.தென்னரசுக்கு வாக்கு சேகரித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
    • 21 மாதகாலமாக மக்களை சந்திக்க வராத அமைச்சர்கள், இப்போது தேர்தல் என்றதும் இங்கேயே முகாம் அமைத்து வீதிவீதியாக வருகிறார்கள் என்று எடப்பாடி கூறினார்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். வீரப்பம்பாளையம், பெரியவலசு நால்ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் வாக்குகள் கேட்டு பேசினார்.

    அவர் பேசியதாவது, "21 மாதகாலமாக மக்களை சந்திக்க வராத அமைச்சர்கள், இப்போது தேர்தல் என்றதும் இங்கேயே முகாம் அமைத்து வீதிவீதியாக வருகிறார்கள். மக்களை ஏமாற்ற பரோட்டா போடுவது, வடை சுடுவது என்று ஏமாற்றுகிறார்கள். பரோட்டா போடவும், டீ போடவுமா நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இந்த கிழக்கு தொகுதிக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றுதானே மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அதை செய்யாமல் மக்களை ஏமாற்றுகிறீர்கள்" என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


    இயக்குனர் நவீன்

    அப்போது "நீ சரியான ஆம்பளையாக இருந்தால். மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் வாக்காளர்களை வெளியே விட்டு சந்தித்து வாக்கு சேகரியுங்கள்" என்று கூறினார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 'மூடர் கூடம்', 'கொளஞ்சி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நவீன் தனது சமூக வலைதளத்தில் எடப்பாடியை விமர்சித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்" என்று பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'வராக ரூபம்' பாடல் காப்புரிமை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. கன்னடத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

     

    காந்தாரா  

    காந்தாரா  


    இதனிடையே காந்தாராவில் இடம்பெற்றிருந்த சூப்பர்ஹிட் பாடலான வராக ரூபம் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து, கேரளாவின் கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய்க்குடம் பிரிஜ் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் வராக ரூபம் பாடலை திரையரங்கம் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஓடிடி தளத்தில் வராக ரூபம் பாடல் இடம்பெறாமல் காந்தாரா திரைப்படம் வெளியானது. அதன்பின்னர் இந்த பாடலுக்கான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


    காந்தாரா  

    காந்தாரா  

    இது தொடர்பான வழக்கில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி ஆகியோருக்கு கேரள உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது. அத்துடன் வராகரூபம் பாடல் இடம்பெறாமல் படத்தை திரையிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைக்கு இடைக்கால தடை விதித்தது.

    இந்நிலையில் காந்தாரா படத்தின் கேரளா விநியோக உரிமையை பெற்றிருந்த பிருத்விராஜ் சுகுமாரன் மீது தொடரப்பட்ட பதிப்புரிமை மீறல் தொடர்பான வழக்குக்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான்கான்.
    • இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

    பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இந்தியில் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வரவே துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.


    சல்மான்கான் - ஜானி மாஸ்டர்

    இதையடுத்து சல்மான் கானை தற்காத்து கொள்ள அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சல்மானுடன் ஜானி மாஸ்டர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ஜானி மாஸ்டர் சமீபத்தில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் பணிப்புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×