ட்ரெண்டாகும் பூஜா ஹெக்டே பகிர்ந்த அரபிக்குத்து வீடியோ

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்.இப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து உலக அளவில் ஹிட் அடித்தது.
அரபிக்குத்து - பீஸ்ட்
அரபிக்குத்து - பீஸ்ட்
Published on

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.

அரபிக்குத்து - பீஸ்ட்

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களைக்கு மேல் கடந்துள்ளது. இதையடுத்து இப்பாடல் வெளியாகி ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்து படக்குழு வீடியோ ஒன்றி வெளியிட்டது.

அரபிக்குத்து - பீஸ்ட்

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே அரப்பிக்குத்து பாடலின் புதிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com