என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படக்குழு இப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டது. மேலும், இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹாரமூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவரிடம் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது ரசிகர்கள் செல்பி எடுக்க ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- விசாரணை விபரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்வி ராஜ், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதா? என்ற தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது வெளியிட வில்லை.
இந்த நிலையில் நேற்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சென்றனர். கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், மோகன்லாலிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணை விபரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
வருமான வரித்துறை அதிகாரிகள் கேரளாவில் ஏற்கனவே சோதனை நடத்திய மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், நடிகர் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஆவார். மோகன்லால் நடித்த லூசிபர், திரிஷ்யம், புலி முருகன் போன்ற படங்களை இவர் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி இருப்பது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நடிகை மஞ்சு வாரியர் ‘துணிவு’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இவரின் சமூக வலைதளப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துணிவு
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பின் நடுவே நடிகை மஞ்சு வாரியர், அஜித்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது.

அஜித் -மஞ்சுவாரியர்
இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் புதிதாக பைக் ஒன்று வாங்கியுள்ளார். இவர் நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "தைரியத்திற்கான ஒரு சிறிய படி எப்போதும் சிறந்தது. ஒரு நல்ல ரைடர் ஆகுவதற்கு முன்பு நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் சாலையில் நான் தடுமாறுவதை நீங்கள் கண்டால் தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள். என்னை போன்றோருக்கு ஊக்கமளிப்பதற்கு நன்றி அஜித் சார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
A tiny step of courage is always a good place ❤️
— Manju Warrier (@ManjuWarrier4) February 17, 2023
P.S : Got to go a looooong way before I become a good rider, so if you see me fumbling on the roads, please be patient with me ??
Thank you for being an inspiration to many like me #AK #AjithKumar
sir ❤️?#bmw #gs1250 #bmwkochi pic.twitter.com/XoiB9vZUVO
- இந்தி திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுவரா பாஸ்கர்.
- இவர் தனது நண்பரும் அரசியல்வாதியுமான பகத் அகமதுவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.
இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுவரா பாஸ்கர். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ராஞ்சனா', மாதவன் நடிப்பில் 'தனு வெட்ஸ் மனு' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி நீதிமன்ற வழக்குகளை சந்தித்துள்ளார்.

சுவரா பாஸ்கர் -பகத் அகமத்
இந்நிலையில், சுவரா பாஸ்கர் தனது நண்பரும் அரசியல்வாதியுமான பகத் அகமதுவை திடீர் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ரகசியமாக நடந்துள்ள இந்த திருமணத்தை சுவரா பாஸ்கர் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். பகத் அகமதுவுடன் ஏற்பட்ட அறிமுகத்தில் இருந்து திருமணமானதுவரை உள்ள பயணத்தை சிறிய வீடியோ மூலம் பகிர்ந்து இருக்கிறார்.

சுவரா பாஸ்கர் -பகத் அகமத்
முதலில் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பிறகு அது காதலில் முடிந்தது. இந்தப்பயணத்தில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம். என் இதயத்துக்குள் பகத்தை வரவேற்கிறேன் என்ற பதிவையும் வெளியிட்டு உள்ளார். பகத் அகமது சமாஜ்வாடி கட்சியில் முக்கிய பிரமுகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘மாவீரன்’.
- இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

மாவீரன்
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் நேற்று வெளியானது. கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ஒரே நாளில் 3மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
3M Real Time Views for #SceneAhSceneAh ???#Maaveeran #HBDPrinceSK
— Shanthi Talkies (@ShanthiTalkies) February 17, 2023
▶️ https://t.co/vW1YjJBehO
A @bharathsankar12 Musical!?
?️ @anirudhofficial
? @shobimaster
✍? #Kabilan & @CMLOKESH @Siva_Kartikeyan @madonneashwin @AditiShankarofl pic.twitter.com/5245TLilBc
- பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘தங்கலான்’.
- இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கலான்
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. இந்நிலையில், நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
Back to the future. #Thangalaan pic.twitter.com/wKUBlWZd0c
— Vikram (@chiyaan) February 17, 2023
- தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா.
- இவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவி வந்தது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

அனுஷ்கா
தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அனுஷ்காவிற்கு அரிய வகை நோய் உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது, இவருக்கு அரிதான சிரிக்கும் நோய் உள்ளது என்றும் இவர் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பார் என்றும் அனுஷ்கா பேட்டியில் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
- இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாவீரன்’.
- இப்படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

மாவீரன்
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் இன்று மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

மாவீரன்
கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘வாரிசு’.
- இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை வசூல் செய்துள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு
பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வாரிசு போஸ்டர்
இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Get ready to experience this captivating story laced with emotional turmoil!#VarisuOnPrime, Feb 22 only on @PrimeVideoIN in Tamil, Telugu and Malayalam.#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #Varisu #Vaarasudu #Vamshajan pic.twitter.com/Rry3P3KJYY
— Sri Venkateswara Creations (@SVC_official) February 17, 2023
- ஹாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் புரூஸ் வில்லிஸ்.
- இவர் உடல் நலக்குறைவு காரணமாக சினிமாவை விட்டு விலகினார்.
ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புரூஸ் வில்லிஸ்(வயது66). இவரது நடிப்பில் வெளியான டைஹார்ட் சீரியஸ் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இவர் தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் புரூஸ் வில்லிஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு சினிமாவை விட்டு விலகினார். இந்த நிலையில் புரூஸ் வில்லிஸ் மூளை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

புரூஸ் வில்லிஸ்
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறியதாவது, புரூஸ் வில்லிஸ் மூளை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் பாதித்தவர்களின் மூளை செல்களில் பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தும். செயல் திறனில் குறைபாடும், பேச்சில், எழுத்தில் மற்றும் புரிந்து கொள்வதிலும் தடுமாற்றம் ஏற்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்
- எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி வரும் திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.
- இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி வரும் சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது.

சொப்பன சுந்தரி
டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சொப்பன சுந்தரி' படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Audio soon #SoppanaSundari @Hamsinient @ahimsafilms @HueboxStudios pic.twitter.com/uIovM0rQmY
— aishwarya rajesh (@aishu_dil) February 16, 2023
- எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.
- இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது.
நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.

சமூக வலைதளத்தில் பரவும் அஜித் வீடியோ
இதைத்தொடர்ந்து, 'துணிவு' படப்பிடிப்பிற்கு நடுவே இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது.
இந்நிலையில், 'துணிவு' படத்துக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் அஜித் உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஸ்காட்லாந்தில் கார் ஓட்டிச்செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.






